திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

இறைஅருட்பத்து 1045 மருள் - மயக்கம். "மருள்கூர் பிணைபோன் மயங்க" (கலி. 146-32) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மருள் என்றது பொருளல்ல வற்றைப் பொருளென்றுணரும் மருளே. அது பிறவிக்கு ஏதுவாதல் பசு "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” குறள் 351 என்பதனாலுமறிக. மயக்கற நோக்கி என்றது அம்மயக்கம் நீங்கும்படி பார்த்தலாகிய நயன தீட்சை செய்து என்றவாறு. பயன் கருதிய நல் வினைப் பயனால் இம்மை மறுமையின்பங்கள் உளவாகும். நல்வினைப் பயன் முடிந்த விடத்து அவையும் முடிவெய்துமாகலின் நித்தியமாகிய வீடு பேற்றின்பத்தை அருளும்பொருட்டு மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே என்றார். பொருள் - மெய்ப்பொருள். பொங்கு- சீறுதல். பொங்கு - வெகுளாநின்ற (கோவை 125). பொங்கு என்ப தனைக் கங்கையோடுங் கூட்டி, பெருக்கெடுத் தெழுந்த கங்கை நீர் என உரைப்பினும் அமையும். செஞ்சடை - மின் போன்ற சிவந்த சடை. ''மின்னெறி செஞ்சடைக் கூத்தப்பிரான்" கோவை 49 "எழின்பதிக்கீற், றொளிசென்ற செஞ்சடைக் கூத்தட்பிரான்” 440 கோவை 50 கோவை 125 கோவை 203 ஞான. 50.8 "நீருறு செஞ்சடையான்" "மின்னன்ன செஞ்சடையான்" ஞான.107-4 திருவீங்கோய். 8 "ஞாயிறு சூழ்ந், தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை'' பொன்வண்ணத். 26 "பொங்கரவம் புன்சடைமிடைந்த மீன்ைைனயான்" 'சங்கையஞ் செஞ்சடைக் கண்ணுதல் 3ண்ணல்" 'நீரொடுங்குஞ் செஞ்சடை'' என வருவனவற்றாலுமறிக. தெருளு என்ற அடையினால் நான்மறை என்றது நான்மறைகளின் முடிபாயுள்ள உபநிடதங்களைக் குறிக்கும். அருளன் - அருட்குரவன். இதன்கண் அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி புலனாதல் காண்க. Y 465 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை யெம்பிரா னென்றென் றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகட லதனுனே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி பிதுகாண் போதராய் என்றரு ளாயே.
இறைஅருட்பத்து 1045 மருள் - மயக்கம் . மருள்கூர் பிணைபோன் மயங்க ( கலி . 146-32 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . மருள் என்றது பொருளல்ல வற்றைப் பொருளென்றுணரும் மருளே . அது பிறவிக்கு ஏதுவாதல் பசு பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு குறள் 351 என்பதனாலுமறிக . மயக்கற நோக்கி என்றது அம்மயக்கம் நீங்கும்படி பார்த்தலாகிய நயன தீட்சை செய்து என்றவாறு . பயன் கருதிய நல் வினைப் பயனால் இம்மை மறுமையின்பங்கள் உளவாகும் . நல்வினைப் பயன் முடிந்த விடத்து அவையும் முடிவெய்துமாகலின் நித்தியமாகிய வீடு பேற்றின்பத்தை அருளும்பொருட்டு மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே என்றார் . பொருள் - மெய்ப்பொருள் . பொங்கு சீறுதல் . பொங்கு - வெகுளாநின்ற ( கோவை 125 ) . பொங்கு என்ப தனைக் கங்கையோடுங் கூட்டி பெருக்கெடுத் தெழுந்த கங்கை நீர் என உரைப்பினும் அமையும் . செஞ்சடை - மின் போன்ற சிவந்த சடை . ' ' மின்னெறி செஞ்சடைக் கூத்தப்பிரான் கோவை 49 எழின்பதிக்கீற் றொளிசென்ற செஞ்சடைக் கூத்தட்பிரான் 440 கோவை 50 கோவை 125 கோவை 203 ஞான . 50.8 நீருறு செஞ்சடையான் மின்னன்ன செஞ்சடையான் ஞான.107-4 திருவீங்கோய் . 8 ஞாயிறு சூழ்ந் தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை ' ' பொன்வண்ணத் . 26 பொங்கரவம் புன்சடைமிடைந்த மீன்ைைனயான் ' சங்கையஞ் செஞ்சடைக் கண்ணுதல் 3 ண்ணல் ' நீரொடுங்குஞ் செஞ்சடை ' ' என வருவனவற்றாலுமறிக . தெருளு என்ற அடையினால் நான்மறை என்றது நான்மறைகளின் முடிபாயுள்ள உபநிடதங்களைக் குறிக்கும் . அருளன் - அருட்குரவன் . இதன்கண் அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே என்பதனால் மகாமாயாசுத்தி புலனாதல் காண்க . Y 465 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை யெம்பிரா னென்றென் றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகட லதனுனே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி பிதுகாண் போதராய் என்றரு ளாயே .