திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிரார்த்தனைப்பத்து 1077 ப-ரை: வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே என்னை அருளால் விரும்பி ஆண்டாய் - நின்னை மிகவும் விரும்புகின்ற மெய்யடியார் கூட் டத்தின் நடுவில் மெய்யடியானல்லாத என்னை நினது திருவருளால் விரும்பி ஆட்கொண்டருளினை ; அடியேன் இடர் களைந்த அமுதே- அங்ஙனம் ஆண்டமையால் அடியேனுடைய பிறவித் துன்பத்தை நீக்கி யருளிய அமுதமே, அருமாமணி முத்தே - அருமையான மாணிக்கத் தையும் முத்தையும் ஒத்தவனே, தூண்டா விளக்கின் சுடர் அனையாய்- தூண்ட வேண்டாத விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே. வேண்டாது ஒன்றும் வேண்டாது - விரும்பத்தகாததாகிய ஒரு பொரு ளையும் விரும்பாமல், மிக்க அன்பே மேவுதல் - மேலான அன்பையே விரும்புதல், தொண்டனேற்கும் உண்டாம் கொல் - அடியனேற்கும் உளதாகும் கொல்லோ? அதனை அருள் செய்ய வேண்டும். மெய்யடியாருள் என்னை நின் அருளால் விரும்பி ஆட்கொண்டரு ளினை; அதனால் அடியேனுடைய துன்பத்தை நீக்கியருளிய அமுதமே. மாணிக்கத்தையும் முத்தையும் ஒத்தவனே, தூண்டா விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே, விரும்பத் தகாததாகிய ஒரு பொரு ளையும் விரும்பாமல் நினது அன்பினையே விரும்புதல் தொண்டனேற் கும் ஒரு காலத்து உண்டாகுமோ? நினதருளால் எனக்கும் அது உள தாதல் வேண்டும் என்பதாம். வேண்டும் வேண்டும் என்னும் அடுக்கு மிகுதிப் பொருட்டு. இடர் - பிறவித்துன்பம். அதனைக் களைந்தமை, 'பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை” 'பிறப்பறுத்த அத்தன்" பிறப்பறுத் தாண்டான்" பொற்.15 தெள். 16 பூவல்லி 3 என வருவனவற்றாலுமறிக. இறைவன் அடியார் இடரைக் களைதல் "இடரைக் களையும் எந்தாய் போற்றி" "இடர்களைக் களைந்திட வல்லமணியே" போற்றி.101 சுந். 15-2 என வருவனவுங் காண்க? அருமா மணி முத்து - கிடைத்தற்கரிய மாணிக்கமும் முத்தும். அவை இறைவன் திருமேனிக்கும் மேலே பூசப் பட்ட திருவெண்ணீற்றுக்கும் உவமானம். இறைவன் இயற்கை ஒளி வடிவினனாதலின் தூண்டா விளக்கின் சுடரை உவமை கூறினார். தூண்டா விளக்கு - பிறரொருவரால் தூண்டப்படாத விளக்கு. 'தூண்ட வேண்டாத விளக்கு' மணி விளக்கெனினுமமையும். (கோவை உரை: 244) பெரிய. திருநாவு.223 சுந். 5 2-3 திருமந்.2978 தூண்டா விளக்கன்ன சோதி" "தூண்டா விளக்கின் நற்சோதி" "தூங்டா விளக்கின் றகளிநெய் சோர்தலும்"
பிரார்த்தனைப்பத்து 1077 - ரை : வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே என்னை அருளால் விரும்பி ஆண்டாய் - நின்னை மிகவும் விரும்புகின்ற மெய்யடியார் கூட் டத்தின் நடுவில் மெய்யடியானல்லாத என்னை நினது திருவருளால் விரும்பி ஆட்கொண்டருளினை ; அடியேன் இடர் களைந்த அமுதே அங்ஙனம் ஆண்டமையால் அடியேனுடைய பிறவித் துன்பத்தை நீக்கி யருளிய அமுதமே அருமாமணி முத்தே - அருமையான மாணிக்கத் தையும் முத்தையும் ஒத்தவனே தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தூண்ட வேண்டாத விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே . வேண்டாது ஒன்றும் வேண்டாது - விரும்பத்தகாததாகிய ஒரு பொரு ளையும் விரும்பாமல் மிக்க அன்பே மேவுதல் - மேலான அன்பையே விரும்புதல் தொண்டனேற்கும் உண்டாம் கொல் - அடியனேற்கும் உளதாகும் கொல்லோ ? அதனை அருள் செய்ய வேண்டும் . மெய்யடியாருள் என்னை நின் அருளால் விரும்பி ஆட்கொண்டரு ளினை ; அதனால் அடியேனுடைய துன்பத்தை நீக்கியருளிய அமுதமே . மாணிக்கத்தையும் முத்தையும் ஒத்தவனே தூண்டா விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே விரும்பத் தகாததாகிய ஒரு பொரு ளையும் விரும்பாமல் நினது அன்பினையே விரும்புதல் தொண்டனேற் கும் ஒரு காலத்து உண்டாகுமோ ? நினதருளால் எனக்கும் அது உள தாதல் வேண்டும் என்பதாம் . வேண்டும் வேண்டும் என்னும் அடுக்கு மிகுதிப் பொருட்டு . இடர் - பிறவித்துன்பம் . அதனைக் களைந்தமை ' பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை ' பிறப்பறுத்த அத்தன் பிறப்பறுத் தாண்டான் பொற் .15 தெள் . 16 பூவல்லி 3 என வருவனவற்றாலுமறிக . இறைவன் அடியார் இடரைக் களைதல் இடரைக் களையும் எந்தாய் போற்றி இடர்களைக் களைந்திட வல்லமணியே போற்றி .101 சுந் . 15-2 என வருவனவுங் காண்க ? அருமா மணி முத்து - கிடைத்தற்கரிய மாணிக்கமும் முத்தும் . அவை இறைவன் திருமேனிக்கும் மேலே பூசப் பட்ட திருவெண்ணீற்றுக்கும் உவமானம் . இறைவன் இயற்கை ஒளி வடிவினனாதலின் தூண்டா விளக்கின் சுடரை உவமை கூறினார் . தூண்டா விளக்கு - பிறரொருவரால் தூண்டப்படாத விளக்கு . ' தூண்ட வேண்டாத விளக்கு ' மணி விளக்கெனினுமமையும் . ( கோவை உரை : 244 ) பெரிய . திருநாவு .223 சுந் . 5 2-3 திருமந் .2978 தூண்டா விளக்கன்ன சோதி தூண்டா விளக்கின் நற்சோதி தூங்டா விளக்கின் றகளிநெய் சோர்தலும்