திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

501 குழைத்தபத்து நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய் மாயப் பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோவிங் கதிகாரம் காயத் திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 1101 ப-ரை. கண்நுதலே - அக்கினிக் சண் பொருந்திய நெற்றியை யுடையவனே, நாயில் கடை ஆம் நாயேனை - நாயினத்தில் கீழ்ப்பட்ட நாய்த் தன்மையுடைய என்னை, நீயே நயந்து ஆட்கொண்டாய் - என் இழிவரலைக் கருதாது நீயாகவே என்னை விரும்பி வந்து ஆட்கொண் டருளினை, மாயப்பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி - மயக்கம் மிகுந்த என் பிறவியை உன் பொறுப்பில் ஒப்பு வித்து விட்டு யான் சும்மா இருக்க வேண்டிய தன்மையல்லாமல், நானோ ஆயக்கடவேன் - அப்பிறவியை நீக்கும் நெறிபற்றி நின் அடிமையாகிய யானோ ஆராயும் உரிமையுடையேன்; இங்கு அதிகாரம் என்னதோ - இதில் ஆக வேண்டியதைச் செய்யும் அதிகாரம் என் னுடையதோ? அல்லவே. ஆதலால், காயத்து இடுவாய் - என்னை உடம்பின்கண் இட்டு வைப்பாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்- அல்லது நின் திருவடியின் கீழ் வைப்பாய்; எதுவும் நின் திருவருள் வழி நிகழ்வதேயாகும். கண்ணுதலே, நாயிற் கடையாம் நாயேனை நீயே விரும்பி வந்து ஆட்கொண்டனை, நின் அடிமையாகிய யான் என் பிறவி ஏதுவை நீக்கி யருளும் செயலை நின்பால் வைத்து விட்டு யான் சும்மா இருக்க வேண் டிய தன்மையல்லாமல் அப்பிறவியை நீக்கும் நெறிபற்றி ஆராய்தலும் இன்னது செய்ய வேண்டும் என்னும் அதிகாரமும் என்னுடையவல்ல. நீ என்னை உடம்பில் இட்டு வைப்பாய்; அல்லது நின் திருவடியின் கீழ் வைப்பாய். எதுவும் நின்திருவருள்வழி நிகழ்வதாகும் என்பதாம். நாயிற் கடையாம் நாயேனை என அடிகள் தம்மைக் கூறியது தம் சிறுமையையும் இறைவன் பெருமையையும் நோக்கியாகும். "நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை'' "பொல்லா நாயான நீசனேனை' "நாயிற் கடைப்பட்ட நம்மை' "நாயினுங்கடைய வெங் கட்டனேனையும்" என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. சத. 39 சத. 51 பூவல்லி 3 கழுக் . 2
501 குழைத்தபத்து நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய் மாயப் பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோவிங் கதிகாரம் காயத் திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே . 1101 - ரை . கண்நுதலே - அக்கினிக் சண் பொருந்திய நெற்றியை யுடையவனே நாயில் கடை ஆம் நாயேனை - நாயினத்தில் கீழ்ப்பட்ட நாய்த் தன்மையுடைய என்னை நீயே நயந்து ஆட்கொண்டாய் - என் இழிவரலைக் கருதாது நீயாகவே என்னை விரும்பி வந்து ஆட்கொண் டருளினை மாயப்பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி - மயக்கம் மிகுந்த என் பிறவியை உன் பொறுப்பில் ஒப்பு வித்து விட்டு யான் சும்மா இருக்க வேண்டிய தன்மையல்லாமல் நானோ ஆயக்கடவேன் - அப்பிறவியை நீக்கும் நெறிபற்றி நின் அடிமையாகிய யானோ ஆராயும் உரிமையுடையேன் ; இங்கு அதிகாரம் என்னதோ - இதில் ஆக வேண்டியதைச் செய்யும் அதிகாரம் என் னுடையதோ ? அல்லவே . ஆதலால் காயத்து இடுவாய் - என்னை உடம்பின்கண் இட்டு வைப்பாய் ; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் அல்லது நின் திருவடியின் கீழ் வைப்பாய் ; எதுவும் நின் திருவருள் வழி நிகழ்வதேயாகும் . கண்ணுதலே நாயிற் கடையாம் நாயேனை நீயே விரும்பி வந்து ஆட்கொண்டனை நின் அடிமையாகிய யான் என் பிறவி ஏதுவை நீக்கி யருளும் செயலை நின்பால் வைத்து விட்டு யான் சும்மா இருக்க வேண் டிய தன்மையல்லாமல் அப்பிறவியை நீக்கும் நெறிபற்றி ஆராய்தலும் இன்னது செய்ய வேண்டும் என்னும் அதிகாரமும் என்னுடையவல்ல . நீ என்னை உடம்பில் இட்டு வைப்பாய் ; அல்லது நின் திருவடியின் கீழ் வைப்பாய் . எதுவும் நின்திருவருள்வழி நிகழ்வதாகும் என்பதாம் . நாயிற் கடையாம் நாயேனை என அடிகள் தம்மைக் கூறியது தம் சிறுமையையும் இறைவன் பெருமையையும் நோக்கியாகும் . நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை ' ' பொல்லா நாயான நீசனேனை ' நாயிற் கடைப்பட்ட நம்மை ' நாயினுங்கடைய வெங் கட்டனேனையும் என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . சத . 39 சத . 51 பூவல்லி 3 கழுக் . 2