திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

உயிருண்ணிப்பத்து பினைத்தான்புகுந் தெல்லேபெருந் துறையிலுறை பெம்மான் மனத்தான்கண்ணி னகத்தான்மறு மாற்றத்திடை யானே. 1117 ப-ரை. பெருந்துறையில் உறை பெம்மான் - திருப்பெருந்துறை யில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தான் புகுந்து எனது என்பின் புரை உருக்கி - தானாகவே வலிய வந்து எனது எலும்பின் உட்டுளைப் பகுதிகளையும் உருகச் செய்து, பினை தான் புகுந்து எல்லே எனை ஆண்டான் - பின்னர் அதனூடாகத் தான் புகுந்து வெளியாக என்னை அடிமை கொண்டான், மனத்தான் - அவன் என் மனத்தின் கண்ணுமா யினான், கண்ணின் அகத்தான் - கண்ணின் அகத்துமாயினன், மறு மாற் றத்திடையான் - மற்று என் வாக்கின் கண்ணும் உளனாயினன், வியன் உலகில் வினைக்கேடரும் பிறர் உளரோ - அகன்ற இந்நிலவுலகில் அவ னைப் போலத் தமக்கென ஆற்றும் வினையொன்றுமில்லாதவர் பிறர் எவரும் உளரோ? பெரியோர்களே! சொல்வீர்களாக. திருப்பெருந்துறை உறை பெருமான் தானாகவே வலிய வந்து என் உடம்பின் புரை உருக்கி, பின்னர் தான் புகுந்து வெளிப்படையாக என்னை அடிமை கொண்டனன். அவன் மனத்தின் கண்ணும் கண்ணின் அகத்தும் வாக்கின்கண்ணுமுள்ளான். உலகில் அவனைப் போல வினைக் கேடரும் உளரோ? பெரியோர்களே! சொல்வீர்களாக என்பதாம். இறைவன் சங்கற்ப மாத்திரையாகச் செய்யும் வினைகள் யாவும் உயிர்களின் பொருட்டாதலின் வினைக்கேடன் என்பதற்குத் தனக் கென ஆற்றும் வினையொன்றுமில்லாதவன் எனப் பொருளுரைக்கப் பட்டது. சொல்லீர் என்னும் பயனிலைக்குப் பெரியோர் என்னும் எழு வாய் வருவிக்கப்பட்டது. எனை ஆண்டான் என இயையும். தான் புகுந்து என்றது தான் பரமாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து என்ற வாறு. என்பின் புரை - என்பின் உட்டுளை. என்பின் புரை உருக்கி என எலும்பினை உருக்குதல் கூறினமை உடம்பில் என்பு வன்பொருளா யிருத்தல் பற்றியாகும். எனவே உடம்பு முழுவதையும் உருகச்செய்து என்பது பொருளாகும். அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக" "அரைசனே அன்பருக் கடியனே னுடைய அப்பனே யாவியோ டாக்கை கோயிற் 2 புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கி" கோயிற்.3 என அடிகள் அருளியவாறுங் காண்க. இறைவனால் ஆட்கொள்ளப்
உயிருண்ணிப்பத்து பினைத்தான்புகுந் தெல்லேபெருந் துறையிலுறை பெம்மான் மனத்தான்கண்ணி னகத்தான்மறு மாற்றத்திடை யானே . 1117 - ரை . பெருந்துறையில் உறை பெம்மான் - திருப்பெருந்துறை யில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் தான் புகுந்து எனது என்பின் புரை உருக்கி - தானாகவே வலிய வந்து எனது எலும்பின் உட்டுளைப் பகுதிகளையும் உருகச் செய்து பினை தான் புகுந்து எல்லே எனை ஆண்டான் - பின்னர் அதனூடாகத் தான் புகுந்து வெளியாக என்னை அடிமை கொண்டான் மனத்தான் - அவன் என் மனத்தின் கண்ணுமா யினான் கண்ணின் அகத்தான் - கண்ணின் அகத்துமாயினன் மறு மாற் றத்திடையான் - மற்று என் வாக்கின் கண்ணும் உளனாயினன் வியன் உலகில் வினைக்கேடரும் பிறர் உளரோ - அகன்ற இந்நிலவுலகில் அவ னைப் போலத் தமக்கென ஆற்றும் வினையொன்றுமில்லாதவர் பிறர் எவரும் உளரோ ? பெரியோர்களே ! சொல்வீர்களாக . திருப்பெருந்துறை உறை பெருமான் தானாகவே வலிய வந்து என் உடம்பின் புரை உருக்கி பின்னர் தான் புகுந்து வெளிப்படையாக என்னை அடிமை கொண்டனன் . அவன் மனத்தின் கண்ணும் கண்ணின் அகத்தும் வாக்கின்கண்ணுமுள்ளான் . உலகில் அவனைப் போல வினைக் கேடரும் உளரோ ? பெரியோர்களே ! சொல்வீர்களாக என்பதாம் . இறைவன் சங்கற்ப மாத்திரையாகச் செய்யும் வினைகள் யாவும் உயிர்களின் பொருட்டாதலின் வினைக்கேடன் என்பதற்குத் தனக் கென ஆற்றும் வினையொன்றுமில்லாதவன் எனப் பொருளுரைக்கப் பட்டது . சொல்லீர் என்னும் பயனிலைக்குப் பெரியோர் என்னும் எழு வாய் வருவிக்கப்பட்டது . எனை ஆண்டான் என இயையும் . தான் புகுந்து என்றது தான் பரமாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து என்ற வாறு . என்பின் புரை - என்பின் உட்டுளை . என்பின் புரை உருக்கி என எலும்பினை உருக்குதல் கூறினமை உடம்பில் என்பு வன்பொருளா யிருத்தல் பற்றியாகும் . எனவே உடம்பு முழுவதையும் உருகச்செய்து என்பது பொருளாகும் . அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக அரைசனே அன்பருக் கடியனே னுடைய அப்பனே யாவியோ டாக்கை கோயிற் 2 புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கி கோயிற் .3 என அடிகள் அருளியவாறுங் காண்க . இறைவனால் ஆட்கொள்ளப்