திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பிறவித் துன்பத்தினை முழுதும் நீக்கினமையால் பிணி மூப்பு என்று சொல்லப்படுகின்ற இவை இரண்டும் சுற்றப்பற்றினோடும் நீங்கிப் போக, உலகு உயிர்களையெல்லாம் தனதாகவுடைய ஒப் பற்ற முழுமுதல்வனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லைத் திருச்சிற் றம்பலத்தைச் சார்ந்து மறையவரும் வானவரும் வணங்கிட யானும் தரிசித்தேன் என்பதாம். 1066 செய்தெனெச்சம் அற - முழுவதும். "நின்னை யறப் பெறுகிற்கிலேன்' (அற நெறிச். 191). மாற்றி என்னும் காரணப் பொருட்டு. மாற்றினமையால் பிணி மூப்பு என்ற இவை இரண்டும் உறவினொடும் ஒழிய என்றார், பிறவியை அறமாற்றுதலும் பிணி மூப்பு என்றிவை இரண்டும் உறவினோடும் ஒழியச் செய்தலும் இறைவன் ஆட்கொண்ட காலத்து அடிகளுக்குச் செய்தனவாகும். உறவு- சுற் றப் பற்று, சென்று மன்னிக் கண்டேன் என இயையும். பொழில் சூழ் தில்லை என்பது 'குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லை" (44) "சூழ் பொழில் தில்லை" (47) ''செழுந்தேன்றிகழ் பொழிற்றில்லை" (166) எனத் திருக்கோவையாரிலும் வருவன காண்க. மறையவர் என்னுஞ் சொல் பொதுவகையால் அந்தணர்களையும் சிறப்புவகை யால் தில்லைவாழ் அந்தணர்களையும் குறிக்குமாயினும் "ஒரு மொழி ஒழிதன் இனங் கொளற் குரித்தே" என்றதனால் அரசர் வணிகர் வேளாளர் முதலியோரையும் கொள்க. வானவரும் வணங்கிட என் 'தில்லை தன்னுட் புரந்தரன் மால் தொழநின்ற பிரான்" 1i-ந் திருமுறை கோயிற்பண்ணி. 41 "தில்லைச்சிற்றம் பலத்து விண்ணோர் வணங்க நாமாதரிக்க நடம்பயில்வோனை'' கோவை 263 இமையோரிறைஞ்சுஞ், செயன் மன்னுஞ் சீர்கழற் சிற்றம்பலவா" கோவை 395 என வருவனவற்றாலுமறிக. இதன் கண் ஒரு முதலை வணங்கிட நான் கண்டேன்" என்ப தனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 479 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவ னெனவென்னை யாக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தானார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. 6
திருவாசக ஆராய்ச்சியுரை பிறவித் துன்பத்தினை முழுதும் நீக்கினமையால் பிணி மூப்பு என்று சொல்லப்படுகின்ற இவை இரண்டும் சுற்றப்பற்றினோடும் நீங்கிப் போக உலகு உயிர்களையெல்லாம் தனதாகவுடைய ஒப் பற்ற முழுமுதல்வனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லைத் திருச்சிற் றம்பலத்தைச் சார்ந்து மறையவரும் வானவரும் வணங்கிட யானும் தரிசித்தேன் என்பதாம் . 1066 செய்தெனெச்சம் அற - முழுவதும் . நின்னை யறப் பெறுகிற்கிலேன் ' ( அற நெறிச் . 191 ) . மாற்றி என்னும் காரணப் பொருட்டு . மாற்றினமையால் பிணி மூப்பு என்ற இவை இரண்டும் உறவினொடும் ஒழிய என்றார் பிறவியை அறமாற்றுதலும் பிணி மூப்பு என்றிவை இரண்டும் உறவினோடும் ஒழியச் செய்தலும் இறைவன் ஆட்கொண்ட காலத்து அடிகளுக்குச் செய்தனவாகும் . உறவு- சுற் றப் பற்று சென்று மன்னிக் கண்டேன் என இயையும் . பொழில் சூழ் தில்லை என்பது ' குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லை ( 44 ) சூழ் பொழில் தில்லை ( 47 ) ' ' செழுந்தேன்றிகழ் பொழிற்றில்லை ( 166 ) எனத் திருக்கோவையாரிலும் வருவன காண்க . மறையவர் என்னுஞ் சொல் பொதுவகையால் அந்தணர்களையும் சிறப்புவகை யால் தில்லைவாழ் அந்தணர்களையும் குறிக்குமாயினும் ஒரு மொழி ஒழிதன் இனங் கொளற் குரித்தே என்றதனால் அரசர் வணிகர் வேளாளர் முதலியோரையும் கொள்க . வானவரும் வணங்கிட என் ' தில்லை தன்னுட் புரந்தரன் மால் தொழநின்ற பிரான் 1i- ந் திருமுறை கோயிற்பண்ணி . 41 தில்லைச்சிற்றம் பலத்து விண்ணோர் வணங்க நாமாதரிக்க நடம்பயில்வோனை ' ' கோவை 263 இமையோரிறைஞ்சுஞ் செயன் மன்னுஞ் சீர்கழற் சிற்றம்பலவா கோவை 395 என வருவனவற்றாலுமறிக . இதன் கண் ஒரு முதலை வணங்கிட நான் கண்டேன் என்ப தனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 479 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவ னெனவென்னை யாக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தானார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே . 6