திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

512 திருவாசக ஆராய்ச்சியுரை சிவனென்றே வாய்திறத்தலேயன்றி இறைவனைப் புகழ்ந்துரைப் பார் தென்னா என்று சொல்லி முடிதற்கு முன்னரேயே அவ்இறை வன்பாலுள்ள அன்பு மேலீட்டால் தீயிடைப்பட்ட மெழுகுபோல உள்ள முருகுபவளாதலின் "தென்னா வென்னா முன்னந் தீசேர் மெழுகொப்பாய்" என்றார். இறைவனைத் தென்னா என்றல் "புகழ் வார் தென்னாவெனவுடையான் நடமாடு சிற்றம்பலமே (217) எனத் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையானுமறிக. அடியார் உள் ளம் மெழுகுபோல் உருகுதலை, " தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுளம் உருகி' (போற்றி 60-1} "நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகேயன்னார் "" (சத-88) (செத்-4) அழலுறு மெழுகாம் அன்பராய் நினைவார் என அடிகள் பிறாண்டு கூறுதலுங் காண்க. என்னானை - என் + ஆன் + ஐ . என்னுயிர்த் தலைவன்; பசுபதி என்பது பொருள். "எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா" (அருட்.3) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. ஆன் - பசு, உயிர். ஐ - தலைவன். இப்பொருட்டாதலை "என்னை முன் நில்லன்மின் தெவ்விர்" (குறள் - 771) என்புழி, என்னை என்ப தற்கு என்தலைவன் எனப்பரிமேலழகர் பொருளுரைத்தமையானு மறிக. என்னானை என்று இறைவனைக் கூறுதலை, என்னானை என்னப் பன் என்பார்கட் கின்னமுதை (அம்மானை -19) என்புழியும் காண்க. இனி என்னானை என்பதனை என்னான் ஐ எனப் பிரித்து என் உள்ளத்திலுள்ளவன்; என்தலைவன் என்றும் உரைக்கலாம். "என் னானாய் என்னினல்லால்" என அப்பரடிகள் அருளியமையும் காண்க. அரையன் - அரசன், பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமா றும் (திருவெம் - 15) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலுங் காண்க. இனிய அமுதம்போல இனிமைபயத்தலின் இனனமுதன் என்றார். "தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்" வெவ்வேறாய் (ஏசற 10) என அடிகள் அருளியமையுங் காண்க. எல்லோமும் சொன்னோம் என மாற்றிக்கூட்டிப் பொருள் கொள்க. என ஒரு வெவ்வேறாகக் கூறினராதலின் என்னானை என்னரையன் மையாற் கூறினார். கேள் என்பது ஈண்டு கேட்டிலையோ என்னும் பொருட்டு. இனி கேள் இன்னம் துயிலுதியோ எனக்கூட்டி, "சொன்னோம். தோழீ உறங்குகின்றாயோ, எனவும் உரைக்கலாம். கேள் என்பது தோழி
512 திருவாசக ஆராய்ச்சியுரை சிவனென்றே வாய்திறத்தலேயன்றி இறைவனைப் புகழ்ந்துரைப் பார் தென்னா என்று சொல்லி முடிதற்கு முன்னரேயே அவ்இறை வன்பாலுள்ள அன்பு மேலீட்டால் தீயிடைப்பட்ட மெழுகுபோல உள்ள முருகுபவளாதலின் தென்னா வென்னா முன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்றார் . இறைவனைத் தென்னா என்றல் புகழ் வார் தென்னாவெனவுடையான் நடமாடு சிற்றம்பலமே ( 217 ) எனத் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையானுமறிக . அடியார் உள் ளம் மெழுகுபோல் உருகுதலை தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுளம் உருகி ' ( போற்றி 60-1 } நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகேயன்னார் ( சத -88 ) ( செத் -4 ) அழலுறு மெழுகாம் அன்பராய் நினைவார் என அடிகள் பிறாண்டு கூறுதலுங் காண்க . என்னானை - என் + ஆன் + . என்னுயிர்த் தலைவன் ; பசுபதி என்பது பொருள் . எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா ( அருட் .3 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . ஆன் - பசு உயிர் . - தலைவன் . இப்பொருட்டாதலை என்னை முன் நில்லன்மின் தெவ்விர் ( குறள் - 771 ) என்புழி என்னை என்ப தற்கு என்தலைவன் எனப்பரிமேலழகர் பொருளுரைத்தமையானு மறிக . என்னானை என்று இறைவனைக் கூறுதலை என்னானை என்னப் பன் என்பார்கட் கின்னமுதை ( அம்மானை -19 ) என்புழியும் காண்க . இனி என்னானை என்பதனை என்னான் எனப் பிரித்து என் உள்ளத்திலுள்ளவன் ; என்தலைவன் என்றும் உரைக்கலாம் . என் னானாய் என்னினல்லால் என அப்பரடிகள் அருளியமையும் காண்க . அரையன் - அரசன் பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமா றும் ( திருவெம் - 15 ) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலுங் காண்க . இனிய அமுதம்போல இனிமைபயத்தலின் இனனமுதன் என்றார் . தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் வெவ்வேறாய் ( ஏசற 10 ) என அடிகள் அருளியமையுங் காண்க . எல்லோமும் சொன்னோம் என மாற்றிக்கூட்டிப் பொருள் கொள்க . என ஒரு வெவ்வேறாகக் கூறினராதலின் என்னானை என்னரையன் மையாற் கூறினார் . கேள் என்பது ஈண்டு கேட்டிலையோ என்னும் பொருட்டு . இனி கேள் இன்னம் துயிலுதியோ எனக்கூட்டி சொன்னோம் . தோழீ உறங்குகின்றாயோ எனவும் உரைக்கலாம் . கேள் என்பது தோழி