திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

34.உயிருண்ணிப்பத்து சிவானந்தம் மேலிடுதல் திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது உயிருண்ணிப்பத்து என்பது உயிரின் இயல்புகளை அடக்கி இறை வன் திருவருள் மேம்பட்டு நிற்கும் நிலைமையை விளக்குகின்ற பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகமாகும். "எந்நாட்களித் தெந்நாளிறு மாக்கேன்" எனவும், "வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன்" எனவும், "மத்தோன்மத்தனாக்கி" எனவும், "மனத்தான் கண்ணினகத் தான் மறு மாற்றத்திடை யானே" எனவும், "திருப்பெருந்துறையிறை சீர் கற்றாங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்து" எனவும், "உடலு மெனதுயிரும் புகுந் தொழியாவண்ண நிறைந்தான்" எனவும், "சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறைதாள்" எனவும், "உனை யான் கோற்றேனெனக் கென்கோ குரை கடல் வாயமு தென்கோ" எனவும், "நிச்சமென நெஞ்சின்மன்னி யானாகிநின்றானே" எனவும், "நான் பாவியன் ஆனாலுனை நல்காய் எனலாமே" எனவும் வரும் பகுதிகள் உயிரைத் தன்னுள் அடக்கும் இறைவன் பகுதிகளா தல் காண்க. இதன் உள்ளுறை சிவானந்தம் மேலிடுதல் என்பது இறைவனது இன்பம் உயிரைத் தன்னுள் அடக்கி மேம்படுதல் என்பது பொருள். இதனைத் திருவாசகச் சிறப்புடையார், 504 "தழைத்து வளர் பேரின்பந் தானாகி யுயிர் தோன்றாத் தன்மை யாய்த்துன் பொழித்துநிறை வைப்பெறுத லுயிருண்ணிப் பத்தாவிங் குரைத்த தாமே" எனக் கூறுதலுங் காண்க. இது கலிவிருத்தம் என்னும் பாவகையால் அமைந்தது. கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் பைந்நாப்பட வரவேரல்கு லுமைபாகம் தாபென் மெய்ந்நாடொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை யுறைவாய் எந்நாட்களித் தெந்நாளிறு மாக்கேனினி யானே.
34.உயிருண்ணிப்பத்து சிவானந்தம் மேலிடுதல் திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது உயிருண்ணிப்பத்து என்பது உயிரின் இயல்புகளை அடக்கி இறை வன் திருவருள் மேம்பட்டு நிற்கும் நிலைமையை விளக்குகின்ற பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகமாகும் . எந்நாட்களித் தெந்நாளிறு மாக்கேன் எனவும் வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனவும் மத்தோன்மத்தனாக்கி எனவும் மனத்தான் கண்ணினகத் தான் மறு மாற்றத்திடை யானே எனவும் திருப்பெருந்துறையிறை சீர் கற்றாங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்து எனவும் உடலு மெனதுயிரும் புகுந் தொழியாவண்ண நிறைந்தான் எனவும் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறைதாள் எனவும் உனை யான் கோற்றேனெனக் கென்கோ குரை கடல் வாயமு தென்கோ எனவும் நிச்சமென நெஞ்சின்மன்னி யானாகிநின்றானே எனவும் நான் பாவியன் ஆனாலுனை நல்காய் எனலாமே எனவும் வரும் பகுதிகள் உயிரைத் தன்னுள் அடக்கும் இறைவன் பகுதிகளா தல் காண்க . இதன் உள்ளுறை சிவானந்தம் மேலிடுதல் என்பது இறைவனது இன்பம் உயிரைத் தன்னுள் அடக்கி மேம்படுதல் என்பது பொருள் . இதனைத் திருவாசகச் சிறப்புடையார் 504 தழைத்து வளர் பேரின்பந் தானாகி யுயிர் தோன்றாத் தன்மை யாய்த்துன் பொழித்துநிறை வைப்பெறுத லுயிருண்ணிப் பத்தாவிங் குரைத்த தாமே எனக் கூறுதலுங் காண்க . இது கலிவிருத்தம் என்னும் பாவகையால் அமைந்தது . கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் பைந்நாப்பட வரவேரல்கு லுமைபாகம் தாபென் மெய்ந்நாடொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை யுறைவாய் எந்நாட்களித் தெந்நாளிறு மாக்கேனினி யானே .