திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சப்பத்து கிறி - வஞ்சனை. வெளிய - வெண்மையாகிய. நீறாடுதல் - நீற்றைப் பரவப் பூசுதல். "தீனாடிய களிறு போல" (பட்டினப். 48). நீறாடும் மேனி வேதியன் என்றது இறைவனை. 'நீறுசேர் திருமேனியர் "(ஞான். 55-1) "வேதியா வேத கீதா" (நாவு. 62-1) என வருவன காண்க. நண்ணி - அடைந்து என்றது தியானித்து என்றவாறு. துளியுலாம் கண் - ஆனந்த நீர் துளிக்கின்ற கண். நண்ணி ஆகி தொழுது அழுது நெக்கு என்னும் வினையெச்சங்கள் இலாதவர் என்பதில் இன்மை யொடு முடிந்தன. அளி-அன்பு. 110 இதன்கண் "வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கு" என்பதனால் ஆனந்தமுறுதல் என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 4 518 1127 பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னான்றன் தொழும்பரோ டழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணி றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே துண்டமாகிய ப- ரை: பிணி எலாம் வரினும் அஞ்சேன் - நோய்கள் எல் லாம் ஒருங்கு வந்தாலும் அவற்றிற்கும் அஞ்சமாட்டேன்; பிறப்பி னோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்பும் இறப்பும் வந்தாலும் அஞ்ச மாட்டேன்; துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி மதியினை முடி அணியாகக்கொண்ட சிவபெருமா னுடைய மெய்த்தொண்டரோடு நன்கு கலந்து; அம்மால் திணி நிலம் பிளந்தும் காண சேவடி பரவி - அத்திருமால் மண்செறிந்த நிலவுல கத்தைக் கிழித்துச் சென்றும் காணமுடியாத சிவந்த திருவடிகளைத் துதித்து; வெண்ணீறு அணிகிலாதவரை கண்டால் - திருவெண்ணீறு அணியப் பெறாதவரைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். பிணியெல்லாம் ஒருங்கு வந்தாலும் அவற்றிற்கும் அஞ்சேன்; பிறப்பு இறப்புக்களுக்கும் அஞ்சேன்; ஆயினும் இறைவனது மெய்த் தொண்டரோடு நன்கு கலந்து அவனது திருவடியைத் துதித்துத் திருவெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம்.
அச்சப்பத்து கிறி - வஞ்சனை . வெளிய - வெண்மையாகிய . நீறாடுதல் - நீற்றைப் பரவப் பூசுதல் . தீனாடிய களிறு போல ( பட்டினப் . 48 ) . நீறாடும் மேனி வேதியன் என்றது இறைவனை . ' நீறுசேர் திருமேனியர் ( ஞான் . 55-1 ) வேதியா வேத கீதா ( நாவு . 62-1 ) என வருவன காண்க . நண்ணி - அடைந்து என்றது தியானித்து என்றவாறு . துளியுலாம் கண் - ஆனந்த நீர் துளிக்கின்ற கண் . நண்ணி ஆகி தொழுது அழுது நெக்கு என்னும் வினையெச்சங்கள் இலாதவர் என்பதில் இன்மை யொடு முடிந்தன . அளி - அன்பு . 110 இதன்கண் வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கு என்பதனால் ஆனந்தமுறுதல் என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 4 518 1127 பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னான்றன் தொழும்பரோ டழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணி றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே துண்டமாகிய ப- ரை : பிணி எலாம் வரினும் அஞ்சேன் - நோய்கள் எல் லாம் ஒருங்கு வந்தாலும் அவற்றிற்கும் அஞ்சமாட்டேன் ; பிறப்பி னோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்பும் இறப்பும் வந்தாலும் அஞ்ச மாட்டேன் ; துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி மதியினை முடி அணியாகக்கொண்ட சிவபெருமா னுடைய மெய்த்தொண்டரோடு நன்கு கலந்து ; அம்மால் திணி நிலம் பிளந்தும் காண சேவடி பரவி - அத்திருமால் மண்செறிந்த நிலவுல கத்தைக் கிழித்துச் சென்றும் காணமுடியாத சிவந்த திருவடிகளைத் துதித்து ; வெண்ணீறு அணிகிலாதவரை கண்டால் - திருவெண்ணீறு அணியப் பெறாதவரைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . பிணியெல்லாம் ஒருங்கு வந்தாலும் அவற்றிற்கும் அஞ்சேன் ; பிறப்பு இறப்புக்களுக்கும் அஞ்சேன் ; ஆயினும் இறைவனது மெய்த் தொண்டரோடு நன்கு கலந்து அவனது திருவடியைத் துதித்துத் திருவெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் .