திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து இதன்கண் "ஒறுத்தால் ஒன்றும் போதுமே, கூவிப் பணிகொள்ள வேண்டும்" என்பதனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2 496 ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே யின்றிப் போய்த்தோ தான் ஏழை பங்கா எங்கோவே குன்றே யனைய குற்றங்கள் குணமா மென்றே நீ கொண்டால் என்றான் கெட்ட திரங்கிடாய் எண்டோண் முக்கண் எம்மானே. 1093 ப-ரை. ஏழை பங்கா - உமையம்மை பாகனே, எம் கோவே எங்கள் தலைவனே, ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை - ஒன்றற்கும் பற்றாத இழிவுடைய என்னையும் உய்யுமாறு அந் நாளில் ஆட்கொண்டருளிய நினது அருள், இன்று இன்றி போய்த்தோ - இப்போது இல்லாமற் போயிற்றோ? எண் தோள் முக் கண் எம்மானே - எட்டுத் தோள்களையும் மூன்று திருக்கண்களையு முடைய எம்பெரியோனே, குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்று நீ கொண்டால் - மலையைப் போன்ற பெரிய குற்றங்கள் எல்லா வற்றையும் குணமாம் என்று நீ ஏற்றுக்கொண்டால், என் தான் கெட் டது - அதனால் நினர்கு யாது குறைவுளதாமே? ஒன்றுமில்லையே; ஆத லால். இரங்கிடாய் - எனது குற்றங்களைப் பொறுத்து இரங்கியருள் வாயாக. உமையம்மை பாகனே, எங்கோவே, ஒன்றும் போதா நாயேனை உய்யக்கொண்ட நின்னருளானது இப்பொழுது இல்லாமற் போயிற்றோ? எண்தோள் முக்கண் எம்மானே, குன்றே யனைய குற்றங் கள் எல்லாவற்ை யும் குணம் என்று நீ ஏற் க்கொண்டால் அதனால் நினக்கு யாது குறைவுளதாகும்? ஒன்றுமில்லையே. ஆதலால் எனது குற் றங்களைப் பொறுத்து இரங்கி அருள் செய்வாயாக என்பதாம். ஒன்றற்கும் உதவாத குறைவுடைய என்னைப் பிழைக்கும் வண் ணம் ஆட்கொண்டருளிய பெருங்கருணை இப்போது இல்லாமற் போயிற் றோ? நின் பெருங்கருணை போதலும் வருதலுமுடையதல்லவே என்பார் ''ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே இன்றிப் போய்த்தோ தான்" என்றார். போதாத என்னும் பெயரெச்சத் தீறு கெட்டது. போதாமை - குறைவுடைமை உய்ய- பிறவித்துன்பத்தினின்றும் பிழைக்க. "உளமாம் வகை நம்மையுய்ய வந்தாண்டு" (கோவை 22) என்புழிப் பிறவித் துன்பத்திற் பிழைக்க
குழைத்தபத்து இதன்கண் ஒறுத்தால் ஒன்றும் போதுமே கூவிப் பணிகொள்ள வேண்டும் என்பதனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2 496 ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே யின்றிப் போய்த்தோ தான் ஏழை பங்கா எங்கோவே குன்றே யனைய குற்றங்கள் குணமா மென்றே நீ கொண்டால் என்றான் கெட்ட திரங்கிடாய் எண்டோண் முக்கண் எம்மானே . 1093 - ரை . ஏழை பங்கா - உமையம்மை பாகனே எம் கோவே எங்கள் தலைவனே ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை - ஒன்றற்கும் பற்றாத இழிவுடைய என்னையும் உய்யுமாறு அந் நாளில் ஆட்கொண்டருளிய நினது அருள் இன்று இன்றி போய்த்தோ - இப்போது இல்லாமற் போயிற்றோ ? எண் தோள் முக் கண் எம்மானே - எட்டுத் தோள்களையும் மூன்று திருக்கண்களையு முடைய எம்பெரியோனே குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்று நீ கொண்டால் - மலையைப் போன்ற பெரிய குற்றங்கள் எல்லா வற்றையும் குணமாம் என்று நீ ஏற்றுக்கொண்டால் என் தான் கெட் டது - அதனால் நினர்கு யாது குறைவுளதாமே ? ஒன்றுமில்லையே ; ஆத லால் . இரங்கிடாய் - எனது குற்றங்களைப் பொறுத்து இரங்கியருள் வாயாக . உமையம்மை பாகனே எங்கோவே ஒன்றும் போதா நாயேனை உய்யக்கொண்ட நின்னருளானது இப்பொழுது இல்லாமற் போயிற்றோ ? எண்தோள் முக்கண் எம்மானே குன்றே யனைய குற்றங் கள் எல்லாவற்ை யும் குணம் என்று நீ ஏற் க்கொண்டால் அதனால் நினக்கு யாது குறைவுளதாகும் ? ஒன்றுமில்லையே . ஆதலால் எனது குற் றங்களைப் பொறுத்து இரங்கி அருள் செய்வாயாக என்பதாம் . ஒன்றற்கும் உதவாத குறைவுடைய என்னைப் பிழைக்கும் வண் ணம் ஆட்கொண்டருளிய பெருங்கருணை இப்போது இல்லாமற் போயிற் றோ ? நின் பெருங்கருணை போதலும் வருதலுமுடையதல்லவே என்பார் ' ' ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே இன்றிப் போய்த்தோ தான் என்றார் . போதாத என்னும் பெயரெச்சத் தீறு கெட்டது . போதாமை - குறைவுடைமை உய்ய பிறவித்துன்பத்தினின்றும் பிழைக்க . உளமாம் வகை நம்மையுய்ய வந்தாண்டு ( கோவை 22 ) என்புழிப் பிறவித் துன்பத்திற் பிழைக்க