திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து 1103 வந்து உன் கழற்கே புகுமாறும் - அதனை விட்டு நீங்கி வந்து உன் திரு வடியில் சேரும் வகையினையும், எண்ண கடவேனோ - எண்ணுதற்கு உரிமையுடையேனோ; அடிமை சால அழகுடைத்தே - அங்ஙனம் எண் ணினால் எனது அடிமைத் தன்மை மிகவும் அழகுடையதே. கி கண்ணார் நுதலோய், நினது திருவடிகள் இரண்டினையும் என் கண் கள் களிப்பு மிகும்வண்ணம் காணப்பெற்றேன்; நான் பிறிதொன் றனையும் எண்ணாது இரவும் பகலும் அத்திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதல்லாமல், மண் மேல் யாக்கையை நீக்கும் வகையினை யும், அதனை விட்டு நீங்கி வந்து உன் திருவடியின் கீழ்ப் புகுமாறும் எண்ணக்கடவேனோ? அங்ஙனம் எண்ணின் என் அடிமை மிக அழ குடையதே என்பதாம். கண்ணார் நுதலோய் என்பதனை “கண்ணார் நெற்றியான் காண்" (237-5) என அப்பரடிகள் அருளினார். சுழலிணைகள் கண்டேன் என் றது இறைவன் தம்மை ஆட்கொண்ட போது கண்ட திருவடிக் காட்சி யினையாகும். எண்ணாது என்றது திருவடிக் காட்சியைப் பெற்ற யான் பிறவிக்கேதுவாகிய உலகியல் எண்ணங்கள் ஒன்றையும் எண்ணாமல் என்றவாறு. இப்போது அத்திருவடிக் காட்சி இல்லையாயினும் கண்ட அந்நினைவையே இரவும் பகலும் இடைவிடாது எண்ணுகின்றேன் என் பார் "இரவும் பகலும் நான் அவையே எண்ணுமது வல்லால்" என் றார். கழல் - திருவடி. அண்ணன் - மூத்தவன். இறைவன் உலகுயிர்க ளுக்கெல்லாம் மூத்தவனாதலின் ‘அண்ணா’ என்றார். "மூத்தவனாய் உல குக்கு முந்தினானே" (தே. 257-1) என அப்பரடிகள் கூறுதலும் காண்க. அடிமை சால அழகுடைத்தே என்றது அடிமை மிகவும் இழி வரலுடைத்து என்னும் இகழ்ச்சிக் குறிப்புப் பொருளையுடையதாகும். இதன் கண், அடிகள் முழுதும் தம்மை இறைவன் பால் ஒப்புவித் தமை தோன்றுதலால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 503 அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நிறை திருமேனி காட்டி யென்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதமெனக்குப் புராண நிதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே யென்னைக் குழைத்தாயே. 9
குழைத்தபத்து 1103 வந்து உன் கழற்கே புகுமாறும் - அதனை விட்டு நீங்கி வந்து உன் திரு வடியில் சேரும் வகையினையும் எண்ண கடவேனோ - எண்ணுதற்கு உரிமையுடையேனோ ; அடிமை சால அழகுடைத்தே - அங்ஙனம் எண் ணினால் எனது அடிமைத் தன்மை மிகவும் அழகுடையதே . கி கண்ணார் நுதலோய் நினது திருவடிகள் இரண்டினையும் என் கண் கள் களிப்பு மிகும்வண்ணம் காணப்பெற்றேன் ; நான் பிறிதொன் றனையும் எண்ணாது இரவும் பகலும் அத்திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதல்லாமல் மண் மேல் யாக்கையை நீக்கும் வகையினை யும் அதனை விட்டு நீங்கி வந்து உன் திருவடியின் கீழ்ப் புகுமாறும் எண்ணக்கடவேனோ ? அங்ஙனம் எண்ணின் என் அடிமை மிக அழ குடையதே என்பதாம் . கண்ணார் நுதலோய் என்பதனை கண்ணார் நெற்றியான் காண் ( 237-5 ) என அப்பரடிகள் அருளினார் . சுழலிணைகள் கண்டேன் என் றது இறைவன் தம்மை ஆட்கொண்ட போது கண்ட திருவடிக் காட்சி யினையாகும் . எண்ணாது என்றது திருவடிக் காட்சியைப் பெற்ற யான் பிறவிக்கேதுவாகிய உலகியல் எண்ணங்கள் ஒன்றையும் எண்ணாமல் என்றவாறு . இப்போது அத்திருவடிக் காட்சி இல்லையாயினும் கண்ட அந்நினைவையே இரவும் பகலும் இடைவிடாது எண்ணுகின்றேன் என் பார் இரவும் பகலும் நான் அவையே எண்ணுமது வல்லால் என் றார் . கழல் - திருவடி . அண்ணன் - மூத்தவன் . இறைவன் உலகுயிர்க ளுக்கெல்லாம் மூத்தவனாதலின் அண்ணா என்றார் . மூத்தவனாய் உல குக்கு முந்தினானே ( தே . 257-1 ) என அப்பரடிகள் கூறுதலும் காண்க . அடிமை சால அழகுடைத்தே என்றது அடிமை மிகவும் இழி வரலுடைத்து என்னும் இகழ்ச்சிக் குறிப்புப் பொருளையுடையதாகும் . இதன் கண் அடிகள் முழுதும் தம்மை இறைவன் பால் ஒப்புவித் தமை தோன்றுதலால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 503 அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நிறை திருமேனி காட்டி யென்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதமெனக்குப் புராண நிதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே யென்னைக் குழைத்தாயே . 9