திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1044 திருவாசக ஆராய்ச்சியுரை போகத்தையும் அருள் செய்பவன். மொட்டறா மலர் - அரும்பின் தன்மை முழுவது நீங்காத அலருஞ் செவ்விமலர். மலர் பறித்திறைஞ்சி நினைந்து பரவுவார் என்பதனால் திரிகரண வழிபாடும் புலப்படும். பர கதி- மேலான வீட்டுநெறி. சித்தன் - சித்தாக உள்ளவன். சித்து - ஞானம். இதன்கண் "அடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே" என்பதனால் மகாமாய சுத்தி புலனாதல் காண்க. 464. மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே புனிதா பொங்குவா ளரவம் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருளனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே. 8 ப-ரை. மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி - மயக்கத் தினையுடைய எனது உள்ளத்தினை அம்மயக்கம் நீங்கும்படி நயன தீட்சை செய்து, மறுமைபோடு இம்மையும் கெடுத்த பொருளனே- மறுமைப்பயனும் இம்மைப்பயனும் என்னும் இரண்டின் சார்புகளை நீக்கிய மெய்ப்பொருளாயுள்ளவனே, புனிதா-பரிசுத்தனே, பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செஞ்சடையாய் - வெகுளா நின்ற ஒளியையுடைய பாம்பும் கங்கையின் வெள்ளமும் தங்கிய சிவந்த சடையையுடையவனே, தெகுளு நான்மறை சேர் திருப்பெருந்துறை யில் - தெளிந்த அறிவைத் தரும் நான்கு வேதங்களின் ஒழுக்கம் அமைந்த திருப்பெருந்துறையின்கண், செழுமலர் குருந்த மேவிய சீர் அருளனே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய அருட்குரவனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால், அதெந்து என்று அருளாய் - அஞ்சற்க என்று அருள் செய்வாயாக. மருளனேன் மனத்தை மயக்கு நீக்கும்படி நயன தீட்சை செய்து மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே, புனிதா, அரவமும் கங்கையும் தங்கும் செஞ்சடையாய், நான்மறை சேர் திருப்பெருந் துறையில் குருந்த மேவிய சீர் அருளனே. அடியேன் ஆதரித்தழைத் தால் அஞ்சற்க என்று அருள் செய்வாயாக என்பதாம்.
1044 திருவாசக ஆராய்ச்சியுரை போகத்தையும் அருள் செய்பவன் . மொட்டறா மலர் - அரும்பின் தன்மை முழுவது நீங்காத அலருஞ் செவ்விமலர் . மலர் பறித்திறைஞ்சி நினைந்து பரவுவார் என்பதனால் திரிகரண வழிபாடும் புலப்படும் . பர கதி- மேலான வீட்டுநெறி . சித்தன் - சித்தாக உள்ளவன் . சித்து - ஞானம் . இதன்கண் அடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே என்பதனால் மகாமாய சுத்தி புலனாதல் காண்க . 464 . மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே புனிதா பொங்குவா ளரவம் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருளனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே . 8 - ரை . மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி - மயக்கத் தினையுடைய எனது உள்ளத்தினை அம்மயக்கம் நீங்கும்படி நயன தீட்சை செய்து மறுமைபோடு இம்மையும் கெடுத்த பொருளனே மறுமைப்பயனும் இம்மைப்பயனும் என்னும் இரண்டின் சார்புகளை நீக்கிய மெய்ப்பொருளாயுள்ளவனே புனிதா - பரிசுத்தனே பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செஞ்சடையாய் - வெகுளா நின்ற ஒளியையுடைய பாம்பும் கங்கையின் வெள்ளமும் தங்கிய சிவந்த சடையையுடையவனே தெகுளு நான்மறை சேர் திருப்பெருந்துறை யில் - தெளிந்த அறிவைத் தரும் நான்கு வேதங்களின் ஒழுக்கம் அமைந்த திருப்பெருந்துறையின்கண் செழுமலர் குருந்த மேவிய சீர் அருளனே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய அருட்குரவனே அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால் அதெந்து என்று அருளாய் - அஞ்சற்க என்று அருள் செய்வாயாக . மருளனேன் மனத்தை மயக்கு நீக்கும்படி நயன தீட்சை செய்து மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே புனிதா அரவமும் கங்கையும் தங்கும் செஞ்சடையாய் நான்மறை சேர் திருப்பெருந் துறையில் குருந்த மேவிய சீர் அருளனே . அடியேன் ஆதரித்தழைத் தால் அஞ்சற்க என்று அருள் செய்வாயாக என்பதாம் .