திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

உயிருண்ணிப்பத்து 1115 என்பதே பொருளாயினும் இறைவனது சர்வவியாபகத்துள் (முழு நிறைவினுள்) அவை அடங்கின என்பதே கருத்தாகும். சுடர் மதி - வெண்சுடரையுடைத்தாகிய மதி. "சுருடரு செஞ் சடை வெண்சுடரம்பலவன்" (கோவை 336) என வருவன காண்க. மதி சூடிய சடை மகுடத்துப் பரன் என இயையும். "மதியஞ் சேர்ந்த மகுடத்தார்'' (64-2) "மதியஞ் சடை மேற்கொண்டார்" (309-11) என அப்பர் தேவாரத்தும் வருவன காண்க. திருப்பெருந்துறையுறை யும் பரன் எனவும், படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன் எனவும் இயையும், இறைவன் மலமறுத்தமையும் தமது உடலகத்தும் உயிரகத் தும் ஒழியாது நிறைந்தமையும் இந்திர சாலம் போல நிகழ்ந்தமையின் படிறு என்பதற்குச் சூழ்ச்சி எனப் பொருள் கொள்வதே இயைபுடைத் தாகுமென்க. இதன் கண், 'என் உடலும் எனதுயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான்" என்பதனால் சிவானந்த மேலிடுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 6 510 வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும்வீண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை பிறைதாள் பூண்டேன்புறம் போகேனினிப் புறம்போகலொட் டேனே. ப-ரை. புகழ் வேண்டேன் - புகழையும் விரும்பேன். செல்வம் வேண்டேன் - பொருளையும் விரும்பேன், மண்ணும் விண்ணும் வேண் டேன் - மண்ணுலக வாழ்க்கையையும் விண்ணுலக வாழ்க்கையையும் விரும்பேன், பிறப்பு இறப்பு வேண்டேன் - பிறப்பு இறப்புகளையும் விரும்பேன்; சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் - சிவமாகிய முழுமுதற் கடவுளை விரும்பாதவர்களை ஒரு நாளும் தொடவும் மாட் டேன்; மன்னு திருப்பெருந்துறை இறைதாள் சென்று சேர்ந்தேன்- நிலைபெற்ற திருப்பெருந்துறை இறைவனது திருவடிகளைச் சென்று அடைந்தேன்; பூண்டேன் - அவற்றைச் சிரசிற் சூடிக்கொண்டேன்; இனி புறம் போகேன் - இனி அத்திருவடிகளுக்கு வெளியே போக மாட்டேன்; புறம் போகல் ஒட்டேன் - அத்திருவடிகள் விட்டுப் புறத்தே செல்வதற்கும் இணங்கமாட்டேன். GT sir
உயிருண்ணிப்பத்து 1115 என்பதே பொருளாயினும் இறைவனது சர்வவியாபகத்துள் ( முழு நிறைவினுள் ) அவை அடங்கின என்பதே கருத்தாகும் . சுடர் மதி - வெண்சுடரையுடைத்தாகிய மதி . சுருடரு செஞ் சடை வெண்சுடரம்பலவன் ( கோவை 336 ) என வருவன காண்க . மதி சூடிய சடை மகுடத்துப் பரன் என இயையும் . மதியஞ் சேர்ந்த மகுடத்தார் ' ' ( 64-2 ) மதியஞ் சடை மேற்கொண்டார் ( 309-11 ) என அப்பர் தேவாரத்தும் வருவன காண்க . திருப்பெருந்துறையுறை யும் பரன் எனவும் படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன் எனவும் இயையும் இறைவன் மலமறுத்தமையும் தமது உடலகத்தும் உயிரகத் தும் ஒழியாது நிறைந்தமையும் இந்திர சாலம் போல நிகழ்ந்தமையின் படிறு என்பதற்குச் சூழ்ச்சி எனப் பொருள் கொள்வதே இயைபுடைத் தாகுமென்க . இதன் கண் ' என் உடலும் எனதுயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான் என்பதனால் சிவானந்த மேலிடுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 6 510 வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும்வீண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை பிறைதாள் பூண்டேன்புறம் போகேனினிப் புறம்போகலொட் டேனே . - ரை . புகழ் வேண்டேன் - புகழையும் விரும்பேன் . செல்வம் வேண்டேன் - பொருளையும் விரும்பேன் மண்ணும் விண்ணும் வேண் டேன் - மண்ணுலக வாழ்க்கையையும் விண்ணுலக வாழ்க்கையையும் விரும்பேன் பிறப்பு இறப்பு வேண்டேன் - பிறப்பு இறப்புகளையும் விரும்பேன் ; சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் - சிவமாகிய முழுமுதற் கடவுளை விரும்பாதவர்களை ஒரு நாளும் தொடவும் மாட் டேன் ; மன்னு திருப்பெருந்துறை இறைதாள் சென்று சேர்ந்தேன் நிலைபெற்ற திருப்பெருந்துறை இறைவனது திருவடிகளைச் சென்று அடைந்தேன் ; பூண்டேன் - அவற்றைச் சிரசிற் சூடிக்கொண்டேன் ; இனி புறம் போகேன் - இனி அத்திருவடிகளுக்கு வெளியே போக மாட்டேன் ; புறம் போகல் ஒட்டேன் - அத்திருவடிகள் விட்டுப் புறத்தே செல்வதற்கும் இணங்கமாட்டேன் . GT sir