திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை என ஆளுடையபிள்ளையார் அருளியமையுங் காண்க. இறைவன் செந்தழல் போலும் திருமேனியனாதலின் 'செந்தழல் போல்வாய்' என்றார். "செந்தழல் புரை திருமேனி" (திருப்பள்ளி. 8 செந்தழல் போல் திரு மேனித் தேவர்பிரான்'' (குயில். 10) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. 1026 'அந்தமில் அமுதே' என்பதில் அமிர்தம் என்னும் வட மொழிப் பொருளை அந்தம் இல் என விரித்து அச்சொல்லின் தாற்பரியப் பொரு ளாகிய நித்தியன் என்பதை அமுதே என்பதால் குறித்தார். அரும் பெரும் பொருள் - அரிய பெரிய பொருள். "என் அரும் பொருளே " (நீத். 16) என அடிகளும், "அரிய பெரும் பொருளாகி நின்றான் றன்னை" (தே. 297-9) என அப்பரடிகளும் அருளியமை காண்க. அடியேனை உய ஆண்டாய் - அடியேனைப் பிறவித் துன்பத்தினின்றும் ஆட்கொண்டவனே. பிழைக்க "உய்ய ஆட்கொண்டருளி" (பொன்னூசல். 5) சிந்தனை செய்து அடியோங்கள் உய்ய .. ஆண்டு கொண்ட இயல்பறிவார்'' (வார்த்தை 4) என்பனவும், 'உளமாம் வகை நம்மையுய்ய வந்தாண்டு" என்பதும் (கோவை 22), "உளமா யும் இலமாயும் மாறிவாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான் வந்து நம்மையாண்டு" என்னும் அப்பகுதியுரையும் ஈண்டு அறியற்பாலன. இதன் கண் "வருகவென்றருள் புரியாயே" என்பதனால் முத்தி உபாயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 8 Chat adun பாவநா சாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலே கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. ப-ரை. பாவ நாசா - தீவினையை அழிப்பவனே, உன் பாதமே அல்லால் நான் மற்று பற்று இலேன் - உன் திருவடிப்பற்றேயன்றி நான் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன்; தேவர்தம் தேவே தேவர்களுக்கும் தேவனாகவுள்ளவனே, சிவபுரத்து அரசே -சிவபுரத் துக்கு வேந்தனே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, மூ உலகு உருவ- மூன்று உலகங்களையும் ஊடுருவும்படி, இருவர் கீழ் மேலாய் - திருமால்
திருவாசக ஆராய்ச்சியுரை என ஆளுடையபிள்ளையார் அருளியமையுங் காண்க . இறைவன் செந்தழல் போலும் திருமேனியனாதலின் ' செந்தழல் போல்வாய் ' என்றார் . செந்தழல் புரை திருமேனி ( திருப்பள்ளி . 8 செந்தழல் போல் திரு மேனித் தேவர்பிரான் ' ' ( குயில் . 10 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . 1026 ' அந்தமில் அமுதே ' என்பதில் அமிர்தம் என்னும் வட மொழிப் பொருளை அந்தம் இல் என விரித்து அச்சொல்லின் தாற்பரியப் பொரு ளாகிய நித்தியன் என்பதை அமுதே என்பதால் குறித்தார் . அரும் பெரும் பொருள் - அரிய பெரிய பொருள் . என் அரும் பொருளே ( நீத் . 16 ) என அடிகளும் அரிய பெரும் பொருளாகி நின்றான் றன்னை ( தே . 297-9 ) என அப்பரடிகளும் அருளியமை காண்க . அடியேனை உய ஆண்டாய் - அடியேனைப் பிறவித் துன்பத்தினின்றும் ஆட்கொண்டவனே . பிழைக்க உய்ய ஆட்கொண்டருளி ( பொன்னூசல் . 5 ) சிந்தனை செய்து அடியோங்கள் உய்ய .. ஆண்டு கொண்ட இயல்பறிவார் ' ' ( வார்த்தை 4 ) என்பனவும் ' உளமாம் வகை நம்மையுய்ய வந்தாண்டு என்பதும் ( கோவை 22 ) உளமா யும் இலமாயும் மாறிவாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான் வந்து நம்மையாண்டு என்னும் அப்பகுதியுரையும் ஈண்டு அறியற்பாலன . இதன் கண் வருகவென்றருள் புரியாயே என்பதனால் முத்தி உபாயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 8 Chat adun பாவநா சாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலே கண்டாய் வருகவென் றருள்புரி யாயே . - ரை . பாவ நாசா - தீவினையை அழிப்பவனே உன் பாதமே அல்லால் நான் மற்று பற்று இலேன் - உன் திருவடிப்பற்றேயன்றி நான் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன் ; தேவர்தம் தேவே தேவர்களுக்கும் தேவனாகவுள்ளவனே சிவபுரத்து அரசே -சிவபுரத் துக்கு வேந்தனே திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே மூ உலகு உருவ மூன்று உலகங்களையும் ஊடுருவும்படி இருவர் கீழ் மேலாய் - திருமால்