திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கண்டபத்து ப-ரை. பத்திமையும் பரிசும் இலா பசுபாசம் அறுத்தருளி- அன்புடைமையும் நல்லியல்பும் இல்லாமைக் கேதுவாகிய பசுத்தன் மையையும் பாசக் கட்டினையும் நீக்கியருளி, என்னை இவன் பித்தன் என ஆக்குவித்து - என்னை இவன் பித்தன் என்று கண்டோர் கூறும் படி செய்வித்து, சித்தம் எனும் திண்கயிற்றால் திருப்பாதம் பேராமே கட்டுவித்த - இடைவிடாத நினைவு என்கின்ற வலியகயிற்றால் தன் திருவடிகளை என்னை விட்டு நீங்காதவாறு கட்டுவித்த, வித்தகனார் விளையாடல் - ஞான உருவினராகிய சிவபிரானது ஐந்தொழிற் கூத் தினை, விளங்கு தில்லை கண்டேன் - விளங்குகின்ற தில்லைத் திருச்சிற் றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன். 1067 பத்திமையும் பரிசும் இல்லாமைக் கேதுவாகிய பசுத்தன்மை யையும் பாசக்கட்டினையும் நீக்கியருளி, என்னை இவன் பித்தன் என்று கண்டோர் சொல்லும் வண்ணம் செய்வித்து, சித்தம் என்கின்ற திண் கயிற்றால் தன் திருவடியை என்னை விட்டு நீங்காதவாறு கட்டுவித்த ஞானவுருவினராகிய சிவபெருமானது ஐந்தொழிற் கூத்தினைத் தில் லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்பதாம். பரிசு - தன்மை, இயல்பு பசுத்துவமாகிய தன்னினைவும் மலக் கட்டும் இறைவன்பால் பத்தியும் நல்லியல்பும் உண்டாகா வண்ணம் தடுப்பனவாதலின் "பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம்'' என்றார். 'பதியணுகிற்பசு பாசம் நிலாவே', (திருமந்.115) என வருவன காண்க. பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவனெனவென்னை ஆக்கு வித்து'' என்றதனால் இறைவன் தம்மை ஆட்கொண்டமை கூறினார். 'பித்த னென்றெனை யுலகவர் பகர்வதோர் காரணமிதுகேளீர்..... அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே" (அதி சய. 4) என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க. பேராமே கட்டுவித்த என இயையும். சித்தம் - சிந்தனை என்றது விடாத தியானத்தினை. வித்தகன் - உண்மையறிவுருவினன். யாடல் - ஐந்தொழிற் கூத்து; இடை விளை கண் இதன்கண் ''வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை டேனே" என்பதனால் நீருத்ததரிசனம் என்னும் பதிகப்பொருள் புலப் படுதல் காண்க. 7 480 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக் களவிலா ஆனந்த மளித்தென்னை யாண்டானைக் களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே.
கண்டபத்து - ரை . பத்திமையும் பரிசும் இலா பசுபாசம் அறுத்தருளி அன்புடைமையும் நல்லியல்பும் இல்லாமைக் கேதுவாகிய பசுத்தன் மையையும் பாசக் கட்டினையும் நீக்கியருளி என்னை இவன் பித்தன் என ஆக்குவித்து - என்னை இவன் பித்தன் என்று கண்டோர் கூறும் படி செய்வித்து சித்தம் எனும் திண்கயிற்றால் திருப்பாதம் பேராமே கட்டுவித்த - இடைவிடாத நினைவு என்கின்ற வலியகயிற்றால் தன் திருவடிகளை என்னை விட்டு நீங்காதவாறு கட்டுவித்த வித்தகனார் விளையாடல் - ஞான உருவினராகிய சிவபிரானது ஐந்தொழிற் கூத் தினை விளங்கு தில்லை கண்டேன் - விளங்குகின்ற தில்லைத் திருச்சிற் றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் . 1067 பத்திமையும் பரிசும் இல்லாமைக் கேதுவாகிய பசுத்தன்மை யையும் பாசக்கட்டினையும் நீக்கியருளி என்னை இவன் பித்தன் என்று கண்டோர் சொல்லும் வண்ணம் செய்வித்து சித்தம் என்கின்ற திண் கயிற்றால் தன் திருவடியை என்னை விட்டு நீங்காதவாறு கட்டுவித்த ஞானவுருவினராகிய சிவபெருமானது ஐந்தொழிற் கூத்தினைத் தில் லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் என்பதாம் . பரிசு - தன்மை இயல்பு பசுத்துவமாகிய தன்னினைவும் மலக் கட்டும் இறைவன்பால் பத்தியும் நல்லியல்பும் உண்டாகா வண்ணம் தடுப்பனவாதலின் பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் ' ' என்றார் . ' பதியணுகிற்பசு பாசம் நிலாவே ' ( திருமந் .115 ) என வருவன காண்க . பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவனெனவென்னை ஆக்கு வித்து ' ' என்றதனால் இறைவன் தம்மை ஆட்கொண்டமை கூறினார் . ' பித்த னென்றெனை யுலகவர் பகர்வதோர் காரணமிதுகேளீர் ..... அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே ( அதி சய . 4 ) என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க . பேராமே கட்டுவித்த என இயையும் . சித்தம் - சிந்தனை என்றது விடாத தியானத்தினை . வித்தகன் - உண்மையறிவுருவினன் . யாடல் - ஐந்தொழிற் கூத்து ; இடை விளை கண் இதன்கண் ' ' வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை டேனே என்பதனால் நீருத்ததரிசனம் என்னும் பதிகப்பொருள் புலப் படுதல் காண்க . 7 480 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக் களவிலா ஆனந்த மளித்தென்னை யாண்டானைக் களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே .