திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

514 திருவாசக ஆராய்ச்சியுரை ஒப்பில்லாத சிறந்த உண்மையமைந்த புகழ்களையும், பாடினோம் கேட்டிலையோ - வரும் பொழுது பாடினோம்' நீ அவற்றைக் கேட்டா யல்லையோ? வாழி ஈது என்ன உறக்கமோ - வாழ்பவளே, இஃது எத்தகைய உறக்கமோ? வாய் திறவாய் - எங்களுக்கு வாய்திறந்து எதிர் மொழி கூறுகின்றாயில்லையே, ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ - ஆழிப்படையையுடைய திருமால் சிவனிடத்துப் பேரன் புடையர் என்பர்; அவரது அன்புடைமையும் உன்னைப்போல் உறங் கிக்கொண்டு வாய் திறவாமற் கிடப்பது தானோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை - உலகிற்கு மாப்பே ரூழியைச் செய்யும் முதல்வராய் தாம் அழியாது நின்ற முழுமுதல்வரும், ஏழை பங்காளனையே பாடு - உமையம்மையை இடப்பாகத்தி லுடையவருமாகிய இறை வணையே எங்களுடன் சேர்ந்து பாடுவாயாக. எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி! இவள் துயில் எழ வும், பாடவும் அருள் செய்வாயாக (என வேண்டுதலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு எல்லோரும் நீர் நிலையை அடைந்தனர் ) என்பதாம். கோழி சிலம்ப அதனால் குருகுகள் எங்கும் ஒலிசெய்கின்றன; ஏழில் இயம்ப வெண் சங்கு எங்கும் ஊதப்படுகின்றன. (இவற்றால் புலரிக் காலத்தை உணர்ந்து நாங்கள் எழுந்து, பரஞ்சோதியினுடைய கேழ் இல் பரங்கருணையிணையும், கேழ் இல் விழுப்பொருள்களையும் வரும் பொழுது பாடினோம், நீ அவற்றைக் கேட்டாயல்லையோ? வாழ்ப வளே! இஃது எத்தகைய உறக்கமோ? ஆழிப்படையையுடைய திரு மால் சிவபெருமானிடத்துச் செய்யும் அன்புடைமையும் உன்னைப் போல உறங்கிக்கொண்டு வாய் திறவாமற் கிடப்பது தானோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனை எங்களுடன் சேர்ந்து பாடுவாயாக. எம்பாவாய்! இவள் துயிலெழவும், பாடவும் அருள் செய்வாயாக. (என வேண்டுதலும் துயிலெழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு எல்லோரும் நீர் நிலையை அடைந் தனர்) என்பதாம். இருள் புலர்காலத்தில் கோழிகள் கூவா நிற்க அதனைத்தொடர்ந்து குக்கில் குயில் முதலிய பறவைகள் எல்லாத்திசைகளிலும் ஒலித்த லின் கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் " என்றார். சிலம்பல் ஒலித்தல்.''உருமுக்கண் ணுறுதலி னுயர்குர லொலியோடி, நறுவீய நனஞ்சாரற் சிலம்பலில்'" பொருட்டாதல் காண்க. (கலி. 45-5-6) என்புழியும் இப் குருகு - பறவை. ஏழில் - குரல் துத்தம் கைக்கிளை உளை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையும் பிறத்தற்கு இடமாகிய ஏழு துளைகளையுடைய நாகசின்னம். இடம், வீடு; நாடோறும் புலரிக்காலத்தில் **
514 திருவாசக ஆராய்ச்சியுரை ஒப்பில்லாத சிறந்த உண்மையமைந்த புகழ்களையும் பாடினோம் கேட்டிலையோ - வரும் பொழுது பாடினோம் ' நீ அவற்றைக் கேட்டா யல்லையோ ? வாழி ஈது என்ன உறக்கமோ - வாழ்பவளே இஃது எத்தகைய உறக்கமோ ? வாய் திறவாய் - எங்களுக்கு வாய்திறந்து எதிர் மொழி கூறுகின்றாயில்லையே ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ - ஆழிப்படையையுடைய திருமால் சிவனிடத்துப் பேரன் புடையர் என்பர் ; அவரது அன்புடைமையும் உன்னைப்போல் உறங் கிக்கொண்டு வாய் திறவாமற் கிடப்பது தானோ ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை - உலகிற்கு மாப்பே ரூழியைச் செய்யும் முதல்வராய் தாம் அழியாது நின்ற முழுமுதல்வரும் ஏழை பங்காளனையே பாடு - உமையம்மையை இடப்பாகத்தி லுடையவருமாகிய இறை வணையே எங்களுடன் சேர்ந்து பாடுவாயாக . எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி ! இவள் துயில் எழ வும் பாடவும் அருள் செய்வாயாக ( என வேண்டுதலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு எல்லோரும் நீர் நிலையை அடைந்தனர் ) என்பதாம் . கோழி சிலம்ப அதனால் குருகுகள் எங்கும் ஒலிசெய்கின்றன ; ஏழில் இயம்ப வெண் சங்கு எங்கும் ஊதப்படுகின்றன . ( இவற்றால் புலரிக் காலத்தை உணர்ந்து நாங்கள் எழுந்து பரஞ்சோதியினுடைய கேழ் இல் பரங்கருணையிணையும் கேழ் இல் விழுப்பொருள்களையும் வரும் பொழுது பாடினோம் நீ அவற்றைக் கேட்டாயல்லையோ ? வாழ்ப வளே ! இஃது எத்தகைய உறக்கமோ ? ஆழிப்படையையுடைய திரு மால் சிவபெருமானிடத்துச் செய்யும் அன்புடைமையும் உன்னைப் போல உறங்கிக்கொண்டு வாய் திறவாமற் கிடப்பது தானோ ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனை எங்களுடன் சேர்ந்து பாடுவாயாக . எம்பாவாய் ! இவள் துயிலெழவும் பாடவும் அருள் செய்வாயாக . ( என வேண்டுதலும் துயிலெழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு எல்லோரும் நீர் நிலையை அடைந் தனர் ) என்பதாம் . இருள் புலர்காலத்தில் கோழிகள் கூவா நிற்க அதனைத்தொடர்ந்து குக்கில் குயில் முதலிய பறவைகள் எல்லாத்திசைகளிலும் ஒலித்த லின் கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் என்றார் . சிலம்பல் ஒலித்தல் . ' ' உருமுக்கண் ணுறுதலி னுயர்குர லொலியோடி நறுவீய நனஞ்சாரற் சிலம்பலில் ' பொருட்டாதல் காண்க . ( கலி . 45-5-6 ) என்புழியும் இப் குருகு - பறவை . ஏழில் - குரல் துத்தம் கைக்கிளை உளை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையும் பிறத்தற்கு இடமாகிய ஏழு துளைகளையுடைய நாகசின்னம் . இடம் வீடு ; நாடோறும் புலரிக்காலத்தில் **