திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கழுக்குன்றப்பதிகம் 1051 கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - அப்படி யான் மயங்காமல் தெளி வடையும்படி ஞானாசாரியத் திருவுருவத்தினை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை, இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன். மலங்கினேன் கண்களில் நீரை மாற்றி மலக்கட்டினை நீக்கியருளிய திருப்பெருந்துறைப் பெருமானே, நின்னை விட்டு நீங்கினேன்; வினைக் கேடனேன்; இனி மேல் விளைவது அறிந்திலேன்; நின் சேவடிகள் இரண் டினையும் வைத்து வழிபடுதற்குரிய தூய மனமின்மையால் கலங்கி னேன்; அப்படி யான் கலங்காமல் தெளிவடையும்படி ஞானாசாரியத் திருவுருவினை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை; இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன் என்பதாம். TO மலங்கினேன் - மயக்கமடைந்தேன். மலங்குவித்து என்பதற்கு மயங்குவித்து என நச்சினார்க்கினியார் உரைத்தமையும் காண்க. (சீவக. 2809 உரை ) கண்ணீரை மாற்றி என்றது துன்பத்தை நீக்கி என்றபடி. 'கண்ணீரை மாற்றி மலங்கெடுத்த' என்றதனால் பெருந்துறை என்றது பெருந்துறைப் பெருமானை உணர்த்தியது. 'மலங்கெடுத்து மாதீர்த் தம் ஆட்டிக் கொண்ட மறையவனை" (233-6) என அப்பரடிகள் அரு ளியமையும் காண்க. விலங்குதல் - விட்டு நீங்குதல். வினைக்கேடனேன் என்றது பெருமானை விட்டு நீங்காமைக் கேதுவாகிய நல்வினையில்லா தேன் என்றவாறு. தம்முடைய மனத்தைத் தூய்மையுடையதன்றென அடிகள் கருதி சேவடிகள் இரண்டும் கைப்பிடமின்றியே கலங்கி னேன்" என்றார். " இதன்கண் கேலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக் குன்றிலே" என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 3 469 பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாடொறும் போற்றவும் நாணொ ணாததொர் நாணமெய்தி நடுக்க டலுள முந்திநான் போெ ணாதபெ ருந்து றைப்பெருந் தோணி பற்றி புகைத்தலும் காணொ ணாத்திருக் கோலநீ வந்து காட்டி னாப்கழுக் குன்றிலே. ப-ரை. பூணொணாதது ஓர் அன்பு பூண்டு பொருந்தி நாள் தொறும் போற்றவும் - எனது தாழ்ந்த நிலையில் மேற்கொள்ளுதற்கு அரிதாகிய ஒப்பற்ற அன்பினை மேற்கொண்டு நின் திருவடித் திரு வுருவை அடைந்து தினந்தோறும் வழிபாடாற்றவும், நாணொணாத
திருக்கழுக்குன்றப்பதிகம் 1051 கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - அப்படி யான் மயங்காமல் தெளி வடையும்படி ஞானாசாரியத் திருவுருவத்தினை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன் . மலங்கினேன் கண்களில் நீரை மாற்றி மலக்கட்டினை நீக்கியருளிய திருப்பெருந்துறைப் பெருமானே நின்னை விட்டு நீங்கினேன் ; வினைக் கேடனேன் ; இனி மேல் விளைவது அறிந்திலேன் ; நின் சேவடிகள் இரண் டினையும் வைத்து வழிபடுதற்குரிய தூய மனமின்மையால் கலங்கி னேன் ; அப்படி யான் கலங்காமல் தெளிவடையும்படி ஞானாசாரியத் திருவுருவினை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை ; இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன் என்பதாம் . TO மலங்கினேன் - மயக்கமடைந்தேன் . மலங்குவித்து என்பதற்கு மயங்குவித்து என நச்சினார்க்கினியார் உரைத்தமையும் காண்க . ( சீவக . 2809 உரை ) கண்ணீரை மாற்றி என்றது துன்பத்தை நீக்கி என்றபடி . ' கண்ணீரை மாற்றி மலங்கெடுத்த ' என்றதனால் பெருந்துறை என்றது பெருந்துறைப் பெருமானை உணர்த்தியது . ' மலங்கெடுத்து மாதீர்த் தம் ஆட்டிக் கொண்ட மறையவனை ( 233-6 ) என அப்பரடிகள் அரு ளியமையும் காண்க . விலங்குதல் - விட்டு நீங்குதல் . வினைக்கேடனேன் என்றது பெருமானை விட்டு நீங்காமைக் கேதுவாகிய நல்வினையில்லா தேன் என்றவாறு . தம்முடைய மனத்தைத் தூய்மையுடையதன்றென அடிகள் கருதி சேவடிகள் இரண்டும் கைப்பிடமின்றியே கலங்கி னேன் என்றார் . இதன்கண் கேலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக் குன்றிலே என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 3 469 பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாடொறும் போற்றவும் நாணொ ணாததொர் நாணமெய்தி நடுக்க டலுள முந்திநான் போெ ணாதபெ ருந்து றைப்பெருந் தோணி பற்றி புகைத்தலும் காணொ ணாத்திருக் கோலநீ வந்து காட்டி னாப்கழுக் குன்றிலே . - ரை . பூணொணாதது ஓர் அன்பு பூண்டு பொருந்தி நாள் தொறும் போற்றவும் - எனது தாழ்ந்த நிலையில் மேற்கொள்ளுதற்கு அரிதாகிய ஒப்பற்ற அன்பினை மேற்கொண்டு நின் திருவடித் திரு வுருவை அடைந்து தினந்தோறும் வழிபாடாற்றவும் நாணொணாத