திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அருட்பத்து 1037 படாய் என்ன - எங்களுக்கு வெளிப்பட்டருள் செய்ய வேண்டும் என்று வேண்டுதல் செய்ய, வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் - பெரிய அழ லிலிருந்து வெளிப்பட்ட எந்தையே, திமில நான் மறை சேர் திருப் பெருந்துறையில் - பேரொலி வடிவான நான்கு வேதங்களும் பயில் கின்ற திருப்பெருந்துறையின் கண், செழுமலர் குருந்தம் மேவிய சீர் அமலனே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்தமர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய குற்றமற்ற வனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத் தால், அதெந்து என்று அருளாய் - நீ அஞ்சற்க என்று அருள் செய்வா யாக. பிரமனும் திருமாலும் அடைதற்கரிய விமலனே, எமக்கு நீ வெளிப்பட்டருள் செய்ய வேண்டும் என்று வேண்டுதல் செய்ய, வியன் தழலிலிருந்து வெளிப்பட்ட எந்தையே, திருப்பெருந்துறையில் குருந்த மேவிய சீர் அமலனே, அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்று அருள் செய்வாயாக என்பதாம். கண்ணன் - கிருஷ்ணன் என்னும் வடமொழித் திரிபு. கிருஷ்ணன் என்பதற்குக் கருநிறமுடையவன் என்பது பொருள். கார்முகில் நிறத்து என்பதனால் கருநிறமுடையான் என்பது பெறப்படுதலின் கண் ணன் என்பது வாளாபெயர் மாத்திரையாய் நின்றது. "கருங்கண் ணனை அறியாமை நின்றோன்'' (திருக்கோவை 53) என்புழிப்போல. கண்ணன் என்பது கரியோன் என்னும் பொருளதோர் * பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றது. எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் என்றது அடி முடி தேடிக் காணாது இளைத்த திருமாலும் பிரமனும் தம் செருக் கொழிந்து எமக்கு வெளிப்பட்டருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்ள பெரிய அக்கினிப் பிழம்பு வடிவத்தினின்றும் லிங்கோற்பவ ராக வெளிப்பட்டருள் செய்த எந்தையே என்றவாறு. தழலினின்றும் வெளிப்பட்ட என ஐந்தனுருபு விரிக்க திமில நான்மறை - ஒலிவடிவா யுள்ள நான்கு வேதங்கள். நான்கு வேதங்களும் எழுதாக் கேள்வி என் னும் பெயருடைமையும் இதனை வலியுறுத்தும். 4 இதன்கண், 'அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்று அருளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி வெளிப்படும். *பாகதம் -பிராகிருதம்
அருட்பத்து 1037 படாய் என்ன - எங்களுக்கு வெளிப்பட்டருள் செய்ய வேண்டும் என்று வேண்டுதல் செய்ய வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் - பெரிய அழ லிலிருந்து வெளிப்பட்ட எந்தையே திமில நான் மறை சேர் திருப் பெருந்துறையில் - பேரொலி வடிவான நான்கு வேதங்களும் பயில் கின்ற திருப்பெருந்துறையின் கண் செழுமலர் குருந்தம் மேவிய சீர் அமலனே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்தமர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய குற்றமற்ற வனே அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத் தால் அதெந்து என்று அருளாய் - நீ அஞ்சற்க என்று அருள் செய்வா யாக . பிரமனும் திருமாலும் அடைதற்கரிய விமலனே எமக்கு நீ வெளிப்பட்டருள் செய்ய வேண்டும் என்று வேண்டுதல் செய்ய வியன் தழலிலிருந்து வெளிப்பட்ட எந்தையே திருப்பெருந்துறையில் குருந்த மேவிய சீர் அமலனே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்று அருள் செய்வாயாக என்பதாம் . கண்ணன் - கிருஷ்ணன் என்னும் வடமொழித் திரிபு . கிருஷ்ணன் என்பதற்குக் கருநிறமுடையவன் என்பது பொருள் . கார்முகில் நிறத்து என்பதனால் கருநிறமுடையான் என்பது பெறப்படுதலின் கண் ணன் என்பது வாளாபெயர் மாத்திரையாய் நின்றது . கருங்கண் ணனை அறியாமை நின்றோன் ' ' ( திருக்கோவை 53 ) என்புழிப்போல . கண்ணன் என்பது கரியோன் என்னும் பொருளதோர் * பாகதச் சிதைவு . அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றது . எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் என்றது அடி முடி தேடிக் காணாது இளைத்த திருமாலும் பிரமனும் தம் செருக் கொழிந்து எமக்கு வெளிப்பட்டருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்ள பெரிய அக்கினிப் பிழம்பு வடிவத்தினின்றும் லிங்கோற்பவ ராக வெளிப்பட்டருள் செய்த எந்தையே என்றவாறு . தழலினின்றும் வெளிப்பட்ட என ஐந்தனுருபு விரிக்க திமில நான்மறை - ஒலிவடிவா யுள்ள நான்கு வேதங்கள் . நான்கு வேதங்களும் எழுதாக் கேள்வி என் னும் பெயருடைமையும் இதனை வலியுறுத்தும் . 4 இதன்கண் ' அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்று அருளாயே என்பதனால் மகாமாயாசுத்தி வெளிப்படும் . * பாகதம் -பிராகிருதம்