திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிரார்த்தனைப்பத்து துணியா உருகா என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். அவை தோன்றும் என்னும் பெயரெச்சத்தோடு முடியும். துணியா - துணிக்கப்பெற்று எனப் பிறவினைப் பொருளில் வந்தது. துணிவுற்று எனப் பொருளுரைக்கில் தொண்டர் வினையா கும். "இருள் நீங்கச் சோதீ இனித்தான் துணியாயே" என இதற்கு முதற்றிருப்பாட்டில் துணித்தல் இறைவன் தொழிலாய் சேதித்தல் என்ற பொருளில் வந்தமையின் ஈண்டும் அப்பொரு ளில் கொள்ளுதலே சிறப்புடைத்தாம் என்க. இனி, துணியா உருகா என்பதற்கு துண்டிக்கப்படாமல் மனம் உருகி எனவும் உரைக்கலாம். அப்பொருளில் துணியா என்பது ஈறுகெட்ட எதிர் மறைவினையெச்சமாகும். புகுந்து தேய்கின்றேன் என்பதற்கு அடி யார் கூட்டத்தில் புகுந்திருந்தும் தேய்கின்றேன் எனப் பொருந்தா மையின் பின்னர் அவரைப் பிரிந்தமையால் தேய்கின்றேன் எனத்தேய் தற்கு வருவித்துரைக்கப்பட்டது. புகுந்தும் என உம்மை விரிக்க. திணியார் மூங்கில் சிந்தையேன் என்றது அகத்தே ஒன்றுமின் றிப் புறத்தே திண்மையுடைய மூங்கிலைப் போல உள்ளேயன்பின் றிப் புறத்தே திணிமையுடைய சிந்தையுடையேன் என்றவாறு. இனி, திணியார் மூங்கில், கண்மூங்கில் எனக்கொண்டு அதனை மனத்திற்கு உவமை கூறியதாகக் கொள்ளினுமமையும் தேய்தல் - அன்பும் திரு வடிப் பேறுமின்றிக் குறைதல். அருள் அளிய - அருள் கனியும் வண்ணம். ஒல்லை - விரைவு, திணியார் மூங்கில் சிந்தையேன் தேய் கின்றேன் தளிர்ப்பொற் பாதம் தாராய் என இயையும். 1083 "திணியார் மூங்கிலனையேன் வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர்மெய்யானே" சத.89 என அடிகள் அருளியவாறுங் காண்க. இதன் கண் "அருள் அளிய அன்புந்தாராய், அருள் அளியத் தளிர்ப் பொற்பாதம் தாராய்" என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 8 491 தாரா அருளொன் றின்றியே தந்தா யென்றுன் தமரெல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீரா ரருளாற் சிந்தனையைத் திருத்தி பாண்ட சிவலோகா பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே.
பிரார்த்தனைப்பத்து துணியா உருகா என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள் . அவை தோன்றும் என்னும் பெயரெச்சத்தோடு முடியும் . துணியா - துணிக்கப்பெற்று எனப் பிறவினைப் பொருளில் வந்தது . துணிவுற்று எனப் பொருளுரைக்கில் தொண்டர் வினையா கும் . இருள் நீங்கச் சோதீ இனித்தான் துணியாயே என இதற்கு முதற்றிருப்பாட்டில் துணித்தல் இறைவன் தொழிலாய் சேதித்தல் என்ற பொருளில் வந்தமையின் ஈண்டும் அப்பொரு ளில் கொள்ளுதலே சிறப்புடைத்தாம் என்க . இனி துணியா உருகா என்பதற்கு துண்டிக்கப்படாமல் மனம் உருகி எனவும் உரைக்கலாம் . அப்பொருளில் துணியா என்பது ஈறுகெட்ட எதிர் மறைவினையெச்சமாகும் . புகுந்து தேய்கின்றேன் என்பதற்கு அடி யார் கூட்டத்தில் புகுந்திருந்தும் தேய்கின்றேன் எனப் பொருந்தா மையின் பின்னர் அவரைப் பிரிந்தமையால் தேய்கின்றேன் எனத்தேய் தற்கு வருவித்துரைக்கப்பட்டது . புகுந்தும் என உம்மை விரிக்க . திணியார் மூங்கில் சிந்தையேன் என்றது அகத்தே ஒன்றுமின் றிப் புறத்தே திண்மையுடைய மூங்கிலைப் போல உள்ளேயன்பின் றிப் புறத்தே திணிமையுடைய சிந்தையுடையேன் என்றவாறு . இனி திணியார் மூங்கில் கண்மூங்கில் எனக்கொண்டு அதனை மனத்திற்கு உவமை கூறியதாகக் கொள்ளினுமமையும் தேய்தல் - அன்பும் திரு வடிப் பேறுமின்றிக் குறைதல் . அருள் அளிய - அருள் கனியும் வண்ணம் . ஒல்லை - விரைவு திணியார் மூங்கில் சிந்தையேன் தேய் கின்றேன் தளிர்ப்பொற் பாதம் தாராய் என இயையும் . 1083 திணியார் மூங்கிலனையேன் வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர்மெய்யானே சத .89 என அடிகள் அருளியவாறுங் காண்க . இதன் கண் அருள் அளிய அன்புந்தாராய் அருள் அளியத் தளிர்ப் பொற்பாதம் தாராய் என்பதனால் சதாமுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 8 491 தாரா அருளொன் றின்றியே தந்தா யென்றுன் தமரெல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீரா ரருளாற் சிந்தனையைத் திருத்தி பாண்ட சிவலோகா பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே .