திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ப்பானாம் 456 29. அருட்பத்து மகா மாயாசுத்தி திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது அடிகள் திருப்பெருந்துறையில் குருமூர்த்தியாக எழுந்தருளி ஆட் கொண்ட குருநாதனை நோக்கி, 'குறைவேண்டிய என் அழைப்பினை ஏற்று அருள் செய்யவேண்டும்' என்னும் கருத்து அமைந்த பத்துத் திருப்பாடல்களைக் கொண்ட ஒரு பதிகமாகும். இதன் உட்பொருள் மகாமாயா சுத்தி எனக் கூறப்பட்டுள்ளது. பெரிய மாயையினைச் சுத்தி செய்தல் என்பது அதன் பொருள். மாயை சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என முத்திறப்படும். இம்மூன்று வகையும் உலகத் தோற்றத்திற்கு ஏதுவாய் அமைந்தனவாதலின் அவற்றால் தாக்குண்ணாது இருத்தலை வேண்டுவது இத்திருப்பதிகக் கருத்தாகும். திருவாசகச் சிறப்புடையார்:- 'சோதியருட் சுடர்விளக்கே துவர்ப்பிறவி கூடல்விடுத் துன்றாள் சேர்தற் காதரித்திங் குனையழைத்தா லதெந்துவெனக்கே ளெனுஞ்சொ லருட் கடகம்: பத்தாகும்" எனக் கூறியிருக்கின்றமை இக்கருத்துக்குறுதுணையாகும். இது எழு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் சோதியே சுடரே சூழொளி விளக்கை சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாப் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிலைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே மென்றரு ளாயே. ப-ரை. சோதியே - ஒளி வடிவினனே, சுடரே - சோம சூரியாக் கினி என்னும் முச்சுடர்களாக உள்ளவனே, சூழ் ஒளி விளக்கே - உலகி னைச் சூழ்ந்துள்ள ஒளியையுடைய விளக்குகளாகிய நாண் மீன்களான வனே, சுரி குழல் பணை முலை மடந்தை பாதியே - கடை குழன்ற கூந் தலினையும் பெருமையையுடைத்தாகிய தனங்களையுமுடைய உமை யம்மையை இடப்பாதியிற் கொண்டவனே, பரனே - மேலோனே, பால் கொள் வெண் நீற்றாய் - பாலினது நிறத்தைக் கொண்ட திரு
ப்பானாம் 456 29. அருட்பத்து மகா மாயாசுத்தி திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது அடிகள் திருப்பெருந்துறையில் குருமூர்த்தியாக எழுந்தருளி ஆட் கொண்ட குருநாதனை நோக்கி ' குறைவேண்டிய என் அழைப்பினை ஏற்று அருள் செய்யவேண்டும் ' என்னும் கருத்து அமைந்த பத்துத் திருப்பாடல்களைக் கொண்ட ஒரு பதிகமாகும் . இதன் உட்பொருள் மகாமாயா சுத்தி எனக் கூறப்பட்டுள்ளது . பெரிய மாயையினைச் சுத்தி செய்தல் என்பது அதன் பொருள் . மாயை சுத்த மாயை அசுத்த மாயை பிரகிருதி மாயை என முத்திறப்படும் . இம்மூன்று வகையும் உலகத் தோற்றத்திற்கு ஏதுவாய் அமைந்தனவாதலின் அவற்றால் தாக்குண்ணாது இருத்தலை வேண்டுவது இத்திருப்பதிகக் கருத்தாகும் . திருவாசகச் சிறப்புடையார் : ' சோதியருட் சுடர்விளக்கே துவர்ப்பிறவி கூடல்விடுத் துன்றாள் சேர்தற் காதரித்திங் குனையழைத்தா லதெந்துவெனக்கே ளெனுஞ்சொ லருட் கடகம் : பத்தாகும் எனக் கூறியிருக்கின்றமை இக்கருத்துக்குறுதுணையாகும் . இது எழு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் . எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் சோதியே சுடரே சூழொளி விளக்கை சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாப் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிலைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே மென்றரு ளாயே . - ரை . சோதியே - ஒளி வடிவினனே சுடரே - சோம சூரியாக் கினி என்னும் முச்சுடர்களாக உள்ளவனே சூழ் ஒளி விளக்கே - உலகி னைச் சூழ்ந்துள்ள ஒளியையுடைய விளக்குகளாகிய நாண் மீன்களான வனே சுரி குழல் பணை முலை மடந்தை பாதியே - கடை குழன்ற கூந் தலினையும் பெருமையையுடைத்தாகிய தனங்களையுமுடைய உமை யம்மையை இடப்பாதியிற் கொண்டவனே பரனே - மேலோனே பால் கொள் வெண் நீற்றாய் - பாலினது நிறத்தைக் கொண்ட திரு