திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1674 திருவாசக ஆராய்ச்சியுரை அடியார் சிலருன் னருள்பெற்றார் ஆர்வங் கூர யானவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியே னுடைய கடுவினையைக் A களைந்துன் கருணைக் கடல்பொங்க உடையா வடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 105 ப-ரை. அடியார் சிலர் ஆர்வம் கூர உன் அருள் பெற்றார்- நின்னுடன் இருந்த மெய்யடியார்கள் சிலர் அன்பு மிகுதியால் நின் திருவருளைப் பெற்றனர், யான் முடை ஆர். பிணத்தின் முடிவு இன்றி - யான் முடை நாற்றம் பொருந்திய பிணமாந்தன்மையை யுடைய இவ்வுடம்பின் கண் நீங்காதிருக்கப்பெற்றமையால், கடு வினையை முனி வால் அடியேன் அவமே மூக்கின்றேன் - வெறுப்பினுடன் அடியேன் பயனில்லாமல் முதிர்ச்சியடைகின்றேன். ஆதலால், உடையானே- என்னை ஆளாகவுடையவனே, கடியேன் உடைய களைந்து - அன்பில்லாத கடுமையான குணத்தையுடையேனது கொடிய பிராரத்த வினையினை நீக்கியருளி, ஓவாது உருக - ஓயது அன்பி னால் உள்ளம் உருகவும், அடியேன் உள்ளத்து உன் கருணை கடல் பொங்க -அடியேனது உள்ளத்தின் கண் உன் அருட் கடலானது மிகும்படியாகவும், அருளாய் - அருள் செய்வாயாக. the tim Palipe நின் மெய்யடியார்கள் சிலர் உன்னிடத்து அன்பு மிகுதியால் நின் திருவருளைப் பெற்றனர். யான் பிணமாந்தன்மையையுடைய இவ்வுடம்பின்கண் நீங்காதிருக்கப் பெற்றமையால் வெறுப்பினுடன் அடியேன் அவமே மூக்கின்றேன். ஆதலால், உடையாய், கடியேனு டைய கடுவினையைக் களைந்து ஓவாது உள்ளம் உருகவும் அதனால் அடி யேன் உள்ளத்து நின் கருணைக் கடல் பொங்கவும் அருள் வி செய்வாயாக என்பதாம். அடியார் சிலர் என்றது அடிகளார் காலத்திருந்த மெய்யடியார் களைக் குறித்தது. அருள் பெற்றார் - அம்மெய்யடியார்கள் அடிகளைப் பிரிந்து சென்று இறைவன் திருவருளைப் பெற்றனர். "அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய்" பிரார்த்.3 என வருதலுங் காண்க. உடம்பினை முடையார் பிணம் என்றது புலால் நாற்றமுடைய பிணமாந்தன்மை பொருந்திய இழிவுடைமை பற்றி
1674 திருவாசக ஆராய்ச்சியுரை அடியார் சிலருன் னருள்பெற்றார் ஆர்வங் கூர யானவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியே னுடைய கடுவினையைக் A களைந்துன் கருணைக் கடல்பொங்க உடையா வடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே . 105 - ரை . அடியார் சிலர் ஆர்வம் கூர உன் அருள் பெற்றார் நின்னுடன் இருந்த மெய்யடியார்கள் சிலர் அன்பு மிகுதியால் நின் திருவருளைப் பெற்றனர் யான் முடை ஆர் . பிணத்தின் முடிவு இன்றி - யான் முடை நாற்றம் பொருந்திய பிணமாந்தன்மையை யுடைய இவ்வுடம்பின் கண் நீங்காதிருக்கப்பெற்றமையால் கடு வினையை முனி வால் அடியேன் அவமே மூக்கின்றேன் - வெறுப்பினுடன் அடியேன் பயனில்லாமல் முதிர்ச்சியடைகின்றேன் . ஆதலால் உடையானே என்னை ஆளாகவுடையவனே கடியேன் உடைய களைந்து - அன்பில்லாத கடுமையான குணத்தையுடையேனது கொடிய பிராரத்த வினையினை நீக்கியருளி ஓவாது உருக - ஓயது அன்பி னால் உள்ளம் உருகவும் அடியேன் உள்ளத்து உன் கருணை கடல் பொங்க -அடியேனது உள்ளத்தின் கண் உன் அருட் கடலானது மிகும்படியாகவும் அருளாய் - அருள் செய்வாயாக . the tim Palipe நின் மெய்யடியார்கள் சிலர் உன்னிடத்து அன்பு மிகுதியால் நின் திருவருளைப் பெற்றனர் . யான் பிணமாந்தன்மையையுடைய இவ்வுடம்பின்கண் நீங்காதிருக்கப் பெற்றமையால் வெறுப்பினுடன் அடியேன் அவமே மூக்கின்றேன் . ஆதலால் உடையாய் கடியேனு டைய கடுவினையைக் களைந்து ஓவாது உள்ளம் உருகவும் அதனால் அடி யேன் உள்ளத்து நின் கருணைக் கடல் பொங்கவும் அருள் வி செய்வாயாக என்பதாம் . அடியார் சிலர் என்றது அடிகளார் காலத்திருந்த மெய்யடியார் களைக் குறித்தது . அருள் பெற்றார் - அம்மெய்யடியார்கள் அடிகளைப் பிரிந்து சென்று இறைவன் திருவருளைப் பெற்றனர் . அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் பிரார்த் .3 என வருதலுங் காண்க . உடம்பினை முடையார் பிணம் என்றது புலால் நாற்றமுடைய பிணமாந்தன்மை பொருந்திய இழிவுடைமை பற்றி