திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை புகழ் செல்வம் முதலியவற்றை விரும்பேன்; சிவத்தை விரும்பாத வர்களை ஒரு நாளும் தீண்டேன்; திருப்பெருந்துறை இறைவனது திரு வடிகளைச் சென்று சேர்ந்தேன்; இனி அத்திருவடிகளுக்கு வெளியே போகேன்; அத்திருவடிகள் என்னை விட்டுப் புறத்தே செல்வதற்கும் இணங்கமாட்டேன் என்பதாம். 1116 இறைவன் திருவடியைச் சென்று சேர்ந்து அதனைச் சிரசிற் சூடிப் புற எண்ணங்களிற் போகாத மனநிலைமையை அடைந்தமையால் அடி கள் புகழ் செல்வம் மண் விண் பிறப்பு இறப்பு ஆகியவற்றை வேண் டேன் என்றார். பிறப்பு வேண்டேன் என்பது, "பிறவியை வேண்டேன் நாயேன்" "பிறவாமை வேண்டும்” என வருவனவற்றாலுமறிக. வேண்டேன் என்பதனை முன்னர் வைத்துத் தனித்தனி கூறியது அவற்றின் வெறுப்பின் மிகுதிபற்றியாகும். சிவம் வேண்டார் தமைத் தீண்டேன் என்றது அவர்களோடு எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன் என்பதாகும். இதனை, "மட்டார் பூங்குழன் மலைமகள் கணவனைக் கருதார் தம்மைக் கருதேன்'' சுந். 15-5 "ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே" அச்சப். 6 எனக் கூறியருளியமை காண்க. பூணுதல் - அணிதலாதலின் பூண் டேன் என்பதற்கு அத்திருவடிகளைச் சிரசில் சூடினேன் என உரைக்கப் பட்டது. போகல் ஒட்டேன் - போதற்கு இணங்கேன். "சிந்தையுள் பிரியுமாறெங்ஙனே பிழைத்தேயும் போகலொட்டேன்" (20-7) "வலி செய்து போகலொட்டேன்" (20-9) என அப்பரடிகள் அருளியமை யுங் காண்க. சுந்.8- 6 பெரிய. காரைக்கால். 60 இதன் கண், 'இறைதாள் பூண்டேன்" என்பதனால் சிவானந்த மேலீடுதல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 7 511 கோற்றேனெனக் கென்கோருரை கடல்வாயமு தென்கோ ஆற்றேனெங்கள் அரனேயரு மருந்தேயென தரசே சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை யுறையும் நீற்றார்தரு திருமேனிநின் மலனேயுனை பானே. எங்கள் அரனே - எங்கள் மலங்களை நீக்குபவனே, அரு மருந்தே - கிடைத்தற்கரிய அமுதமே, எனது அரசே - எனது இறை
திருவாசக ஆராய்ச்சியுரை புகழ் செல்வம் முதலியவற்றை விரும்பேன் ; சிவத்தை விரும்பாத வர்களை ஒரு நாளும் தீண்டேன் ; திருப்பெருந்துறை இறைவனது திரு வடிகளைச் சென்று சேர்ந்தேன் ; இனி அத்திருவடிகளுக்கு வெளியே போகேன் ; அத்திருவடிகள் என்னை விட்டுப் புறத்தே செல்வதற்கும் இணங்கமாட்டேன் என்பதாம் . 1116 இறைவன் திருவடியைச் சென்று சேர்ந்து அதனைச் சிரசிற் சூடிப் புற எண்ணங்களிற் போகாத மனநிலைமையை அடைந்தமையால் அடி கள் புகழ் செல்வம் மண் விண் பிறப்பு இறப்பு ஆகியவற்றை வேண் டேன் என்றார் . பிறப்பு வேண்டேன் என்பது பிறவியை வேண்டேன் நாயேன் பிறவாமை வேண்டும் என வருவனவற்றாலுமறிக . வேண்டேன் என்பதனை முன்னர் வைத்துத் தனித்தனி கூறியது அவற்றின் வெறுப்பின் மிகுதிபற்றியாகும் . சிவம் வேண்டார் தமைத் தீண்டேன் என்றது அவர்களோடு எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன் என்பதாகும் . இதனை மட்டார் பூங்குழன் மலைமகள் கணவனைக் கருதார் தம்மைக் கருதேன் ' ' சுந் . 15-5 ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே அச்சப் . 6 எனக் கூறியருளியமை காண்க . பூணுதல் - அணிதலாதலின் பூண் டேன் என்பதற்கு அத்திருவடிகளைச் சிரசில் சூடினேன் என உரைக்கப் பட்டது . போகல் ஒட்டேன் - போதற்கு இணங்கேன் . சிந்தையுள் பிரியுமாறெங்ஙனே பிழைத்தேயும் போகலொட்டேன் ( 20-7 ) வலி செய்து போகலொட்டேன் ( 20-9 ) என அப்பரடிகள் அருளியமை யுங் காண்க . சுந்.8- 6 பெரிய . காரைக்கால் . 60 இதன் கண் ' இறைதாள் பூண்டேன் என்பதனால் சிவானந்த மேலீடுதல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 7 511 கோற்றேனெனக் கென்கோருரை கடல்வாயமு தென்கோ ஆற்றேனெங்கள் அரனேயரு மருந்தேயென தரசே சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை யுறையும் நீற்றார்தரு திருமேனிநின் மலனேயுனை பானே . எங்கள் அரனே - எங்கள் மலங்களை நீக்குபவனே அரு மருந்தே - கிடைத்தற்கரிய அமுதமே எனது அரசே - எனது இறை