திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கழுக்குன்றப்பதிகம் 1053 ளுக்கு உண்டானது தம்முடன் சேர்ந்து இறைவன் திருவடிகளுக்கு வழி பாடாற்றிய மெய்யடியார்களும் தம்மை விட்டுப் பிரிந்தமையாலா கும். நடுக்கடலுள் அழுந்தி என்றது பிறவித் துன்பமாகிய கடல் நடு வுள் அழுந்தியென்றவாறு. "பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தினின் கழற்புணை கொண் டிழிகின்ற அன்பர்க ளேறினர் வான்யான் இடர்க்கடல் வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே." என அடிகள் பிறிதோரிடத்துங் கூறுதல் காண்க. பிறவித் துன்பமாகிய கடலைக் கடத்தற்கு அடிகள் மேற்கொண்ட சாதனம் பெருந்துறைப்பெருமானது பெரிய திருவடியாகிய தோணி யைப் பற்றியமையாகும். அடைக்.4 "துன்பக்கடலிடைத் தோணித்தொழில் பூண்ட தொண்டர்தம்மை இன்பக்கரை முகந்தேற்றுந் திறத்தன பு ஐயாறன் அடித்தலமே" நாவு. 92-6 "இடர்க்கடலுட் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேற் சுக்கரைக்கே யேறவாங்குந் தோணியை” 470 *** நாவு.259-4 "என்பிறவி கெட்டின் றழிகின்ற தாக்கிய தாளம்பலவன்" கோவை 76 என வருவன காண்க. உகைத்தல் - செலுத்துதல். "தோடு கைத் தெழு தரூஉத் துரந்தெறி ஞாட்பின்" (புற.295-3) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. இதன் கண் காணொணாத் திருக்கோலம் காட்டினாய் கழுக்குன் றிலே" என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேது மறிந்தி லாதவென் சிந்தை வைத்தசி காமணி ஞால மேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங் கால மேயுனை யோத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே.
திருக்கழுக்குன்றப்பதிகம் 1053 ளுக்கு உண்டானது தம்முடன் சேர்ந்து இறைவன் திருவடிகளுக்கு வழி பாடாற்றிய மெய்யடியார்களும் தம்மை விட்டுப் பிரிந்தமையாலா கும் . நடுக்கடலுள் அழுந்தி என்றது பிறவித் துன்பமாகிய கடல் நடு வுள் அழுந்தியென்றவாறு . பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தினின் கழற்புணை கொண் டிழிகின்ற அன்பர்க ளேறினர் வான்யான் இடர்க்கடல் வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே . என அடிகள் பிறிதோரிடத்துங் கூறுதல் காண்க . பிறவித் துன்பமாகிய கடலைக் கடத்தற்கு அடிகள் மேற்கொண்ட சாதனம் பெருந்துறைப்பெருமானது பெரிய திருவடியாகிய தோணி யைப் பற்றியமையாகும் . அடைக் .4 துன்பக்கடலிடைத் தோணித்தொழில் பூண்ட தொண்டர்தம்மை இன்பக்கரை முகந்தேற்றுந் திறத்தன பு ஐயாறன் அடித்தலமே நாவு . 92-6 இடர்க்கடலுட் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேற் சுக்கரைக்கே யேறவாங்குந் தோணியை 470 *** நாவு.259-4 என்பிறவி கெட்டின் றழிகின்ற தாக்கிய தாளம்பலவன் கோவை 76 என வருவன காண்க . உகைத்தல் - செலுத்துதல் . தோடு கைத் தெழு தரூஉத் துரந்தெறி ஞாட்பின் ( புற.295-3 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . இதன் கண் காணொணாத் திருக்கோலம் காட்டினாய் கழுக்குன் றிலே என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேது மறிந்தி லாதவென் சிந்தை வைத்தசி காமணி ஞால மேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங் கால மேயுனை யோத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே .