திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை படாது தன்னியல்பால் ஒளி புலப்படும் மாணிக்கமணி. மாணிக்கமணி போல்வானை ''மணி" என்றார். நோக்கி ஏத்தி என இயையும். அருள் - இனிமையும் தண்மையுமுடைமை பற்றிப் பருகப்படும் பொருள் போலக் கூறப்பட்டது. அருள் பருகல் - அருளை அனுபவித் தல். மாட்டாத என்னும் பெயரெச்சம் ஈறு கெட்டது. 1126 இதன் கண் "அம்பலத்தாடுகின்ற என் பொலாமணியை நோக்கி இனிதருள் பருகமாட்டா” என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 3 517 கிளியனார் கிளவி யஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடு மேனி வேதியன் பாத நண்ணித் துளியுலாங் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங் களியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. ப-ரை. கிளி அன்னார் கிளவி அஞ்சேன் - கிளி மொழி போன்ற இனிய மொழியையுடைய பொதுமகளிரது மயக்கும் மொழிகளுக்கு அஞ்சமாட்டேன், அவர் கிறி முறுவல் அஞ்சேன் - அம்மகளிரது வஞ் சனை பொருந்திய சிறு சிரிப்புக்கும் அஞ்சமாட்டேன், வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி - வெண்மையாகிய திருநீற்றைப் பரவப் பூசிய திருமேனியையுடைய அந்தணனாகிய இறைவனுடைய திருவடியைச் சார்ந்து, துளி உலாம் கண்ணர் ஆகி-ஆனந்த நீர் சொரிகின்ற கண்களையுடையவர்களாகி, தொழுது அழுது உள்ளம் நெக்கு அளியிலாதவரை இங்கு கண்டால் - வணங்கி அழுது மனம் நெகிழ்ந்து அன்பு உண்டாகப் பெறாதவரை இவ்வுலகில் கண்டால், நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். மகளிரது மயக்கும் மொழிகளுக்கும் அஞ்சேன்; அம்மகளிரது வஞ் சனை பொருந்திய முறுவலுக்கும் அஞ்சேன்; இறைவனுடைய திருவடி களைச் சார்ந்து ஆனந்த நீர் சொரியும் கண்களையுடையவர்களாகித் தொழுது அழுது உள்ளம் நெகிழ்ந்து அன்பு உண்டாகப் பெறாதவரை இவ்வுலகில் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். கிளி அனார் -கிளிமொழி போன்ற மழலை மொழியினையுடையார். "மிழற்று மொழியாற் கிளியாய்" (கோவை 29) "கிளி மழலை மென் சாயலோர்" (பட்டினப். 150) எனப் பிறரும் கூறுதல் காண்க. கிளிய னார் என்றது ஈண்டுப் பொதுமகளிரை உணர்த்தியது. கிளவி - சொல்.
திருவாசக ஆராய்ச்சியுரை படாது தன்னியல்பால் ஒளி புலப்படும் மாணிக்கமணி . மாணிக்கமணி போல்வானை ' ' மணி என்றார் . நோக்கி ஏத்தி என இயையும் . அருள் - இனிமையும் தண்மையுமுடைமை பற்றிப் பருகப்படும் பொருள் போலக் கூறப்பட்டது . அருள் பருகல் - அருளை அனுபவித் தல் . மாட்டாத என்னும் பெயரெச்சம் ஈறு கெட்டது . 1126 இதன் கண் அம்பலத்தாடுகின்ற என் பொலாமணியை நோக்கி இனிதருள் பருகமாட்டா என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 3 517 கிளியனார் கிளவி யஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடு மேனி வேதியன் பாத நண்ணித் துளியுலாங் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங் களியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . - ரை . கிளி அன்னார் கிளவி அஞ்சேன் - கிளி மொழி போன்ற இனிய மொழியையுடைய பொதுமகளிரது மயக்கும் மொழிகளுக்கு அஞ்சமாட்டேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் - அம்மகளிரது வஞ் சனை பொருந்திய சிறு சிரிப்புக்கும் அஞ்சமாட்டேன் வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி - வெண்மையாகிய திருநீற்றைப் பரவப் பூசிய திருமேனியையுடைய அந்தணனாகிய இறைவனுடைய திருவடியைச் சார்ந்து துளி உலாம் கண்ணர் ஆகி - ஆனந்த நீர் சொரிகின்ற கண்களையுடையவர்களாகி தொழுது அழுது உள்ளம் நெக்கு அளியிலாதவரை இங்கு கண்டால் - வணங்கி அழுது மனம் நெகிழ்ந்து அன்பு உண்டாகப் பெறாதவரை இவ்வுலகில் கண்டால் நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . மகளிரது மயக்கும் மொழிகளுக்கும் அஞ்சேன் ; அம்மகளிரது வஞ் சனை பொருந்திய முறுவலுக்கும் அஞ்சேன் ; இறைவனுடைய திருவடி களைச் சார்ந்து ஆனந்த நீர் சொரியும் கண்களையுடையவர்களாகித் தொழுது அழுது உள்ளம் நெகிழ்ந்து அன்பு உண்டாகப் பெறாதவரை இவ்வுலகில் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . கிளி அனார் -கிளிமொழி போன்ற மழலை மொழியினையுடையார் . மிழற்று மொழியாற் கிளியாய் ( கோவை 29 ) கிளி மழலை மென் சாயலோர் ( பட்டினப் . 150 ) எனப் பிறரும் கூறுதல் காண்க . கிளிய னார் என்றது ஈண்டுப் பொதுமகளிரை உணர்த்தியது . கிளவி - சொல் .