திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பெருந்துறைப் பெருவெள்ளமே; எனை நீ ஏதிலார் முன்னர் யாது செய்தனை; நின் ஒப்பற்ற திருவடியே புகவிடமாம் என்று அன்பினால் உனைத் துதிக்க உன் பரமாசாரியத் திருக்கோலத்தை இத்திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி வந்து காட்டியருளினை என்பதாம். 1056 உற்று பேதமில்லதோர் கற்பு என்றது கற்புடைய பெண்டிர் பிறர் கண வரை நினையாமை போல இறைவனையன்றிப் பிற தெய்வத்தை விரும் பாத நிலையை உணர்த்தியது. பேதமில்லாமை என்றது அத்துவிதமா யிருத்தல். பெருவெள்ளம் - பேரின்பத்தைக் குறித்தது. "பேரா வொழி யாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளாவின்ப மாகடலே'' (பிரார்த்தனை.6) என அடிகள் அருளியவாறுங் காண்க. ஏதம் - குற் றம். ஏதிலார் - முன்னர்த் தெரிந்திராத நொதுமலர் என்றவாறு. ஈண்டு இறைவனுடன் வந்த மெய்யடியார்களைக் குறித்தது. என்ன செய்தாய் என்னும் வினா அயலவர்க்கு முன்னே விட்டுப் பிரிந்தமை தகுமா என இரங்கிக் கூறியதாகும். இறைவன் தம்மை விட்டுப் பிரிந் தமையால் ஆற்றாமையின் இறைவனைப் பற்றிப் பல குறைகளையும் தாம் பேச நேர்ந்தது என்பார் "ஏதமே பல பேச" என்றார். மரணமும் மரணத்தால் வரும் தீங்கும் இல்லாத ஒப்பற்ற திரு வடியைத் ''தனிச் சரண்'” என்றார். சரணாமென - புகலிடமாகு மென்று. திருவடியே புகலிடம் என்றது தன்னை அடைந்த அடியார்க்கு வரும் இன்னல்கள் எல்லாவற்றையும் நீக்கியருளும் தன்மை பற்றியா பொருட்டுக் காலனைக் கும். திருவடியடைந்த மார்க்கண்டேயர் காலால் உதைத்தமையுங் காண்க. 'திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி பேசிவ லோகஞ் சிந்திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி பேதஞ்சம் உள்தெளி வார்க்கே" எனத் திருமூலநாயனாரின் அருள்வாக்காலுமறிக. ஒத என்னும் செயவெனெச்சம் ஏதுப்பொருட்டு. இதன்கண் "காதலால் உனையோத வந்து காட்டினாய் கழுக்குன் றிலே" என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப்பொருள் புலப்படு தல் காண்க. 47 2 இயக்கி மாரறு பத்து நால்வரை எண்கு ணஞ்செய்த ஈசனே மயக்க மாயதோர் மும்ம லப்பழ வல்வி னைக்குள ழுந்தவும் திருமந். 138 oleju
திருவாசக ஆராய்ச்சியுரை பெருந்துறைப் பெருவெள்ளமே ; எனை நீ ஏதிலார் முன்னர் யாது செய்தனை ; நின் ஒப்பற்ற திருவடியே புகவிடமாம் என்று அன்பினால் உனைத் துதிக்க உன் பரமாசாரியத் திருக்கோலத்தை இத்திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி வந்து காட்டியருளினை என்பதாம் . 1056 உற்று பேதமில்லதோர் கற்பு என்றது கற்புடைய பெண்டிர் பிறர் கண வரை நினையாமை போல இறைவனையன்றிப் பிற தெய்வத்தை விரும் பாத நிலையை உணர்த்தியது . பேதமில்லாமை என்றது அத்துவிதமா யிருத்தல் . பெருவெள்ளம் - பேரின்பத்தைக் குறித்தது . பேரா வொழி யாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளாவின்ப மாகடலே ' ' ( பிரார்த்தனை .6 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . ஏதம் - குற் றம் . ஏதிலார் - முன்னர்த் தெரிந்திராத நொதுமலர் என்றவாறு . ஈண்டு இறைவனுடன் வந்த மெய்யடியார்களைக் குறித்தது . என்ன செய்தாய் என்னும் வினா அயலவர்க்கு முன்னே விட்டுப் பிரிந்தமை தகுமா என இரங்கிக் கூறியதாகும் . இறைவன் தம்மை விட்டுப் பிரிந் தமையால் ஆற்றாமையின் இறைவனைப் பற்றிப் பல குறைகளையும் தாம் பேச நேர்ந்தது என்பார் ஏதமே பல பேச என்றார் . மரணமும் மரணத்தால் வரும் தீங்கும் இல்லாத ஒப்பற்ற திரு வடியைத் ' ' தனிச் சரண் ' என்றார் . சரணாமென - புகலிடமாகு மென்று . திருவடியே புகலிடம் என்றது தன்னை அடைந்த அடியார்க்கு வரும் இன்னல்கள் எல்லாவற்றையும் நீக்கியருளும் தன்மை பற்றியா பொருட்டுக் காலனைக் கும் . திருவடியடைந்த மார்க்கண்டேயர் காலால் உதைத்தமையுங் காண்க . ' திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி பேசிவ லோகஞ் சிந்திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி பேதஞ்சம் உள்தெளி வார்க்கே எனத் திருமூலநாயனாரின் அருள்வாக்காலுமறிக . ஒத என்னும் செயவெனெச்சம் ஏதுப்பொருட்டு . இதன்கண் காதலால் உனையோத வந்து காட்டினாய் கழுக்குன் றிலே என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப்பொருள் புலப்படு தல் காண்க . 47 2 இயக்கி மாரறு பத்து நால்வரை எண்கு ணஞ்செய்த ஈசனே மயக்க மாயதோர் மும்ம லப்பழ வல்வி னைக்குள ழுந்தவும் திருமந் . 138 oleju