திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிரார்த்தனைப்பத்து உடையாய் நீயே யருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரா ரருளால் இருள்நீங்கச் சோதீ யினித்தான் துணியாயே. 1081 ப - ரை. உடையாய் - என்னை ஆளாகவுடையவனே, கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண கடலைப் போன்ற பேரின்பத்தை நின்னைக் கண்ட மெய்யன்பர்கள் எல்லா ரும் விரும்பியவாறு பெற்று அனுபவிக்க. அடிநாயேன் - அடிமை யாகிய நாயினேன், இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ - துன்பத்தையே பெருகச் செய்து துயருற்று இவ்வுலகத் தில் இருத்தல் நினக்கு அழகாமோ? நீயே அருளுதி என்று உணர்த் தாது ஒழிந்தே கழிந்து ஒழிந்தேன் - நீயே அருள்செய்வாய் என்று எண்ணி என் விருப்பத்தினை நின்பால் வேண்டிக்கொள்ளாமல் விட்டு அதனால் கழிபட்டுவிட்டேன், சோதீ - ஒளிவடிவினனே; ஆர் அருள் சுடரால் இருள் நீங்க இனித்தான் துணியாய் - கிடைத்தற்கரிய அருளாகிய ஒளியையுடைய வாளினால் எனக்கு அறியாமையைச் செய்யும் வாசனாமலமாகிய இருள் நீங்கும் வண்ணம் இனியாவது அவ்விருளைத் துணித்தருளுக. உடையானே! நின் கடல் போன்ற பேரின்பத்தை நின்னைக் கண்ட மெய்யன்பர்கள் எல்லாரும் கவர்ந்து உண்ண, அடிமையாகிய நாயினேன் துன்பத்தைப் பெருக்கித் துயருற்று இவ்வுலகத்தில் இருத்தல் நினக்கு அழகாமோ? நீயே அருள் செய்வாய் கருதி என் விருப்பத்தினை உனக்கு உணர்த்தாது விட்டு அதனால் கழிந் தொழிந்தேன். சோதீ, உன் அருட் சுடர் வாளால் என் இருள் நீங் கும் வண்ணம் இனியாவது அவ்விருளினைத் துணித்தருள்க என்பதாம். என்று கடலே அனைய ஆனந்தம் என்றது ஆனந்தத்தின் மிகுதிபற்றிய உவமையாகும். ஏ தேற்றம். கண்டார் - நின்னை நினதருளால் அறிந்தவர் என்றது சிவஞானத்தால் அறிந்தவர் என்றவாறு. கவர்ந்துண்ணல் - தடையின்மையின் வேண்டியவாறு அள்ளி நுகர்தலை. இடரே - ஏகாரம் தேற்றம். ஏசறுதல் - துயருறுதல். நின்னைப் பெறமாட்டாமை இடரைப் பெருக்குதற்கு ஏது. அழகோ - நின்னால் வலியவந்து ஆட்கொள்ளப்பட்ட யான் வருந்தியிருத்தல் நின் பெரு மைக்கு அழகாகுமோ? ஆகாது என்றவாறு, ஓகாரம் - எதிர்மறை. என்னை வலிய வந்து ஆட்கொண்ட நீயே கடலேயனைய ஆனந்தத்தை யும் வலியத் தந்தருள்வாய் என்று கருதி எனது வேண்டுகோளை நினக்கு உணர்த்தாது விட்டு இப்பொழுது கழிபட்டுவிட்டேன் என்பார்,"நீயே அருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்" என்றார். ஆர் அருள் சுடரார் என மாற்றுக. இருள் என்றது மயக்கத்தை
பிரார்த்தனைப்பத்து உடையாய் நீயே யருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரா ரருளால் இருள்நீங்கச் சோதீ யினித்தான் துணியாயே . 1081 - ரை . உடையாய் - என்னை ஆளாகவுடையவனே கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண கடலைப் போன்ற பேரின்பத்தை நின்னைக் கண்ட மெய்யன்பர்கள் எல்லா ரும் விரும்பியவாறு பெற்று அனுபவிக்க . அடிநாயேன் - அடிமை யாகிய நாயினேன் இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ - துன்பத்தையே பெருகச் செய்து துயருற்று இவ்வுலகத் தில் இருத்தல் நினக்கு அழகாமோ ? நீயே அருளுதி என்று உணர்த் தாது ஒழிந்தே கழிந்து ஒழிந்தேன் - நீயே அருள்செய்வாய் என்று எண்ணி என் விருப்பத்தினை நின்பால் வேண்டிக்கொள்ளாமல் விட்டு அதனால் கழிபட்டுவிட்டேன் சோதீ - ஒளிவடிவினனே ; ஆர் அருள் சுடரால் இருள் நீங்க இனித்தான் துணியாய் - கிடைத்தற்கரிய அருளாகிய ஒளியையுடைய வாளினால் எனக்கு அறியாமையைச் செய்யும் வாசனாமலமாகிய இருள் நீங்கும் வண்ணம் இனியாவது அவ்விருளைத் துணித்தருளுக . உடையானே ! நின் கடல் போன்ற பேரின்பத்தை நின்னைக் கண்ட மெய்யன்பர்கள் எல்லாரும் கவர்ந்து உண்ண அடிமையாகிய நாயினேன் துன்பத்தைப் பெருக்கித் துயருற்று இவ்வுலகத்தில் இருத்தல் நினக்கு அழகாமோ ? நீயே அருள் செய்வாய் கருதி என் விருப்பத்தினை உனக்கு உணர்த்தாது விட்டு அதனால் கழிந் தொழிந்தேன் . சோதீ உன் அருட் சுடர் வாளால் என் இருள் நீங் கும் வண்ணம் இனியாவது அவ்விருளினைத் துணித்தருள்க என்பதாம் . என்று கடலே அனைய ஆனந்தம் என்றது ஆனந்தத்தின் மிகுதிபற்றிய உவமையாகும் . தேற்றம் . கண்டார் - நின்னை நினதருளால் அறிந்தவர் என்றது சிவஞானத்தால் அறிந்தவர் என்றவாறு . கவர்ந்துண்ணல் - தடையின்மையின் வேண்டியவாறு அள்ளி நுகர்தலை . இடரே - ஏகாரம் தேற்றம் . ஏசறுதல் - துயருறுதல் . நின்னைப் பெறமாட்டாமை இடரைப் பெருக்குதற்கு ஏது . அழகோ - நின்னால் வலியவந்து ஆட்கொள்ளப்பட்ட யான் வருந்தியிருத்தல் நின் பெரு மைக்கு அழகாகுமோ ? ஆகாது என்றவாறு ஓகாரம் - எதிர்மறை . என்னை வலிய வந்து ஆட்கொண்ட நீயே கடலேயனைய ஆனந்தத்தை யும் வலியத் தந்தருள்வாய் என்று கருதி எனது வேண்டுகோளை நினக்கு உணர்த்தாது விட்டு இப்பொழுது கழிபட்டுவிட்டேன் என்பார் நீயே அருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் என்றார் . ஆர் அருள் சுடரார் என மாற்றுக . இருள் என்றது மயக்கத்தை