திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை. கோல மேனி வராகமே - பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்படி கொண்ட அழகிய திருமேனியையுடைய தாய்ப்பன்றி வடிவானவனே, பெருந்துறை குணமாம் கொண்டலே - திருப்பெருந் துறையில் வீற்றிருக்கின்ற நல்ல பண்புகளையுடைய அருண்மேகமே, சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி - நல் லொழுக்கம் சிறிதும் அறியாத எனது உள்ளத்தில் நின்னை வைத்த முடிமணி போன்றவனே, ஞாலமே கரியாக நான் உனை நச்சி நச்சிட - உலகினர் சாட்சியாக அடியேன் உன்னை மிகவும் விரும்ப, வந்திடும் காலமே - அவ்வளவில் குருவடிவாக அருள் செய்ய வலிய எழுந்தருளி வந்த காலதத்துவமானவனே, உனை ஓத - உன்னை நான் துதித்தலால், கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - நின் பரமாசாரியத் திருவுருவை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினாய் இதற்கு யான் செய் யும் கைம்மாறு அறியேன். 10 54 கோல மேனி வராகமே. பெருந்துறைக் கொண்டலே, நல் லொழுக்கம் ஏதும் அறியாத எனது உள்ளத்தில் நின்னை வைத்த சிகா மணியே, ஞாலமே சாட்சியாக அடியேன் உன்னை மிகவும் விரும்ப அவ் வளவில் குருவடிவாக வலிய எழுந்தருளி வந்த காலமே, உன்னை நான் துதித்தலால் நின் பரமாசாரியத் திருவுருவை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினாய்; இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன் என்பதாம். jonal கோலம் - அழகு, "கோலம் பொலியுங் கொடி" (தசாங். 10) கோல மேனி வராகமே என்றது இறைவன் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த திருவிளையாடலைக் குறித்தது. இதனை அடிகள். "காட்டில்,ஏவுண்ட பன்றிக்கி ரங்கியிசன் எந்தை பெருந்துறை யாதியன்று கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே' திருவார்த்.6 என அருளியவாறுங் காண்க. பெருந்துறைக் குணமாம் கொண்டலே என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. குணம் மிகுதியும் அருட் குணத்தையே குறித்து நின்றது. ''குறி செய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி" பூவல்.8 "என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவி'' தோணோ.2 "நாணாமே உய்ய ஆட்கொண் டருளி ..... கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவி" பொன்னூ.5
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை . கோல மேனி வராகமே - பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்படி கொண்ட அழகிய திருமேனியையுடைய தாய்ப்பன்றி வடிவானவனே பெருந்துறை குணமாம் கொண்டலே - திருப்பெருந் துறையில் வீற்றிருக்கின்ற நல்ல பண்புகளையுடைய அருண்மேகமே சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி - நல் லொழுக்கம் சிறிதும் அறியாத எனது உள்ளத்தில் நின்னை வைத்த முடிமணி போன்றவனே ஞாலமே கரியாக நான் உனை நச்சி நச்சிட - உலகினர் சாட்சியாக அடியேன் உன்னை மிகவும் விரும்ப வந்திடும் காலமே - அவ்வளவில் குருவடிவாக அருள் செய்ய வலிய எழுந்தருளி வந்த காலதத்துவமானவனே உனை ஓத - உன்னை நான் துதித்தலால் கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - நின் பரமாசாரியத் திருவுருவை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினாய் இதற்கு யான் செய் யும் கைம்மாறு அறியேன் . 10 54 கோல மேனி வராகமே . பெருந்துறைக் கொண்டலே நல் லொழுக்கம் ஏதும் அறியாத எனது உள்ளத்தில் நின்னை வைத்த சிகா மணியே ஞாலமே சாட்சியாக அடியேன் உன்னை மிகவும் விரும்ப அவ் வளவில் குருவடிவாக வலிய எழுந்தருளி வந்த காலமே உன்னை நான் துதித்தலால் நின் பரமாசாரியத் திருவுருவை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினாய் ; இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன் என்பதாம் . jonal கோலம் - அழகு கோலம் பொலியுங் கொடி ( தசாங் . 10 ) கோல மேனி வராகமே என்றது இறைவன் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த திருவிளையாடலைக் குறித்தது . இதனை அடிகள் . காட்டில் ஏவுண்ட பன்றிக்கி ரங்கியிசன் எந்தை பெருந்துறை யாதியன்று கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே ' திருவார்த் .6 என அருளியவாறுங் காண்க . பெருந்துறைக் குணமாம் கொண்டலே என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . குணம் மிகுதியும் அருட் குணத்தையே குறித்து நின்றது . ' ' குறி செய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி பூவல் .8 என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவி ' ' தோணோ .2 நாணாமே உய்ய ஆட்கொண் டருளி ..... கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவி பொன்னூ .5