திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

உயிருண்ணிப்பத்து வனே, சேறு ஆர் வயல் புடை சூழ் தரு திருப்பெருந்துறை உறையும் - சேற்றினையுடைய வயல்கள் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும், நீறு ஆர் தரு திருமேனி நின்மலனே- திருவெண்ணீறு பரவப் பூசப்பெற்ற திருமேனியையுடைய இயல்பா கவே மலங்களினீங்கினவனே, ஆற்றேன் யான் - நீ தந்த பேரின்பத் தைத் தாங்க முடியாதவனாகிய யான், உனை எனக்கு கோற்றேன் என்கோ - உன்னை எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ, குரைகடல்வாய் அமுது என்கோ - ஒலிக்கின்ற திருப்பாற் கடலில் எழுந்த அமுதம் என்பேனோ? யாது என்று கூறுவேன். பச 1117 திருப்பெருந்துறை இறைவனே, நீ தந்த பேரின்பத்தைத் தாங்க முடியாதவனாகிய யான் நின்னை எனக்குக் கிடைத்த கோற்றேன் என் பேனோ? பாற்கடலில் எழுந்த அமுதம் என்பேனோ? யாது என்று கூறு வேன் என்பதாம். "கோற்றேன்" என்றார், சுவை மிகுதியுடைமை பற்றி 'கோலிடத் துப் பிரசம் என்பது கோற்றேன்; இது சுவை மிகுதியுடைமை கூறியவா றெனவுரைக்க' எனப்பேராசிரியர் உரைத்தமை காண்க (திருக்கோவை 110 உரை). 'சுவை தரு கோற்றேன் கொண்டு செய்தனன்" (அண்ட. 156-7) கோற்றேன் மொழிக்கிள்ளாய்" (தசாங். 7) எனப் பிறாண் டும் அடிகள் கோற்றேனைக் கூறுதல் காண்க. குரைகடல் எனப் பொதுப்படக் கூறினும் இயைபுபற்றித் திருப்பாற் கடல் என உரைக் கப்பட்டது. என்கு - என்பேன்; தன்மை ஒருமை எதிர்கால வினை முற்று. ஆற்றேன் என்பது வினையாலணையும் பெயராய் யான் என்பத னோடு இயையும். ஆற்றல் - தாங்குதல். "கடக்களி றேற்றாத் தடப் பெரு மதத்தின், ஆற்றேனாக" (அண்ட 155-6) "இங்கிவ் வாழ் வாற்ற கில்லேன்" என அடிகள் வாக்காலுங் காண்க. 'கோற்றேன் எனக்கென்கோ குரைகடல் வாயமு தென்கோ" என்பதனால் இவ் வாறு இருந்தது எனச் சொல்ல முடியவில்லை யென்பது தானே பெறப் படுதலின் ஈண்டு ஆற்றேன் என்பதற்குச் சொல்லல் ஆற்றேன் என வுரைப்பது பொருந்தாமை காண்க. அரன் - வடமொழி தற்பவம். பாசத்தை அழிப்பவன் என்பது பொருள். சேறு, நீறு என்பன எதுகை நோக்கி ஒற்று மிக்கன. உறை யும் நின்மலனே எனக் கூட்டுக், 'வெண்மதி சூடிய நின்மலனே" (சுந். 3-1) என அருளியது காண்க. இதன் கண், "ஆற்றேன் யான் உனை கோற்றேன் என்கோ குரை கடல்வாய் அமுதென்கோ" என்பதனால் சிவானந்த மேலிடுதல் என் னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 8
உயிருண்ணிப்பத்து வனே சேறு ஆர் வயல் புடை சூழ் தரு திருப்பெருந்துறை உறையும் - சேற்றினையுடைய வயல்கள் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும் நீறு ஆர் தரு திருமேனி நின்மலனே திருவெண்ணீறு பரவப் பூசப்பெற்ற திருமேனியையுடைய இயல்பா கவே மலங்களினீங்கினவனே ஆற்றேன் யான் - நீ தந்த பேரின்பத் தைத் தாங்க முடியாதவனாகிய யான் உனை எனக்கு கோற்றேன் என்கோ - உன்னை எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ குரைகடல்வாய் அமுது என்கோ - ஒலிக்கின்ற திருப்பாற் கடலில் எழுந்த அமுதம் என்பேனோ ? யாது என்று கூறுவேன் . பச 1117 திருப்பெருந்துறை இறைவனே நீ தந்த பேரின்பத்தைத் தாங்க முடியாதவனாகிய யான் நின்னை எனக்குக் கிடைத்த கோற்றேன் என் பேனோ ? பாற்கடலில் எழுந்த அமுதம் என்பேனோ ? யாது என்று கூறு வேன் என்பதாம் . கோற்றேன் என்றார் சுவை மிகுதியுடைமை பற்றி ' கோலிடத் துப் பிரசம் என்பது கோற்றேன் ; இது சுவை மிகுதியுடைமை கூறியவா றெனவுரைக்க ' எனப்பேராசிரியர் உரைத்தமை காண்க ( திருக்கோவை 110 உரை ) . ' சுவை தரு கோற்றேன் கொண்டு செய்தனன் ( அண்ட . 156-7 ) கோற்றேன் மொழிக்கிள்ளாய் ( தசாங் . 7 ) எனப் பிறாண் டும் அடிகள் கோற்றேனைக் கூறுதல் காண்க . குரைகடல் எனப் பொதுப்படக் கூறினும் இயைபுபற்றித் திருப்பாற் கடல் என உரைக் கப்பட்டது . என்கு - என்பேன் ; தன்மை ஒருமை எதிர்கால வினை முற்று . ஆற்றேன் என்பது வினையாலணையும் பெயராய் யான் என்பத னோடு இயையும் . ஆற்றல் - தாங்குதல் . கடக்களி றேற்றாத் தடப் பெரு மதத்தின் ஆற்றேனாக ( அண்ட 155-6 ) இங்கிவ் வாழ் வாற்ற கில்லேன் என அடிகள் வாக்காலுங் காண்க . ' கோற்றேன் எனக்கென்கோ குரைகடல் வாயமு தென்கோ என்பதனால் இவ் வாறு இருந்தது எனச் சொல்ல முடியவில்லை யென்பது தானே பெறப் படுதலின் ஈண்டு ஆற்றேன் என்பதற்குச் சொல்லல் ஆற்றேன் என வுரைப்பது பொருந்தாமை காண்க . அரன் - வடமொழி தற்பவம் . பாசத்தை அழிப்பவன் என்பது பொருள் . சேறு நீறு என்பன எதுகை நோக்கி ஒற்று மிக்கன . உறை யும் நின்மலனே எனக் கூட்டுக் ' வெண்மதி சூடிய நின்மலனே ( சுந் . 3-1 ) என அருளியது காண்க . இதன் கண் ஆற்றேன் யான் உனை கோற்றேன் என்கோ குரை கடல்வாய் அமுதென்கோ என்பதனால் சிவானந்த மேலிடுதல் என் னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 8