திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை. எண் தோள் முக்கண் எம்மானே- எட்டுத் திருப்புயங் களையும், மூன்று திருக்கண்களையும் உடைய எங்கள் பெரியோனே, குன்றே அனையாய் - மலையை நிகர்த்த பேரருளுடையவனே, அன்று என்னை ஆட்கொண்ட போது - முன்னாளில் என்னை அடிமை கொண்ட போது, என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் கொண் டிலையோ - எனது உயிரையும் உடம்பையும் பொருள் முழுவதையும் ஏற்றுக்கொண்டாயல்லையோ? இன்று எனக்கு ஓர் இடையூறு உண்டோ - நின்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனக்கு இப்போது யாதாயினும் ஓர் இடையூறு உளதாகுமோ? நன்று செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகம் - உன் அடிமையாகிய எனக்கு நீ நன்மை செய்வாயாயினும் தீமை செய்வாயாயினும் செய்க: அடிமை யாகிய எனக்கு நன்மை தீமை செய்வதற்கு உரிய முதன்மையாளன் நானோ? நீயல்லவா? 1100 எண் தோள் முக்கண் எம்மானே, குன்றே அனையாய், முன்னாளில் என்னை ஆட்கொண்ட போதே எனது உயிர் உடல் பொருள்களை கொண்டனையல்லவா? உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனக்கு இப் பொழுது ஓர் இடையூறு உளதாகுமோ? நீ நன்மை செய்வாயாயினும் தீமை செய்வாயாயினும் செய்க. அடிமையாகிய எனக்கு நன்மை தீமை செய்வதற்குரிய தலைவன் நானோ? நீயல்லவா என்பதாம். அன்றே என்னையாட் கொண்ட போதே எனக் கூட்டுக. தீட்சா குருவுக்குச் சீடன் உயிர் உடல் பொருள் என்னும் மூன்றையும் தட் சணையாகக் கொடுத்துவிட்டமையால், 'என்றன் ஆவியும் உடலும் உடைமைம் யெல்லாமூங் குன்றே யனையாய் என்னையாட்கொண்ட போதே கொண்டிலையோ' என்றார். "கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக, உள்ள பொருளுடல் ஆவி யுடன் ஈக" (திருமந். 1×93) என வருவன காண்க. இன்று - இப்பொழுது. அடியார்க்கு வரும் இடையூறுகளைக் காப்பது ஆண்டானாகிய இறைவன் கடமையாதலின் உண்டோ என்பதில் 'இன்றோ ரிடையூ றெனக்குண்டோ' என்றார். ஓகாரம் எதிர்மறை, குன்றே அனையாய்-மலை போன்ற பேரருளுடை யவனே. ''அருண்மலை யாகவும்" (கீர்த்தி. 124) எனவும், ''மன்னிய திருவருண் மலையே போற்றி" (போற்றி. 128) எனவும், நெஞ்சத், திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி, அருளுமலை யென்பது காண் ஆய்ந்து" (தசாங்கம் 5) என அடிகள் அருளியவாறுங் காண்க. நாய கன் - தலைவன். நின் நாயகம் - நின் முதன்மை. (கோவை 171 உரை இதன் கண், என்னை ஆட்கொண்ட நீ எனக்கோர் இடையூறின்றி அருள் செய்ய வேண்டும் என்பது போதருதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 7
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை . எண் தோள் முக்கண் எம்மானே- எட்டுத் திருப்புயங் களையும் மூன்று திருக்கண்களையும் உடைய எங்கள் பெரியோனே குன்றே அனையாய் - மலையை நிகர்த்த பேரருளுடையவனே அன்று என்னை ஆட்கொண்ட போது - முன்னாளில் என்னை அடிமை கொண்ட போது என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் கொண் டிலையோ - எனது உயிரையும் உடம்பையும் பொருள் முழுவதையும் ஏற்றுக்கொண்டாயல்லையோ ? இன்று எனக்கு ஓர் இடையூறு உண்டோ - நின்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனக்கு இப்போது யாதாயினும் ஓர் இடையூறு உளதாகுமோ ? நன்று செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகம் - உன் அடிமையாகிய எனக்கு நீ நன்மை செய்வாயாயினும் தீமை செய்வாயாயினும் செய்க : அடிமை யாகிய எனக்கு நன்மை தீமை செய்வதற்கு உரிய முதன்மையாளன் நானோ ? நீயல்லவா ? 1100 எண் தோள் முக்கண் எம்மானே குன்றே அனையாய் முன்னாளில் என்னை ஆட்கொண்ட போதே எனது உயிர் உடல் பொருள்களை கொண்டனையல்லவா ? உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனக்கு இப் பொழுது ஓர் இடையூறு உளதாகுமோ ? நீ நன்மை செய்வாயாயினும் தீமை செய்வாயாயினும் செய்க . அடிமையாகிய எனக்கு நன்மை தீமை செய்வதற்குரிய தலைவன் நானோ ? நீயல்லவா என்பதாம் . அன்றே என்னையாட் கொண்ட போதே எனக் கூட்டுக . தீட்சா குருவுக்குச் சீடன் உயிர் உடல் பொருள் என்னும் மூன்றையும் தட் சணையாகக் கொடுத்துவிட்டமையால் ' என்றன் ஆவியும் உடலும் உடைமைம் யெல்லாமூங் குன்றே யனையாய் என்னையாட்கொண்ட போதே கொண்டிலையோ ' என்றார் . கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருளுடல் ஆவி யுடன் ஈக ( திருமந் . 1 × 93 ) என வருவன காண்க . இன்று - இப்பொழுது . அடியார்க்கு வரும் இடையூறுகளைக் காப்பது ஆண்டானாகிய இறைவன் கடமையாதலின் உண்டோ என்பதில் ' இன்றோ ரிடையூ றெனக்குண்டோ ' என்றார் . ஓகாரம் எதிர்மறை குன்றே அனையாய் - மலை போன்ற பேரருளுடை யவனே . ' ' அருண்மலை யாகவும் ( கீர்த்தி . 124 ) எனவும் ' ' மன்னிய திருவருண் மலையே போற்றி ( போற்றி . 128 ) எனவும் நெஞ்சத் திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி அருளுமலை யென்பது காண் ஆய்ந்து ( தசாங்கம் 5 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . நாய கன் - தலைவன் . நின் நாயகம் - நின் முதன்மை . ( கோவை 171 உரை இதன் கண் என்னை ஆட்கொண்ட நீ எனக்கோர் இடையூறின்றி அருள் செய்ய வேண்டும் என்பது போதருதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 7