திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அருட்பத்து அலறி உன்னை உலகு எல்லாம் தேடியும் காணேன் அடைக்கலம் வேண்டிப் பேரொலியாய் அழைத்து உன்னை உலகம் முழுவதும் தேடி யும் காணப்பெற்றிலேன், திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறை யில் - புண்ணிய நீர் இடையறாது நிற்கும் பொய்கையையுடைய திருப் பெருந்துறையின் கண், செழுமலர் குருந்தம் மேவிய சீர் அருத்தனே- செழுமையாகிய மலர்களையுடைய குருந்தமர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய மெய்ப்பொருளானவனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலகவாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால், அதெந்து என்று அருளாய் -நீ அஞ்சற்க என்று அருள் செய்வாயாக. - 1033 நிருத்தனே, நிமலா, நீற்றனே, நெற்றிக் கண்ணனே, விண்ணு ளோர் பிரானே, ஒருத்தனே, ஓலமிட்டலறி உன்னை உலக முழுவதும் தேடியும் காணப்பெற்றிலேன்; திருப்பெருந்துறையின் கண் குருந்தமர நீழலில் அமர்ந்த அருத்தனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்து என்று அருள் செய்வாயாக என்பதாம். 20. இறைவன் பஞ்சகிருத்திய நடனத்தினை என்றுமுடையானாகலின் 'நிருத்தனே' என்றார். நிமலன் - இயல்பாகவே பாசங்களினீங்கின வன். இறைவன் நீற்றை அணிந்தது பாலுன் குழவி பசுங்குடர் பொறா தென நோயுண் மருந்து தாயுண்டமை போலாகும். "நீற்றினை யணிந்ததுவெ னின்னிறைவ னென்றே, சாற்றினை யுயிர்க் கிடர் தணிக்கவென வெண்ணாய்" (புத்தரை வாதில். திருவாதவூர். 76) என் பதனாலுமறிக. இறைவன் நீறணிந்ததனைப் 'பஸ்மோத்தூளித சர் வாங்கம்' என்று வேதம் துதிக்கும். (பெரிய புராணம் - பக்கம் 1466) இறைவி ஓர் விளையாட்டாக இறைவன் கண்களிரண்டையும் தமது அகங்கையாற் பொத்துதலும் உலகம் இருண்டதாக, அதனை நீக்கும் பொருட்டு இறைவன் நெற்றியிற் கண்ணைத் தோற்றுவித்தனன் என் பது, "நெற்றிக் கண்ணனே" என்பதன் வரல ம். நுதல் விழி நாட்டத்திறையோன் என்பதற்கு 'இறைவி கண் புதைத்த பொழுது நெற்றியிற் புறப்படவிட்ட கண்ணையுடைய இறைவன்' என அடி யார்க்கு நல்லாரும், நுதல் விழி நாட்டத்து என்பதற்கு 'நுதலிலே விழித்த நாட்டத்தையுடைய' என அரும்பதவுரைகாரரும் உரைத்த உரைப் பகுதிகள் (சிலப். 14-7) ஈண்டு அறியற்பால. "நவமலி மங்கை நங்கை விளையாடி யோடி நயனத் தலங்கள் கரமா உலகினையேழு முற்றும் இருள்மூடமூட இருளோட நெற்றியொருகண் அலர்தர" என்பதனால் நெற்றிக்கண் தோன்றிய வரலாறு அறிக. "நெற்றி மேலொற்றைக் கண்ணுடையாய் போற்றி' நாவு. 245-3
அருட்பத்து அலறி உன்னை உலகு எல்லாம் தேடியும் காணேன் அடைக்கலம் வேண்டிப் பேரொலியாய் அழைத்து உன்னை உலகம் முழுவதும் தேடி யும் காணப்பெற்றிலேன் திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறை யில் - புண்ணிய நீர் இடையறாது நிற்கும் பொய்கையையுடைய திருப் பெருந்துறையின் கண் செழுமலர் குருந்தம் மேவிய சீர் அருத்தனே செழுமையாகிய மலர்களையுடைய குருந்தமர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய மெய்ப்பொருளானவனே அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலகவாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால் அதெந்து என்று அருளாய் -நீ அஞ்சற்க என்று அருள் செய்வாயாக . - 1033 நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணு ளோர் பிரானே ஒருத்தனே ஓலமிட்டலறி உன்னை உலக முழுவதும் தேடியும் காணப்பெற்றிலேன் ; திருப்பெருந்துறையின் கண் குருந்தமர நீழலில் அமர்ந்த அருத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்து என்று அருள் செய்வாயாக என்பதாம் . 20 . இறைவன் பஞ்சகிருத்திய நடனத்தினை என்றுமுடையானாகலின் ' நிருத்தனே ' என்றார் . நிமலன் - இயல்பாகவே பாசங்களினீங்கின வன் . இறைவன் நீற்றை அணிந்தது பாலுன் குழவி பசுங்குடர் பொறா தென நோயுண் மருந்து தாயுண்டமை போலாகும் . நீற்றினை யணிந்ததுவெ னின்னிறைவ னென்றே சாற்றினை யுயிர்க் கிடர் தணிக்கவென வெண்ணாய் ( புத்தரை வாதில் . திருவாதவூர் . 76 ) என் பதனாலுமறிக . இறைவன் நீறணிந்ததனைப் ' பஸ்மோத்தூளித சர் வாங்கம் ' என்று வேதம் துதிக்கும் . ( பெரிய புராணம் - பக்கம் 1466 ) இறைவி ஓர் விளையாட்டாக இறைவன் கண்களிரண்டையும் தமது அகங்கையாற் பொத்துதலும் உலகம் இருண்டதாக அதனை நீக்கும் பொருட்டு இறைவன் நெற்றியிற் கண்ணைத் தோற்றுவித்தனன் என் பது நெற்றிக் கண்ணனே என்பதன் வரல ம் . நுதல் விழி நாட்டத்திறையோன் என்பதற்கு ' இறைவி கண் புதைத்த பொழுது நெற்றியிற் புறப்படவிட்ட கண்ணையுடைய இறைவன் ' என அடி யார்க்கு நல்லாரும் நுதல் விழி நாட்டத்து என்பதற்கு ' நுதலிலே விழித்த நாட்டத்தையுடைய ' என அரும்பதவுரைகாரரும் உரைத்த உரைப் பகுதிகள் ( சிலப் . 14-7 ) ஈண்டு அறியற்பால . நவமலி மங்கை நங்கை விளையாடி யோடி நயனத் தலங்கள் கரமா உலகினையேழு முற்றும் இருள்மூடமூட இருளோட நெற்றியொருகண் அலர்தர என்பதனால் நெற்றிக்கண் தோன்றிய வரலாறு அறிக . நெற்றி மேலொற்றைக் கண்ணுடையாய் போற்றி ' நாவு . 245-3