திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து தளர வைத்தது தகுமோ என்பார், 'என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம் எனக்குத் தந்தருளாது என்னைக் குழைத்தாயே' என்றார். புகழ்ப்பதம் பெரிய பதம் எனத் தனித்தனி இயையும். அழகே, புகழே, அருளாதே, குழைத்தாயே என்பவற்றில் ஏகாரம் அசை. பழையோனாதலின் 'புராண' என்றார். "மிகவும் பழையான் தன்னை" (224-7) "சாலப் பழையர்" (230-7) "ஆதி புராணனாய் நின்றாய் போற்றி" (268-8) என் அப்பர் தேவாரத்தும் வருவன காண்க. குழகா என்பதற்கு அழகுடையவனே எனவும் கொள்ளலா மாயினும் ''கோலமறையோனே" எனப் பின்னர் வருதலான் இளமை யுடையோனே என உரைக்கப்பட்டது. கோலமறையோன் என்றது அந்தணனாய் வந்த பரமாசாரியத் திருவுருவை. "அந்தணனாவதுங் காட்டி வந்தாண்டாய்" (பள்ளி. 8) என வருதல் காண்க. இதன் கண், புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்தருள வேண்டுமென்பதே அடிகள் திருவுள்ளக் கிடக்கையாதலின் ஆத்தும் நிவேதனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க 10 ஸ்ரீசம் 21 1105 பிரேவிக்ன 160
குழைத்தபத்து தளர வைத்தது தகுமோ என்பார் ' என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம் எனக்குத் தந்தருளாது என்னைக் குழைத்தாயே ' என்றார் . புகழ்ப்பதம் பெரிய பதம் எனத் தனித்தனி இயையும் . அழகே புகழே அருளாதே குழைத்தாயே என்பவற்றில் ஏகாரம் அசை . பழையோனாதலின் ' புராண ' என்றார் . மிகவும் பழையான் தன்னை ( 224-7 ) சாலப் பழையர் ( 230-7 ) ஆதி புராணனாய் நின்றாய் போற்றி ( 268-8 ) என் அப்பர் தேவாரத்தும் வருவன காண்க . குழகா என்பதற்கு அழகுடையவனே எனவும் கொள்ளலா மாயினும் ' ' கோலமறையோனே எனப் பின்னர் வருதலான் இளமை யுடையோனே என உரைக்கப்பட்டது . கோலமறையோன் என்றது அந்தணனாய் வந்த பரமாசாரியத் திருவுருவை . அந்தணனாவதுங் காட்டி வந்தாண்டாய் ( பள்ளி . 8 ) என வருதல் காண்க . இதன் கண் புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்தருள வேண்டுமென்பதே அடிகள் திருவுள்ளக் கிடக்கையாதலின் ஆத்தும் நிவேதனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க 10 ஸ்ரீசம் 21 1105 பிரேவிக்ன 160