திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நயத்தல் - விரும்புதல். நயந்து ஆட்கொண்டாய் என இயையும். இறைவன் அடிகளை நயந்து ஆட்கொண்டமையை, "ஞால மிந்திரன் நான்முகன் வானவர் 1102 நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்” "நாய் வயினுள்ள குணமில்லேனை நற்றொண்டு கொண்ட தீ வயின் மேனியன்" என அடிகள் கூறுதலாலுங் காண்க. “நாயினுங் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்" தே. 76-6 என அப்பரடிகளும் அருளினார். மாயப் பிறவி - மயக்கத்தினைத் தரும் பிறவி: "மாயப் பிறப்பு ' (சிவபுராணம் 14) "மாயப்பிறப் பறுத்தாண்டான்" (பூவல்லி 3) என வும், "மாயப் பிறவி பிறந்து' (சுந். 24-3) "அடி வைத்த மாமுடி மாயப்பிறவி" (திருமந். 1698) என வருவன காண்க. ஆய்தல்- ஆராய்தல். இங்கு என்னதோ அதிகாரம் - யான் உன் அடிமை யானமையின் எனக்குச் சுதந்திரமில்லை என்றபடி. காயம் - உடம்பு. ''காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக" (தே. நாவு. 78-4 என வருதல் காண்க. செத். 9 502 கண்ணார் நுதவோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணா திரவும் பகலுநான் அவையே யெண்ணு மதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே. கோவை.343 இதன் கண், "என்னை நின்னுடைய கழற்கீழ் வைப்பாய்" என்பதே அடிகளின் உள்ளக்கிடக்கையாதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 8 ப-ரை. கண் ஆர் நுதலோய் - கண் பொருந்திய நெற்றியை யுடையவனே, கண்கள் களிகூர கழல் இணைகள் கண்டேன் - என் கண் கள் களிப்பு மிகும்வண்ணம் நின்று திருவடிகள். இரண்டினையும் காணப் பெற்றேன், நான் எண்ணாது இரவும் பகலும் அவையே எண்ணும் அது அல்லால் - நான் பிறிதொன்றனையும் சிந்தியாது இரவும் பகலும் இடையீடின்றி அத்திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதல்லா மல், அண்ணா -உலகு உயிர்களுக்கெல்லாம் மூத்தவனே, மண் மேல் யாக்கை விடுமாறும் - பூவுலகில் இவ்வுடம்பினை நீக்கும் வகையினையும்.
திருவாசக ஆராய்ச்சியுரை நயத்தல் - விரும்புதல் . நயந்து ஆட்கொண்டாய் என இயையும் . இறைவன் அடிகளை நயந்து ஆட்கொண்டமையை ஞால மிந்திரன் நான்முகன் வானவர் 1102 நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் நாய் வயினுள்ள குணமில்லேனை நற்றொண்டு கொண்ட தீ வயின் மேனியன் என அடிகள் கூறுதலாலுங் காண்க . நாயினுங் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய் தே . 76-6 என அப்பரடிகளும் அருளினார் . மாயப் பிறவி - மயக்கத்தினைத் தரும் பிறவி : மாயப் பிறப்பு ' ( சிவபுராணம் 14 ) மாயப்பிறப் பறுத்தாண்டான் ( பூவல்லி 3 ) என வும் மாயப் பிறவி பிறந்து ' ( சுந் . 24-3 ) அடி வைத்த மாமுடி மாயப்பிறவி ( திருமந் . 1698 ) என வருவன காண்க . ஆய்தல் ஆராய்தல் . இங்கு என்னதோ அதிகாரம் - யான் உன் அடிமை யானமையின் எனக்குச் சுதந்திரமில்லை என்றபடி . காயம் - உடம்பு . ' ' காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக ( தே . நாவு . 78-4 என வருதல் காண்க . செத் . 9 502 கண்ணார் நுதவோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணா திரவும் பகலுநான் அவையே யெண்ணு மதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே . கோவை .343 இதன் கண் என்னை நின்னுடைய கழற்கீழ் வைப்பாய் என்பதே அடிகளின் உள்ளக்கிடக்கையாதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 8 - ரை . கண் ஆர் நுதலோய் - கண் பொருந்திய நெற்றியை யுடையவனே கண்கள் களிகூர கழல் இணைகள் கண்டேன் - என் கண் கள் களிப்பு மிகும்வண்ணம் நின்று திருவடிகள் . இரண்டினையும் காணப் பெற்றேன் நான் எண்ணாது இரவும் பகலும் அவையே எண்ணும் அது அல்லால் - நான் பிறிதொன்றனையும் சிந்தியாது இரவும் பகலும் இடையீடின்றி அத்திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதல்லா மல் அண்ணா -உலகு உயிர்களுக்கெல்லாம் மூத்தவனே மண் மேல் யாக்கை விடுமாறும் - பூவுலகில் இவ்வுடம்பினை நீக்கும் வகையினையும் .