திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: உடையானே - என்னை ஆளாக உடையவனே, குழகா- இளமையையுடையவனே, கோலமறையோனே - அழகிய அந்தணனே, கோனே- தலைவனே, அடிநாயேன் அழகே புரிந்திட்டு அரற்றுகின் றேன் - உனது அடிமையாகிய நாயினேன் எனது அடிமைத் தன்மைக்கு அழகல்லாத காரியத்தைச் செய்துவிட்டு நின்னைப் பெறுமாறு அலறு கின்றேன்; திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய்- ஒளி விளங்காநின்ற நினது பரமாசாரியத் திருமேனியைக் காட்டி வலிய வந்து என்னை ஏவல் கொண்டாய்; அங்ஙனம் பணி கொண்ட, புராண நீ - பழமையாகிய நீ, புகழே பெரியபதம் எனக்கு தந்தரு ளாது பொய்யில் புகழமைந்த பெரிய வீடுபேற்றினைத் தந்தருளாமல், என்னை குழைத்தாயே - என்னைத் தளரச் செய்தனையே. 1104 . இறைவனே, உனது அடிமையாகிய நாயினேன் எனது அடிமைத் தன்மைக்கு அழகல்லாத காரியத்தைச் செய்துவிட்டு அரற்றுகிறேன்; திகழநின்ற திருமேனியைக் காட்டி என்னைப் பணிகொண்டாய். அங் ஙனம் பணிகொண்ட நீ பெரும்பதமாகிய வீடுபேற்றினைத் தந்தருளா மல் என்னைத் தளரச் செய்தனை. இது தகுமோ? என்பதாம். அழகே புரிந்திட்டு என்பதற்கு 'அடிமை சால வழகுடைத்தே' (9) என முதற்றிருப்பாட்டில் இகழ்ச்சிக் குறிப்பாகக் கூறப்பட்ட பொரு ளையே அநுவதித்து எனது அடிமைத்தன்மைக்கு அழகல்லாத காரியத் தைச் செய்துவிட்டு என உரைக்கப்பட்டது. திகழா நின்ற திருமேனி- பொன் போல் ஒளி விளங்கா நின்ற திருமேனி. "பொன்னே திகழுந் திருமேனி எந்தாய்" (சத. 59) என அடிகள் கூறுதல் காண்க. "திரு மேனி காட்டி என்னைப் புணி கொண்டாய்" என அடிகள் பணி கொண்டபோது அமைந்த பரமாசாரியத் திருமேனியையே கூறுகின்றா ராதலின் திகழா நின்ற திருமேனி என்பதற்குச் செந்தழல் போல் விளங்கா நின்ற திருமேனி என உரைப்பினும் அமையும். "செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி திருப்பள்ளி.8 அந்தண னாவதுங் காட்டி வந்தாண்டாய்" தழல் சேர்தரு என அடிகள் பிறாண்டும் அருளியவாறுங் காண்க. திருமேனியர்" (12-7) "தழலார் மேனி" (71-7) "தழல் புரைதிரு மேனி" (240-3) "தழல் கொள் மேனியவன்" (338-2) எனச் சம்பந் தரும், "தழல் கொள் மேனியர்" (165-8) "தழல் போல்வதோர் மேனி" (211-2) "தழல் போல் மேனி அன்னான்" (242-2) என அப்ப ரும் அருளியவாறும் ஈண்டறியற்பாலன. என்னை வலிய வந்து பணி கொண்ட நீ நான் நின்பாற் கேளாமலே புகழமைந்த பெரிய வீடு பேற்றினையும் தந்தருள வேண்டியதாகும். அங்ஙனம் தராது என்னைத்
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : உடையானே - என்னை ஆளாக உடையவனே குழகா இளமையையுடையவனே கோலமறையோனே - அழகிய அந்தணனே கோனே- தலைவனே அடிநாயேன் அழகே புரிந்திட்டு அரற்றுகின் றேன் - உனது அடிமையாகிய நாயினேன் எனது அடிமைத் தன்மைக்கு அழகல்லாத காரியத்தைச் செய்துவிட்டு நின்னைப் பெறுமாறு அலறு கின்றேன் ; திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய் ஒளி விளங்காநின்ற நினது பரமாசாரியத் திருமேனியைக் காட்டி வலிய வந்து என்னை ஏவல் கொண்டாய் ; அங்ஙனம் பணி கொண்ட புராண நீ - பழமையாகிய நீ புகழே பெரியபதம் எனக்கு தந்தரு ளாது பொய்யில் புகழமைந்த பெரிய வீடுபேற்றினைத் தந்தருளாமல் என்னை குழைத்தாயே - என்னைத் தளரச் செய்தனையே . 1104 . இறைவனே உனது அடிமையாகிய நாயினேன் எனது அடிமைத் தன்மைக்கு அழகல்லாத காரியத்தைச் செய்துவிட்டு அரற்றுகிறேன் ; திகழநின்ற திருமேனியைக் காட்டி என்னைப் பணிகொண்டாய் . அங் ஙனம் பணிகொண்ட நீ பெரும்பதமாகிய வீடுபேற்றினைத் தந்தருளா மல் என்னைத் தளரச் செய்தனை . இது தகுமோ ? என்பதாம் . அழகே புரிந்திட்டு என்பதற்கு ' அடிமை சால வழகுடைத்தே ' ( 9 ) என முதற்றிருப்பாட்டில் இகழ்ச்சிக் குறிப்பாகக் கூறப்பட்ட பொரு ளையே அநுவதித்து எனது அடிமைத்தன்மைக்கு அழகல்லாத காரியத் தைச் செய்துவிட்டு என உரைக்கப்பட்டது . திகழா நின்ற திருமேனி பொன் போல் ஒளி விளங்கா நின்ற திருமேனி . பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் ( சத . 59 ) என அடிகள் கூறுதல் காண்க . திரு மேனி காட்டி என்னைப் புணி கொண்டாய் என அடிகள் பணி கொண்டபோது அமைந்த பரமாசாரியத் திருமேனியையே கூறுகின்றா ராதலின் திகழா நின்ற திருமேனி என்பதற்குச் செந்தழல் போல் விளங்கா நின்ற திருமேனி என உரைப்பினும் அமையும் . செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி திருப்பள்ளி .8 அந்தண னாவதுங் காட்டி வந்தாண்டாய் தழல் சேர்தரு என அடிகள் பிறாண்டும் அருளியவாறுங் காண்க . திருமேனியர் ( 12-7 ) தழலார் மேனி ( 71-7 ) தழல் புரைதிரு மேனி ( 240-3 ) தழல் கொள் மேனியவன் ( 338-2 ) எனச் சம்பந் தரும் தழல் கொள் மேனியர் ( 165-8 ) தழல் போல்வதோர் மேனி ( 211-2 ) தழல் போல் மேனி அன்னான் ( 242-2 ) என அப்ப ரும் அருளியவாறும் ஈண்டறியற்பாலன . என்னை வலிய வந்து பணி கொண்ட நீ நான் நின்பாற் கேளாமலே புகழமைந்த பெரிய வீடு பேற்றினையும் தந்தருள வேண்டியதாகும் . அங்ஙனம் தராது என்னைத்