திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பரன் - மேலோன். பால் கொள் வெண்ணீற்றாய்-பாலினது நிறத்தைக் கொண்ட வெண்ணீற்றை அணிந்தவன். 'பாற்றிரு நீற் றெம் பரமனை" (எண். 6) ''பாலொத்த நீற்றம்பலவன்" (கோவை 238) 'பால் வெண்ணீற்றன்" (சுந். 22-7) என வருவனவற்றாலுங் காண்க. அயனும் என்பதிலுள்ள உம்மையை மால் என்பதனோடுங் கூட்டுக. அறியா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 1032 நீதி - பொய்தீரொழுக்க நெறி. "பொறிவாயிலைந் தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி” (குறள் 6) என்பதும் அறிக. இனி இவ் வுலகங்களை இனிதாகச் செலுத்துகின்ற முறைமையையுடையானாத லின் இறைவனை நீதியே என்றார். ''அவையினி துய்க்கும் நீதிய னெவன் பதி' (ஞானாமிர்தம் 58 = 6 - 7) என்பதும் ''இவ்வுலகங்களை இனிதா கச் செலுத்துகின்ற முறைமையையுடையான் யாவன்? அவன் பதியா கும்" என்னும் அப்பகுதிப் பழையவுரையும் ஈண்டறியற்பாலன. சீர் - குருவாயிருந்து ஞானோபதேசம் செய்த சிறப்பினை உணர்த்தியது. ஆதி- முதல்வன்; உலகுக்கு முன்னுள்ளவன் என்பது கருத்து. ஆதரித்தல் - விரும்புதல். அதற்குச் செயப்படுபொருள் உலக வாதனையை நீக்குதலும் திருவடி நீழலை அடைய விரும்புதலும் என வருவித்துரைக்கப்பட்டது. அதெந்து ஒரு திசைச் சொல். கன்னட மொழியில் அஞ்சற்க எனப் பொருள்படுவதொரு திசைச் சொல். இனி, அதனை அது எந்து எனப் பிரித்து அது என்ன எனப் பொருள் படும் மலையாளச் சொல்லாகக் கொள்ளுதலுமுண்டு. இதன் கண் "ஆதரித்தழைத்தால் அதெந்துவே யென்றருளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படு தல் காண்க. 1 457 நிருத்தனே நிமலா நிற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே யுன்னை யோலமிட்டலறி உலகெலாந் தேடியுங் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே. ப-ரை. றிருத்தனே - கூத்தப்பிரானே, நிமலா -மலமற்ற தூயோனே, நீற்றனே - திருவெண்ணீற்றையுடையவனே, நெற்றிக் கண்ணனே - நெற்றியில் கண்ணையுடையானே. விண்ணுளோர் பிரானே - தேவர் தலைவனே, ஒருத்தனே -ஒப்பற்றவனே, ஓலமிட்டு
திருவாசக ஆராய்ச்சியுரை பரன் - மேலோன் . பால் கொள் வெண்ணீற்றாய் - பாலினது நிறத்தைக் கொண்ட வெண்ணீற்றை அணிந்தவன் . ' பாற்றிரு நீற் றெம் பரமனை ( எண் . 6 ) ' ' பாலொத்த நீற்றம்பலவன் ( கோவை 238 ) ' பால் வெண்ணீற்றன் ( சுந் . 22-7 ) என வருவனவற்றாலுங் காண்க . அயனும் என்பதிலுள்ள உம்மையை மால் என்பதனோடுங் கூட்டுக . அறியா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 1032 நீதி - பொய்தீரொழுக்க நெறி . பொறிவாயிலைந் தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி ( குறள் 6 ) என்பதும் அறிக . இனி இவ் வுலகங்களை இனிதாகச் செலுத்துகின்ற முறைமையையுடையானாத லின் இறைவனை நீதியே என்றார் . ' ' அவையினி துய்க்கும் நீதிய னெவன் பதி ' ( ஞானாமிர்தம் 58 = 6 - 7 ) என்பதும் ' ' இவ்வுலகங்களை இனிதா கச் செலுத்துகின்ற முறைமையையுடையான் யாவன் ? அவன் பதியா கும் என்னும் அப்பகுதிப் பழையவுரையும் ஈண்டறியற்பாலன . சீர் - குருவாயிருந்து ஞானோபதேசம் செய்த சிறப்பினை உணர்த்தியது . ஆதி- முதல்வன் ; உலகுக்கு முன்னுள்ளவன் என்பது கருத்து . ஆதரித்தல் - விரும்புதல் . அதற்குச் செயப்படுபொருள் உலக வாதனையை நீக்குதலும் திருவடி நீழலை அடைய விரும்புதலும் என வருவித்துரைக்கப்பட்டது . அதெந்து ஒரு திசைச் சொல் . கன்னட மொழியில் அஞ்சற்க எனப் பொருள்படுவதொரு திசைச் சொல் . இனி அதனை அது எந்து எனப் பிரித்து அது என்ன எனப் பொருள் படும் மலையாளச் சொல்லாகக் கொள்ளுதலுமுண்டு . இதன் கண் ஆதரித்தழைத்தால் அதெந்துவே யென்றருளாயே என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படு தல் காண்க . 1 457 நிருத்தனே நிமலா நிற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே யுன்னை யோலமிட்டலறி உலகெலாந் தேடியுங் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே . - ரை . றிருத்தனே - கூத்தப்பிரானே நிமலா -மலமற்ற தூயோனே நீற்றனே - திருவெண்ணீற்றையுடையவனே நெற்றிக் கண்ணனே - நெற்றியில் கண்ணையுடையானே . விண்ணுளோர் பிரானே - தேவர் தலைவனே ஒருத்தனே -ஒப்பற்றவனே ஓலமிட்டு