திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

32. பிரார்த்தனைப்பத்து சதாமுத்தி திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது அடிகள் தமது விண்ணப்பத்தினை இறைவன்பால் சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளும் பதினொரு பாடல்களையுடைய பகுதி பிரார்த் தனைப் பத்து ஆகும். பத்து எனக் கூறினும் 'பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதியாகச் சொல்லுதல் தானே' என்ற இயல்பினால் பத்தினிறந்தும் பதிகம் வருமென்க. இப்பதிகப்பொருள் 'சதாமுத்தி' என அமைந்துள்ளது. இதனைத் திருவாசகச் சிறப்புடையார், "அந்தமிலா ஆனந்தத்து அகலாமல் எனை அழுத்தி ஆள்வாயென்று சிந்தைகலந் துரைத்ததுவே பிரார்த்தனைப்பத்தாய்ப் புகலுஞ் செய்கையாமே" எனக் கூறுவர். எப்போதும் நீங்காமல் முத்தியின்பத்தை அருள வேண்டுமென்பது இதன் தாற்பரியமாகும். அந்தாதித் தொடையாக இப்பதிகத்தில் திருப்பாடல்கள் அமைந்திருக்கும் நயம் பயில்வார்க்கு உறுதி பயப்பதாகும். இது அறு சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம். 483 ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா வின்பச் சுடர்காண்பான் அலந்து போனேன் அருள்செய்யாப் ஆர்வங் கூர அடியெற்கு. ப-ரை. அன்று நின் அடியாரோடு கலந்து களித்து வாளா இருந் தேன் - என்னை ஆட்கொண்ட அந்நாள் முதலாக நின் மெய்யடியா ரோடு கூடிக் களிப்படைந்து சும்மா இருந்துவிட்டேன்; காலங்கள் புலர்ந்து போன - அம்மெய்யடியார்கள் பிரிந்து சென்ற பின்னர் நாட் கள் பலவாய்க் கழிந்து போயின; பின் நாள் இடர் புகுந்து நின்
32. பிரார்த்தனைப்பத்து சதாமுத்தி திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது அடிகள் தமது விண்ணப்பத்தினை இறைவன்பால் சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளும் பதினொரு பாடல்களையுடைய பகுதி பிரார்த் தனைப் பத்து ஆகும் . பத்து எனக் கூறினும் ' பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதியாகச் சொல்லுதல் தானே ' என்ற இயல்பினால் பத்தினிறந்தும் பதிகம் வருமென்க . இப்பதிகப்பொருள் ' சதாமுத்தி ' என அமைந்துள்ளது . இதனைத் திருவாசகச் சிறப்புடையார் அந்தமிலா ஆனந்தத்து அகலாமல் எனை அழுத்தி ஆள்வாயென்று சிந்தைகலந் துரைத்ததுவே பிரார்த்தனைப்பத்தாய்ப் புகலுஞ் செய்கையாமே எனக் கூறுவர் . எப்போதும் நீங்காமல் முத்தியின்பத்தை அருள வேண்டுமென்பது இதன் தாற்பரியமாகும் . அந்தாதித் தொடையாக இப்பதிகத்தில் திருப்பாடல்கள் அமைந்திருக்கும் நயம் பயில்வார்க்கு உறுதி பயப்பதாகும் . இது அறு சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம் . 483 ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா வின்பச் சுடர்காண்பான் அலந்து போனேன் அருள்செய்யாப் ஆர்வங் கூர அடியெற்கு . - ரை . அன்று நின் அடியாரோடு கலந்து களித்து வாளா இருந் தேன் - என்னை ஆட்கொண்ட அந்நாள் முதலாக நின் மெய்யடியா ரோடு கூடிக் களிப்படைந்து சும்மா இருந்துவிட்டேன் ; காலங்கள் புலர்ந்து போன - அம்மெய்யடியார்கள் பிரிந்து சென்ற பின்னர் நாட் கள் பலவாய்க் கழிந்து போயின ; பின் நாள் இடர் புகுந்து நின்