திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிரார்த்தனைப்பத்து யாகும்.'முடையார் புழுக்கூடு" (சத. 56)என அடிகள் பிறிதோரிடத் தும் கூறியருளியமை காண்க. இன்றி என்னும் வினையெச்சம் ஏதுப் பொருட்டு. முனிவால் - முனிவொடு. முனிவு - வெறுப்பு. மூத்தல்- முதிர்தல். "முடைவிடாதடியேன் மூத்து" (பிடி.த். 2). கடியேன் - அன்பில்லாத கடுமையான குணமுடையேன். சடு வினையெனப் பொதுப்படக் கூறினும் சஞ்சித ஆகாமியங்கள் ஆட் கொண்ட காலத்தே நீக்கப்பட்டமையின் எஞ்சியுள்ள பிராரத்த வினையைக் குறித்தது. 1075 இதன் கண் "உன் கருணைக் கடல் பொங்க அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அகளாயே" என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. 2 485 அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டா யெம்மானே மருளார் மனத்தோ ருன்மத்தன் வருமச லென்றிங் கெனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே. ப-ரை. எம்மானே - எங்கள் தலைவனே, அருள் ஆர் அமுத பெரு கடல்வாய் - நினது திருவருளையுடைய கிடைத்தற் கரிய வீடு பேறு என்னும் அமுதத்தையுடைய பெரிய கடலின் கண், அடியார் எல்லாம் புக்கு அழுந்த - என்னுடன் இருந்த மெய்யடியார்கள் எல் லாரும் போய் முழுகி இன்புற, இருள் ஆர் ஆக்கை இது பொறுத்து எய்த்தேன் - மயக்கம் நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத் தேன். இங்கு எனை கண்டார் - இவ்வுலகில் என்னைக் கண்டவர்கள், மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வரும் என்று வெருளா வண் ணம் - மருட்சி நிறைந்த மனத்தையுடைய ஓர் பித்தன் வருகின் றான் என்று சொல்லி அச்சமடையாதிருக்கும் பொருட்டு, உடை யாய் - என்னை ஆளாக உடையவனே மெய் அன்பை நான் பெற வேண்டும் - வீடு பேற்றிற்கு ஏதுவாகிய மெய்யன்பினை நான் பெற வேண்டும். அதனை அருள்செய்ய வேண்டும். உண்ட A எம்மானே. நின் திருவருளாகிய அருளாரமுதப் பெருங் லின் கண் அடியாரெல்லாம் மூழ்கி இன்புற யான் இருள் நிறைந்த இவ்வுடம்பினைச் சுமந்து இளைத்தேன். இவ்வுலகில் எனைக் கண்டவர்
பிரார்த்தனைப்பத்து யாகும்.'முடையார் புழுக்கூடு ( சத . 56 ) என அடிகள் பிறிதோரிடத் தும் கூறியருளியமை காண்க . இன்றி என்னும் வினையெச்சம் ஏதுப் பொருட்டு . முனிவால் - முனிவொடு . முனிவு - வெறுப்பு . மூத்தல் முதிர்தல் . முடைவிடாதடியேன் மூத்து ( பிடி.த். 2 ) . கடியேன் - அன்பில்லாத கடுமையான குணமுடையேன் . சடு வினையெனப் பொதுப்படக் கூறினும் சஞ்சித ஆகாமியங்கள் ஆட் கொண்ட காலத்தே நீக்கப்பட்டமையின் எஞ்சியுள்ள பிராரத்த வினையைக் குறித்தது . 1075 இதன் கண் உன் கருணைக் கடல் பொங்க அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அகளாயே என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . 2 485 அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டா யெம்மானே மருளார் மனத்தோ ருன்மத்தன் வருமச லென்றிங் கெனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே . - ரை . எம்மானே - எங்கள் தலைவனே அருள் ஆர் அமுத பெரு கடல்வாய் - நினது திருவருளையுடைய கிடைத்தற் கரிய வீடு பேறு என்னும் அமுதத்தையுடைய பெரிய கடலின் கண் அடியார் எல்லாம் புக்கு அழுந்த - என்னுடன் இருந்த மெய்யடியார்கள் எல் லாரும் போய் முழுகி இன்புற இருள் ஆர் ஆக்கை இது பொறுத்து எய்த்தேன் - மயக்கம் நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத் தேன் . இங்கு எனை கண்டார் - இவ்வுலகில் என்னைக் கண்டவர்கள் மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வரும் என்று வெருளா வண் ணம் - மருட்சி நிறைந்த மனத்தையுடைய ஓர் பித்தன் வருகின் றான் என்று சொல்லி அச்சமடையாதிருக்கும் பொருட்டு உடை யாய் - என்னை ஆளாக உடையவனே மெய் அன்பை நான் பெற வேண்டும் - வீடு பேற்றிற்கு ஏதுவாகிய மெய்யன்பினை நான் பெற வேண்டும் . அதனை அருள்செய்ய வேண்டும் . உண்ட A எம்மானே . நின் திருவருளாகிய அருளாரமுதப் பெருங் லின் கண் அடியாரெல்லாம் மூழ்கி இன்புற யான் இருள் நிறைந்த இவ்வுடம்பினைச் சுமந்து இளைத்தேன் . இவ்வுலகில் எனைக் கண்டவர்