திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை முறுகுதல், முடியான் இறை என இயையும். ஆங்கவன் - அவன். கழல் பேணுதல் - திருவடியை இடைவிடாது சிந்தித்தல். கலத்தல்-அள வளாவி இணங்குதல். 1114 இதன்கண், தாம் பெற்ற சிவானந்த மேலீட்டினைப் பற்றற்றாரும் பெறச் செய்ய வேண்டும் என்னும் அருளினால் ஓடி வம்மின் என அழைக்கும் தன்மைபற்றிப் பதிகப்பொருள் போதருதல் காண்க? 5 509 கடலின்றிரை யதுபோல்வரு கலக்கமல மறுத்தென் உடலும்மென துயிரும்புகுந் தொழியாவண்ண நிறைந்தான் சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை யுறையும் படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்றான் செய்த படிறே. ப-ரை. சுடரும் சுடர் மதி சூடிய - விளங்குகின்ற ஒளியையுடைய திங்கள் சூடிய, திருப்பெருந்துறை உறையும் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற, படரும் சடை மகுடத்து எங்கள் பரன் தான் செய்த படிறு - பரந்த சடை முடியையுடைய எங்கள் மேலோன் எனக் குச் செய்த சூழ்ச்சி யாதெனில், கடலின் திரையது போல் வரு கலக் கம் மலம் அறுத்து - கடலின் திரையைப் போல இடையறாது மேன் மேலும் வந்து கொண்டிருக்கின்ற மனக்கலக்கத்திற்கு ஏதுவாகிய மும் மலங்களையும் அழித்து, என் உடலும் எனது உயிரும் புகுந்து - எனது உடலினுள்ளும் எனது உயிரினுள்ளும் புகுந்து, ஒழியா வண்ணம் நிறைந்தான் - நீங்காவண்ணம் நிறைந்துள்ளான். திருப்பெருந்துறை உறையும் எங்கள் பரன் எனக்குச் செய்த சூழ்ச்சி யாதெனில், கடலின் திரைபோல் இடையறாது மேலும் மேலும் வருகின்ற மனக்கலக்கத்திற்கு ஏதுவாகிய மும்மலங்களையும் அழித்து என் உடலினுள்ளும் உயிரினுள்ளும் புகுந்து நீங்காவண்ணம் நிறைந்துள்ளான் என்பதாம். மலத்தின் பற்றினால் உயிர்க்கு உளதாகும் மனத்துன்பம் டை யறாது மென்மேலும் வந்து கொண்டேயிருத்தலின் "கடலின் திரையது போல் வரு கலக்கம்" என்றார். கலக்கம் மலம் - கலக்கத்திற்கு ஏது வாகிய மலம். மலம் - ஆணவம், கன்மம், மாயை என்பன. எனது உடலும் எனது உயிரும் புகுந்து என்றது உடலினையும் உயிரினையும் தனது அருளினால் உருகும் வண்ணம் செய்து நின்றமைபற்றியாகும். நிறைந்தான் என்பதற்கு உடலளவிலும் உயிரளவிலும் நிறைவுற்றான்
திருவாசக ஆராய்ச்சியுரை முறுகுதல் முடியான் இறை என இயையும் . ஆங்கவன் - அவன் . கழல் பேணுதல் - திருவடியை இடைவிடாது சிந்தித்தல் . கலத்தல் - அள வளாவி இணங்குதல் . 1114 இதன்கண் தாம் பெற்ற சிவானந்த மேலீட்டினைப் பற்றற்றாரும் பெறச் செய்ய வேண்டும் என்னும் அருளினால் ஓடி வம்மின் என அழைக்கும் தன்மைபற்றிப் பதிகப்பொருள் போதருதல் காண்க ? 5 509 கடலின்றிரை யதுபோல்வரு கலக்கமல மறுத்தென் உடலும்மென துயிரும்புகுந் தொழியாவண்ண நிறைந்தான் சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை யுறையும் படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்றான் செய்த படிறே . - ரை . சுடரும் சுடர் மதி சூடிய - விளங்குகின்ற ஒளியையுடைய திங்கள் சூடிய திருப்பெருந்துறை உறையும் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற படரும் சடை மகுடத்து எங்கள் பரன் தான் செய்த படிறு - பரந்த சடை முடியையுடைய எங்கள் மேலோன் எனக் குச் செய்த சூழ்ச்சி யாதெனில் கடலின் திரையது போல் வரு கலக் கம் மலம் அறுத்து - கடலின் திரையைப் போல இடையறாது மேன் மேலும் வந்து கொண்டிருக்கின்ற மனக்கலக்கத்திற்கு ஏதுவாகிய மும் மலங்களையும் அழித்து என் உடலும் எனது உயிரும் புகுந்து - எனது உடலினுள்ளும் எனது உயிரினுள்ளும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான் - நீங்காவண்ணம் நிறைந்துள்ளான் . திருப்பெருந்துறை உறையும் எங்கள் பரன் எனக்குச் செய்த சூழ்ச்சி யாதெனில் கடலின் திரைபோல் இடையறாது மேலும் மேலும் வருகின்ற மனக்கலக்கத்திற்கு ஏதுவாகிய மும்மலங்களையும் அழித்து என் உடலினுள்ளும் உயிரினுள்ளும் புகுந்து நீங்காவண்ணம் நிறைந்துள்ளான் என்பதாம் . மலத்தின் பற்றினால் உயிர்க்கு உளதாகும் மனத்துன்பம் டை யறாது மென்மேலும் வந்து கொண்டேயிருத்தலின் கடலின் திரையது போல் வரு கலக்கம் என்றார் . கலக்கம் மலம் - கலக்கத்திற்கு ஏது வாகிய மலம் . மலம் - ஆணவம் கன்மம் மாயை என்பன . எனது உடலும் எனது உயிரும் புகுந்து என்றது உடலினையும் உயிரினையும் தனது அருளினால் உருகும் வண்ணம் செய்து நின்றமைபற்றியாகும் . நிறைந்தான் என்பதற்கு உடலளவிலும் உயிரளவிலும் நிறைவுற்றான்