திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

உயிருண்ணிப்பத்து சடை னால், கெடுவீர் - அவ்வுபாயத்தினால் வாசனாமலம் முழுவதும் நீங்காது கேடடைவீர்கள்; அவ்வாசனா மலம் முழுவதும் நீங்க வேண்டுமானால், ஓடி வம்மின் - விரைந்து ஓடி வாருங்கள், தெற்றார் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கற்று - பின்னலுற்ற முடியை உடையவனும் நிலைபெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளி யிருக்கும் பரமாசாரியனுமாகிய இறைவனது பொய்தீர்புகழ்களை ஓதி உணர்ந்து கொண்டு, ஆங்கு அவன் கழல் பேணினரொடும் கலந்து கூடு மின் - அவ்விறைவனது திருவடியை இடைவிடாது தியானிக்கின்ற மெய்யடியார்களோடும் அளவளாவிக் கூடியிருங்கள். உலகினிடத்துப் பற்றுக்களாகிய அவை அற்றீர்களாய்ப் பற்றப் படும் பற்றற்றான் பற்றாகிய அதனைப்பற்றி அதனுள் உபாயத்தினை இடைவிடாது செய்து, நல்லதாகிய கதியை அடைவோம் என்று நீங் கள் எண்ணுவீர்களானால் அவ்வுபாயத்தினால் வாசனாமலம் முழுவதும் நீங்காமையின் கெடுவீர். அவ்வாசனா மலம் முழுவதும் நீங்க வேண்டு மானால் ஓடி வாருங்கள். இறைவனது பொய்தீர் புகழ்களை ஓதி யுணர்ந்து கொண்டு அவ்விறைவனது திருவடியை இடைவிடாது தியா னிக்கின்ற மெய்யடியார்களோடும் கலந்து கூடுமின்; அங்ஙனம் செய்த லினாலேயே வீடுபேற்றினை உறுதியாகப் பெறுவீர் என்பதாம். 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு'' என்னும் திருக்குறளில் உலகப்பற்றறுதற்குப் பற்றற்றான் பற்றினைப் பற்ற வேண்டும் எனவும், அப்பற்றினாலுளதாகும் வாச்னையை நீக்கு தற்கு அதனுள் உபாயமாகிய அப்பற்றினைப் பற்ற வேண்டும் எனவும் கூறப்படுதலின் அத்திருக்குறட் கருத்தினை அனுவதித்தே 'பற்றாங் கவை யற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோம்' என அடிகள் அருளிச் செய்தனர். அவ்வளவில் வாசனாமலம் முழுவதும் நீங்காதென்பதை வலியுறுத்தவே "நற்றாங் கதியடைவோமெனிற் கெடுவீர்" என்றார். ஓடி வம்மின் என்ற அழைப்பு பற்றற்ற பின்பும் வாசனாமலத்தால் கேடடையாது வீடு பேறடைவதற்கு நெறி இது வாகும் என அதனைக் கூறும் இரக்கமிகுதி பற்றியாகும். இத்திருப் பாட்டின் கருத்தினை, "செம்மலர் நோன்றாள் சேர லொட்டா வம்மலங் கழிஇ மன்பரொடு மரீஇ 1113 மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனெனத் தொழுமே' என்னும் சிவஞானபோதத்தாலுமுணர்க. ஆங்கவை ஒரு சொல்லாகவும் கொள்ளலாம். நன்றாம் கதி நற் றாம்கதியென எதுகை நோக்கி வலித்தது. தெற்றுதல், பின்னுதல்,
உயிருண்ணிப்பத்து சடை னால் கெடுவீர் - அவ்வுபாயத்தினால் வாசனாமலம் முழுவதும் நீங்காது கேடடைவீர்கள் ; அவ்வாசனா மலம் முழுவதும் நீங்க வேண்டுமானால் ஓடி வம்மின் - விரைந்து ஓடி வாருங்கள் தெற்றார் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கற்று - பின்னலுற்ற முடியை உடையவனும் நிலைபெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளி யிருக்கும் பரமாசாரியனுமாகிய இறைவனது பொய்தீர்புகழ்களை ஓதி உணர்ந்து கொண்டு ஆங்கு அவன் கழல் பேணினரொடும் கலந்து கூடு மின் - அவ்விறைவனது திருவடியை இடைவிடாது தியானிக்கின்ற மெய்யடியார்களோடும் அளவளாவிக் கூடியிருங்கள் . உலகினிடத்துப் பற்றுக்களாகிய அவை அற்றீர்களாய்ப் பற்றப் படும் பற்றற்றான் பற்றாகிய அதனைப்பற்றி அதனுள் உபாயத்தினை இடைவிடாது செய்து நல்லதாகிய கதியை அடைவோம் என்று நீங் கள் எண்ணுவீர்களானால் அவ்வுபாயத்தினால் வாசனாமலம் முழுவதும் நீங்காமையின் கெடுவீர் . அவ்வாசனா மலம் முழுவதும் நீங்க வேண்டு மானால் ஓடி வாருங்கள் . இறைவனது பொய்தீர் புகழ்களை ஓதி யுணர்ந்து கொண்டு அவ்விறைவனது திருவடியை இடைவிடாது தியா னிக்கின்ற மெய்யடியார்களோடும் கலந்து கூடுமின் ; அங்ஙனம் செய்த லினாலேயே வீடுபேற்றினை உறுதியாகப் பெறுவீர் என்பதாம் . ' பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ' ' என்னும் திருக்குறளில் உலகப்பற்றறுதற்குப் பற்றற்றான் பற்றினைப் பற்ற வேண்டும் எனவும் அப்பற்றினாலுளதாகும் வாச்னையை நீக்கு தற்கு அதனுள் உபாயமாகிய அப்பற்றினைப் பற்ற வேண்டும் எனவும் கூறப்படுதலின் அத்திருக்குறட் கருத்தினை அனுவதித்தே ' பற்றாங் கவை யற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோம் ' என அடிகள் அருளிச் செய்தனர் . அவ்வளவில் வாசனாமலம் முழுவதும் நீங்காதென்பதை வலியுறுத்தவே நற்றாங் கதியடைவோமெனிற் கெடுவீர் என்றார் . ஓடி வம்மின் என்ற அழைப்பு பற்றற்ற பின்பும் வாசனாமலத்தால் கேடடையாது வீடு பேறடைவதற்கு நெறி இது வாகும் என அதனைக் கூறும் இரக்கமிகுதி பற்றியாகும் . இத்திருப் பாட்டின் கருத்தினை செம்மலர் நோன்றாள் சேர லொட்டா வம்மலங் கழிஇ மன்பரொடு மரீஇ 1113 மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனெனத் தொழுமே ' என்னும் சிவஞானபோதத்தாலுமுணர்க . ஆங்கவை ஒரு சொல்லாகவும் கொள்ளலாம் . நன்றாம் கதி நற் றாம்கதியென எதுகை நோக்கி வலித்தது . தெற்றுதல் பின்னுதல்