திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1060 திருவாசக ஆராய்ச்சியுரை இந்திரியங்களின் வயப்பட்டு அறிவு மயங்கி இறந்துபோவதற்கே ஏதுவாகி, அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழும் இயல்புடைய எனக்கு, மன மயக்கத்தினைத் தெளிவடையச் செய்து, சிவமாக்கி என்னை ஆட்கொண்டருளிய பேரின்ப வடிவான இறைவனது ஐந் தொழிற் கூத்தினைத் தில்லைச்சிற்றம்பலத்தின்கண் கண்டேன் என்ப தாம். இந்திரியம் - பொறி. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. வயமயங்கி - வயப்பட்டு அறிவு மயங்கி. இறப்பதற்கே காரணமாய் - எடுத்த மானிடப் பிறப்பினால் பெறவேண்டிய பயனைப் பெறாது இறந்து போவதற்கே ஏதுவாய் என்றவாறு. அந்தரம் -பாது காப்பாரின்றி வருந்தும் நிலை. சிவமாக்கி - சிந்தையினைச் சிவகரண மாக்கி. ""திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரி சடையோனே" என்பதனாலுங் காண்க. திருமந் 2955 ஆனந்தம் என்றது அதனையுடைய இறைவனை உணர்த்தியது. அந்தமிலா ஆனந்தம் - அந்தமில்லாத ஆனந்தப் பெருங் கூத்தராகிய அம்பலவாணர் எனினுமாம், ''அந்தமிலா ஆனத்தப் பெருங் கூத் (பெரிய: திருநாளை.36) ஆனந்த, எல்லையில் தனிப் பெருங் கூத்தின், வந்த பேரின்பம்" (பெரிய புராண : தடுத். 106) எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க. இறைவனைத் தில்லை கண்டேன் என்றதனால் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நிகழும் நிருத் தத்தினைத் தரிசித்தமையே ஈண்டுக் கூறப்பட்டதாகும். தில்லை கண் டேன் - தில்லையம்பலத்தே கண்டேன். அனைத்துலகும் தொழுந் தில்லை யம்பலத்தே கண்டேன் (2) என வருதல் காண்க. இதன் கண் 'ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே' என்பத னால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 474 இவ்வாறே ஏனைய செய்யுள்களுக்கும் கொள்க. வினைப்பிறவி யென்கின்ற வேதனைபி லகப்பட்டுத் தனைச்சிறிது நினையாதே தளர்வெதிக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகும் தொழுந்தில்லை யம்பலத்தே கண்டேனே.
1060 திருவாசக ஆராய்ச்சியுரை இந்திரியங்களின் வயப்பட்டு அறிவு மயங்கி இறந்துபோவதற்கே ஏதுவாகி அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழும் இயல்புடைய எனக்கு மன மயக்கத்தினைத் தெளிவடையச் செய்து சிவமாக்கி என்னை ஆட்கொண்டருளிய பேரின்ப வடிவான இறைவனது ஐந் தொழிற் கூத்தினைத் தில்லைச்சிற்றம்பலத்தின்கண் கண்டேன் என்ப தாம் . இந்திரியம் - பொறி . அவை மெய் வாய் கண் மூக்கு செவி என்பன . வயமயங்கி - வயப்பட்டு அறிவு மயங்கி . இறப்பதற்கே காரணமாய் - எடுத்த மானிடப் பிறப்பினால் பெறவேண்டிய பயனைப் பெறாது இறந்து போவதற்கே ஏதுவாய் என்றவாறு . அந்தரம் -பாது காப்பாரின்றி வருந்தும் நிலை . சிவமாக்கி - சிந்தையினைச் சிவகரண மாக்கி . திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரி சடையோனே என்பதனாலுங் காண்க . திருமந் 2955 ஆனந்தம் என்றது அதனையுடைய இறைவனை உணர்த்தியது . அந்தமிலா ஆனந்தம் - அந்தமில்லாத ஆனந்தப் பெருங் கூத்தராகிய அம்பலவாணர் எனினுமாம் ' ' அந்தமிலா ஆனத்தப் பெருங் கூத் ( பெரிய : திருநாளை .36 ) ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் வந்த பேரின்பம் ( பெரிய புராண : தடுத் . 106 ) எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க . இறைவனைத் தில்லை கண்டேன் என்றதனால் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நிகழும் நிருத் தத்தினைத் தரிசித்தமையே ஈண்டுக் கூறப்பட்டதாகும் . தில்லை கண் டேன் - தில்லையம்பலத்தே கண்டேன் . அனைத்துலகும் தொழுந் தில்லை யம்பலத்தே கண்டேன் ( 2 ) என வருதல் காண்க . இதன் கண் ' ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே ' என்பத னால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 474 இவ்வாறே ஏனைய செய்யுள்களுக்கும் கொள்க . வினைப்பிறவி யென்கின்ற வேதனைபி லகப்பட்டுத் தனைச்சிறிது நினையாதே தளர்வெதிக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகும் தொழுந்தில்லை யம்பலத்தே கண்டேனே .