திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கண்டேன்" இதன்கண். 'இணையிலியைத் தில்லையம்பலத்தே என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 1062 475 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி பூன்புக்குக் கருணையினா லாண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 2 என் ப-ரை. உரு தெரியா காலத்தே உள் புகுந்து - எனது உடலின் உருவம் தெரியாது சிறிதாயிருக்கின்ற கருப்பகாலத்திலேயே அறிவிற் புகுந்து, உளம் மன்னி - என் உள்ளத்தில் நிலைபெற்று; கரு திருத்தி - எனது பிறப்பினைத் திருந்தச் செய்து, ஊன் புக்கு - என் உடம் பினைத் தனக்கு இடமாகக் கொண்டு, கருணையினால் ஆண்டுகொண்ட- தனது திருவருளால் ஆட்கொண்டருளிய, திருத்துருத்தி மேயானை - திருத்துருத்தி என்னும் தலத்தில் எழுந்தருளியிருப்பவனும், தித்திக் கும் சிவபதத்தை - இனிமையைத் தருகின்ற வீடு பேற்றினையுடைய வனுமாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை, நாய் அடி யேன் அருத்தியினால் அணி கொள் தில்லை கண்டேன் - நாயனைய அடி ன்ே ஆசையினொடும் அழகு பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன். உருத்தெரியாக் காலத்தே என் அறிவிற் புகுந்து, உள்ளத்தில் நிலை பெற்று, என் பிறப்பினைத் திருத்தி, என் உடம்பினைத் தனக்கு இடமாகக் கொண்டு, தனது திருவருளினால் ஆட்கொண்டருளிய திருத்துருத்திமேயானும், தித்திக்கும் சிவபதத்தையுடையவனுமாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை நாயடியேன் தில்லைச்சிற் றம்பலத்தின்கண்ணே கண்டேன் என்பதாம். உருத்தெரியாக் காலமென்றது உருவம் தெரியாது சுருவாய்க் கிடந்த காலத்தை: கருத்திருத்தி என்றது பிறப்பினை உயர்வடை யச் செய்து; என்றது பிறவிப்பயனைத் தப்பாமே எய்த வைத்து என்றவாறு, உருத்தெரியாக் சாலத்தே உளமன்னி ஆண்ட இயையும். என ''கருவாய்க் கிடந்துன் கழலே நினைபுங் கருத்துடையேன்” நாவு94-6 "கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்” நாவு.96-5 'கருவுற்ற நாள் முதலாகவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும்" நாவு.99-6 கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள் வர் போலும்" நாவு. 302-9 என்னும் தேவாரப் பகுதிகள் ஈண்டறியற்பாலன.
திருவாசக ஆராய்ச்சியுரை கண்டேன் இதன்கண் . ' இணையிலியைத் தில்லையம்பலத்தே என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 1062 475 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி பூன்புக்குக் கருணையினா லாண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே . 2 என் - ரை . உரு தெரியா காலத்தே உள் புகுந்து - எனது உடலின் உருவம் தெரியாது சிறிதாயிருக்கின்ற கருப்பகாலத்திலேயே அறிவிற் புகுந்து உளம் மன்னி - என் உள்ளத்தில் நிலைபெற்று ; கரு திருத்தி - எனது பிறப்பினைத் திருந்தச் செய்து ஊன் புக்கு - என் உடம் பினைத் தனக்கு இடமாகக் கொண்டு கருணையினால் ஆண்டுகொண்ட தனது திருவருளால் ஆட்கொண்டருளிய திருத்துருத்தி மேயானை - திருத்துருத்தி என்னும் தலத்தில் எழுந்தருளியிருப்பவனும் தித்திக் கும் சிவபதத்தை - இனிமையைத் தருகின்ற வீடு பேற்றினையுடைய வனுமாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை நாய் அடி யேன் அருத்தியினால் அணி கொள் தில்லை கண்டேன் - நாயனைய அடி ன்ே ஆசையினொடும் அழகு பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் . உருத்தெரியாக் காலத்தே என் அறிவிற் புகுந்து உள்ளத்தில் நிலை பெற்று என் பிறப்பினைத் திருத்தி என் உடம்பினைத் தனக்கு இடமாகக் கொண்டு தனது திருவருளினால் ஆட்கொண்டருளிய திருத்துருத்திமேயானும் தித்திக்கும் சிவபதத்தையுடையவனுமாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினை நாயடியேன் தில்லைச்சிற் றம்பலத்தின்கண்ணே கண்டேன் என்பதாம் . உருத்தெரியாக் காலமென்றது உருவம் தெரியாது சுருவாய்க் கிடந்த காலத்தை : கருத்திருத்தி என்றது பிறப்பினை உயர்வடை யச் செய்து ; என்றது பிறவிப்பயனைத் தப்பாமே எய்த வைத்து என்றவாறு உருத்தெரியாக் சாலத்தே உளமன்னி ஆண்ட இயையும் . என ' ' கருவாய்க் கிடந்துன் கழலே நினைபுங் கருத்துடையேன் நாவு94-6 கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன் நாவு.96-5 ' கருவுற்ற நாள் முதலாகவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும் நாவு.99-6 கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள் வர் போலும் நாவு . 302-9 என்னும் தேவாரப் பகுதிகள் ஈண்டறியற்பாலன .