திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பிட்டு நேர்பட - செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி இட்ட பிட்டே கூலியாக அமைய. மண் சுமந்தது மதுரையில் நிகழ்ந்த தொரு திருவிளையாடலாக அதனைப் பெருந்துறைப்பித்தனுக்கு ஏற்றிக் கூறியது மதுரைச் சோமசுந்தரக் கடவுளுக்கும் பெருந்துறைப் பித்த னுக்கும் பேதமின்மை பற்றியாகும். பெரும்பித்தன் என்றது அன் பர்க்கு இரங்கியருளும் அருட்பித்து உடையவன் என்றவாறு. அது செம்மனச் செல்வியின் பொருட்டுப் பிட்டு நேர்பட்டு மண் சுமந்தமை யாலும் வெளிப்படும். சட்டம் - விதி; ஒழுங்கு. அது வேதாகமங்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாகும். சட்ட நேர் பட வந்திலாமையின் சழக்கனேன் என அடிகள் தம்மைக் கூறியது யான் என்னும் செருக்கு நீக்கத்தின் பொருட்டேயாகும். சழக்கு - குற்றம். 1050 “இச்ச ழக்கினின் றேற்றுவா ரேறுதற் கிசைந்தார்” அமர்நீதி. 41 என்பதனாலுமறிக. சார்ந்திலேன் என்றது இடைவிடாது தியானித்தி லேன் என்றவாறு. வெம் கட்டனேன் - கொடிய துன்பமுடையேன். "கட்டனேன் பிறந்தேன்'" (சுந். 54 - 2) சிஷ்டன் கஷ்டன் என்னும் வடமொழிகள் சீட்டன் கட்டன் என நின்றன. இதன்கண் "கட்டனேனையும் ஆட்கொள்வான் வத்து காட்டினாய் கழுக்குன்றிலே" என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்டு. 2 468 மலங்கி னேன் கண்ணி னீரை மாற்றி மலங்கெ டூத்தபெ ருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேனினி மேல்வி ளைவத றிந்திலேன் இலங்கு கின்றநீன் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. ப-ரை. மலங்கினேன் கண்ணில் நீரை மாற்றி -பிறவித் துன்பத் தினால் மயக்கமடைந்தேனாகிய என்னுடைய கண்களில் பெருகும் நீரைத் துடைத்து, மலம் கெடுத்த பெருந்துறை விலங்கினேன் - மலக் கட்டினை நீக்கியருளிய பெருந்துறைப் பெருமானே நின்னை விட்டு நீங் கினேன், வினைக்கேடனேன் - நின்னை விட்டு நீங்காமைக் கேதுவாகிய வினையைச் செய்யாத யான், இனிமேல் விளைவது அறிந்திலேன் - இனி மேல் எனக்குண்டாகத் தக்கதனை அறியேன்; இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பு இடம் இன்றியே கலங்கினேன் - விளங்கு கின்ற நினது செவ்விய திருவடிகள் இரண்டினையும் வைத்து வழிபடு தற்குரிய தூய மனமின்மையால் மயக்கமடைந்தேன்; கலங்காமல்
திருவாசக ஆராய்ச்சியுரை பிட்டு நேர்பட - செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி இட்ட பிட்டே கூலியாக அமைய . மண் சுமந்தது மதுரையில் நிகழ்ந்த தொரு திருவிளையாடலாக அதனைப் பெருந்துறைப்பித்தனுக்கு ஏற்றிக் கூறியது மதுரைச் சோமசுந்தரக் கடவுளுக்கும் பெருந்துறைப் பித்த னுக்கும் பேதமின்மை பற்றியாகும் . பெரும்பித்தன் என்றது அன் பர்க்கு இரங்கியருளும் அருட்பித்து உடையவன் என்றவாறு . அது செம்மனச் செல்வியின் பொருட்டுப் பிட்டு நேர்பட்டு மண் சுமந்தமை யாலும் வெளிப்படும் . சட்டம் - விதி ; ஒழுங்கு . அது வேதாகமங்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாகும் . சட்ட நேர் பட வந்திலாமையின் சழக்கனேன் என அடிகள் தம்மைக் கூறியது யான் என்னும் செருக்கு நீக்கத்தின் பொருட்டேயாகும் . சழக்கு - குற்றம் . 1050 இச்ச ழக்கினின் றேற்றுவா ரேறுதற் கிசைந்தார் அமர்நீதி . 41 என்பதனாலுமறிக . சார்ந்திலேன் என்றது இடைவிடாது தியானித்தி லேன் என்றவாறு . வெம் கட்டனேன் - கொடிய துன்பமுடையேன் . கட்டனேன் பிறந்தேன் ' ( சுந் . 54 - 2 ) சிஷ்டன் கஷ்டன் என்னும் வடமொழிகள் சீட்டன் கட்டன் என நின்றன . இதன்கண் கட்டனேனையும் ஆட்கொள்வான் வத்து காட்டினாய் கழுக்குன்றிலே என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்டு . 2 468 மலங்கி னேன் கண்ணி னீரை மாற்றி மலங்கெ டூத்தபெ ருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேனினி மேல்வி ளைவத றிந்திலேன் இலங்கு கின்றநீன் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே . - ரை . மலங்கினேன் கண்ணில் நீரை மாற்றி -பிறவித் துன்பத் தினால் மயக்கமடைந்தேனாகிய என்னுடைய கண்களில் பெருகும் நீரைத் துடைத்து மலம் கெடுத்த பெருந்துறை விலங்கினேன் - மலக் கட்டினை நீக்கியருளிய பெருந்துறைப் பெருமானே நின்னை விட்டு நீங் கினேன் வினைக்கேடனேன் - நின்னை விட்டு நீங்காமைக் கேதுவாகிய வினையைச் செய்யாத யான் இனிமேல் விளைவது அறிந்திலேன் - இனி மேல் எனக்குண்டாகத் தக்கதனை அறியேன் ; இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பு இடம் இன்றியே கலங்கினேன் - விளங்கு கின்ற நினது செவ்விய திருவடிகள் இரண்டினையும் வைத்து வழிபடு தற்குரிய தூய மனமின்மையால் மயக்கமடைந்தேன் ; கலங்காமல்