திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1124 திருவாசக ஆராய்ச்சியுரை ஓர் தேவர் எத்தேவர் என்ன அருவராதவரை கண்டால் - பிறரொரு தேவர் எத்தெய்வத்தன்மையையுடையவர் என்று வெறுக்காதவரைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். வேட்கை வந்து என்னைப் பற்றினாலும் அஞ்சேன்; வினைக்கடலா னது என்னைத் தன்னுள் மூழ்கச் செய்யினும் அஞ்சமாட்டேன்; அரி அயன் என்னும் இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத எங்கள் தலைவன் அவ்விருவர்க்கும் தானே தலைவன் என்பதை உணர்த்துமாறு கொண்ட திருவுருவத்தையன்றிப் பிறரொரு தேவர் என்ன தெய்வத் தன்மையையுடையவர் என்று அருவருக்காதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். k வேட்கை - மண், பெண், பொன் என்பவற்றிலுள்ள விருப்பம். இவற்றை வட நூலார் ஈஷணத்திரயம் என்பர். வந்தால் கொளினும் என்பன, அடிகட்கு வேட்கை வராமையையும் வினைக்கடல் கொள் ளாமையையும் உணர்த்தி நின்றன. வினைகள் பலவாதலின் கடல் என்றார். வினைக்கடல் தடுமாறச் செய்தலின் அஞ்சற்குரியது. ''வெந் தாய வினைக்கடலிற்றடுமாறு முயிர்க்கு" (சுந். 38-7) என்பதாலு மறிக, கடல் கொள்ளுதல் - கடல் தன்னுள் மூழ்கச் செய்தல். இரு வர் என்னும் தொகைக் குறிப்புச் சொல் அயன் அரியை உணர்த்தி யது. மாறு காணா - மாறுபட்டுக் காண முடியாத "பிரம னரியென் றிருவருந்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவா யங்கே மளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ" தோணோ. 12 என்பது ஈண்டறியற்பாலது மாறு, காண முடியாமைக்கு ஏதுவாய் நின்றது. காணாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறு கெட்டது. எம்பிரான் - எங்கள் தலைவன். தம்பிரானாம் திரு - அவ்விருவர்க்கும் தானே தலைவன் என்பதை உணர்த்துமாறு கொண்ட திருவுரு. தம் பிரான் - தமக்கு மேல் பிரான் ஒருவருமில்லாமல் தமக்குத் தாமே பிரானாகவுள்ளவர். திருவுரு என்றது த பிரானது உண்மை வடிவினை உணர்த்தியது. இறைவன் திருவுருவை யன்றிப் பிறரைத் தேவர். என நினையக் கூடாது என்பது, 'பொது நீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும் பெருந்துணையை' நாவு.214-5 என்பதனாலுமறியப்படும். மற்று - பிறிது என்னும் பொருளில் வந் தது. எத்தேவர் என்ன - என்ன தெய்வத்தன்மையுடையவர் என. அருவருத்தல் - வெறுத்தல். € L
1124 திருவாசக ஆராய்ச்சியுரை ஓர் தேவர் எத்தேவர் என்ன அருவராதவரை கண்டால் - பிறரொரு தேவர் எத்தெய்வத்தன்மையையுடையவர் என்று வெறுக்காதவரைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . வேட்கை வந்து என்னைப் பற்றினாலும் அஞ்சேன் ; வினைக்கடலா னது என்னைத் தன்னுள் மூழ்கச் செய்யினும் அஞ்சமாட்டேன் ; அரி அயன் என்னும் இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத எங்கள் தலைவன் அவ்விருவர்க்கும் தானே தலைவன் என்பதை உணர்த்துமாறு கொண்ட திருவுருவத்தையன்றிப் பிறரொரு தேவர் என்ன தெய்வத் தன்மையையுடையவர் என்று அருவருக்காதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . k வேட்கை - மண் பெண் பொன் என்பவற்றிலுள்ள விருப்பம் . இவற்றை வட நூலார் ஈஷணத்திரயம் என்பர் . வந்தால் கொளினும் என்பன அடிகட்கு வேட்கை வராமையையும் வினைக்கடல் கொள் ளாமையையும் உணர்த்தி நின்றன . வினைகள் பலவாதலின் கடல் என்றார் . வினைக்கடல் தடுமாறச் செய்தலின் அஞ்சற்குரியது . ' ' வெந் தாய வினைக்கடலிற்றடுமாறு முயிர்க்கு ( சுந் . 38-7 ) என்பதாலு மறிக கடல் கொள்ளுதல் - கடல் தன்னுள் மூழ்கச் செய்தல் . இரு வர் என்னும் தொகைக் குறிப்புச் சொல் அயன் அரியை உணர்த்தி யது . மாறு காணா - மாறுபட்டுக் காண முடியாத பிரம னரியென் றிருவருந்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவா யங்கே மளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ தோணோ . 12 என்பது ஈண்டறியற்பாலது மாறு காண முடியாமைக்கு ஏதுவாய் நின்றது . காணாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறு கெட்டது . எம்பிரான் - எங்கள் தலைவன் . தம்பிரானாம் திரு - அவ்விருவர்க்கும் தானே தலைவன் என்பதை உணர்த்துமாறு கொண்ட திருவுரு . தம் பிரான் - தமக்கு மேல் பிரான் ஒருவருமில்லாமல் தமக்குத் தாமே பிரானாகவுள்ளவர் . திருவுரு என்றது பிரானது உண்மை வடிவினை உணர்த்தியது . இறைவன் திருவுருவை யன்றிப் பிறரைத் தேவர் . என நினையக் கூடாது என்பது ' பொது நீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும் பெருந்துணையை ' நாவு.214-5 என்பதனாலுமறியப்படும் . மற்று - பிறிது என்னும் பொருளில் வந் தது . எத்தேவர் என்ன - என்ன தெய்வத்தன்மையுடையவர் என . அருவருத்தல் - வெறுத்தல் . L