திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1122 திருவாசக ஆராய்ச்சியுரை மொரு தெய்வத்தை உள்ளதாக நினைத்து; எம்பெம்மான் கற்றிலாத வரைக் கண்டால் - எம்பெருமானது இறைஇயல்புகள் முழுவதையும் அறியாதவர்களைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப் படும் தன்மை மிகப் பெரிதாகும். புற்றின்கணுள்ள அரவிற்கும் அஞ்சேன்; பொய்யர்களுடைய மெய்ம்மை போலும் மொழிகளுக்கும் அஞ்சேன்; ஆயின் எம் அண்ண லாகிய இறைவனுடைய திருவடிகளை அடைந்தும் அவ்விறைவனை வேறுமொரு தெய்வம் உண்டென நினைந்து எம்பெருமானது இறை இயல்புகள் முழுவதையும் அறியாதவர்களைக் கண்டால் நாம் பயப் படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். புற்றில் அரவு - புற்றின்கணுள்ள அரவு. அது நாகமாதல் "நல் வரா வுறையும் புற்றம் போலவும்" (புற. 309-3) எனவும், 'புற்றிடை வெகுளி நாகம்" (சீவக. 1285) எனவும் வருவனவற்றாற் காண்க.வாள்- ஒளி. உலகத்தில் அச்சத்தினைத் தரும் பொருள்களுள் அரவு சிறந்ததா தலின் 'அரவும் அஞ்சேன்' என அதனை எடுத்துக் கூறுவாராயினர். பொய்யர்களாகிய புறச்சமயத்தவர் தம் தம் பொய்ம்மையை மறைத்தற்குக் கற்பித்துக் கூறும் மெய்ம்மை போலும் உரையும் பொய்யாதலின் அதுவும் அஞ்சுதற்குரியதாகும் என்க. கற்றை - தொகுதி. 'கற்றை வார் சடையான் அருளினான்" (பெரிய : திருமலை 11). அண் ணல் - பெருமையிற் சிறந்தோன். கண்ணுதல் என்பது கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவனை உணர்த்திற்று. கண்ணுதல் - சிவபெரு மான். '' களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப" (கல். 72-6) என வரும். அண்ணல் கண்ணுதல் - அண்ணலாகிய கண்ணுதல் எனப் பண்புத் தொகை. கண்ணுதல் அண்ணல் பாதம் எனக் கூட்டி, கண்ணையுடைய நுதலையுமுடைய அண்ணலது திருவடி என உரைப்பினுமமையும். *கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுதலண்ணல்" (கோவை 203) என வருதல் காண்க. பாதம் நண்ணுதல் என்பது இறைவனது பாதத்தை நண்ணுதற் குரிய சைவசமயத்தவனாயிருத்தல் வாழ்வெனு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரு மூழ் பெறல் அரிது" சித்தி.சூத். 2: செய். 91 எனச் சிவஞான சித்தியாரில் வருதலுங் காண்க. எம்பெருமானது பதி யிலக்கணத்தை முற்றும் அறிந்தோர் பிற தெய்வம் உண்டென நினை யாராகலின் மற்றோர் தெய்வம் தன்னை நினைந்து 'எம்பெம்மாற் கற்றி றை லாதவரை' என்றார். பெம்மானை என இரண்டாவது விரிக்க.
1122 திருவாசக ஆராய்ச்சியுரை மொரு தெய்வத்தை உள்ளதாக நினைத்து ; எம்பெம்மான் கற்றிலாத வரைக் கண்டால் - எம்பெருமானது இறைஇயல்புகள் முழுவதையும் அறியாதவர்களைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப் படும் தன்மை மிகப் பெரிதாகும் . புற்றின்கணுள்ள அரவிற்கும் அஞ்சேன் ; பொய்யர்களுடைய மெய்ம்மை போலும் மொழிகளுக்கும் அஞ்சேன் ; ஆயின் எம் அண்ண லாகிய இறைவனுடைய திருவடிகளை அடைந்தும் அவ்விறைவனை வேறுமொரு தெய்வம் உண்டென நினைந்து எம்பெருமானது இறை இயல்புகள் முழுவதையும் அறியாதவர்களைக் கண்டால் நாம் பயப் படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . புற்றில் அரவு - புற்றின்கணுள்ள அரவு . அது நாகமாதல் நல் வரா வுறையும் புற்றம் போலவும் ( புற . 309-3 ) எனவும் ' புற்றிடை வெகுளி நாகம் ( சீவக . 1285 ) எனவும் வருவனவற்றாற் காண்க.வாள் ஒளி . உலகத்தில் அச்சத்தினைத் தரும் பொருள்களுள் அரவு சிறந்ததா தலின் ' அரவும் அஞ்சேன் ' என அதனை எடுத்துக் கூறுவாராயினர் . பொய்யர்களாகிய புறச்சமயத்தவர் தம் தம் பொய்ம்மையை மறைத்தற்குக் கற்பித்துக் கூறும் மெய்ம்மை போலும் உரையும் பொய்யாதலின் அதுவும் அஞ்சுதற்குரியதாகும் என்க . கற்றை - தொகுதி . ' கற்றை வார் சடையான் அருளினான் ( பெரிய : திருமலை 11 ) . அண் ணல் - பெருமையிற் சிறந்தோன் . கண்ணுதல் என்பது கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவனை உணர்த்திற்று . கண்ணுதல் - சிவபெரு மான் . ' ' களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப ( கல் . 72-6 ) என வரும் . அண்ணல் கண்ணுதல் - அண்ணலாகிய கண்ணுதல் எனப் பண்புத் தொகை . கண்ணுதல் அண்ணல் பாதம் எனக் கூட்டி கண்ணையுடைய நுதலையுமுடைய அண்ணலது திருவடி என உரைப்பினுமமையும் . * கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுதலண்ணல் ( கோவை 203 ) என வருதல் காண்க . பாதம் நண்ணுதல் என்பது இறைவனது பாதத்தை நண்ணுதற் குரிய சைவசமயத்தவனாயிருத்தல் வாழ்வெனு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரு மூழ் பெறல் அரிது சித்தி.சூத் . 2 : செய் . 91 எனச் சிவஞான சித்தியாரில் வருதலுங் காண்க . எம்பெருமானது பதி யிலக்கணத்தை முற்றும் அறிந்தோர் பிற தெய்வம் உண்டென நினை யாராகலின் மற்றோர் தெய்வம் தன்னை நினைந்து ' எம்பெம்மாற் கற்றி றை லாதவரை ' என்றார் . பெம்மானை என இரண்டாவது விரிக்க .