திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பிணி - நோய். "பசியும் பிணியும் பகையும் நீங்கி" (சிலப்.5-72). பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறத்தற்கும் இறத்தற்கும் அஞ் சேன். ''யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்" (சத. 12) என அடிகள் அருளியவாறுங் காண்க. துணி - துண்டம். "நாகு முதிர் நுணவத், தறைவாய்க் குறுந்துணி" (சிறுபாண். 52). துணி நிலா - துண்ட மதி என்றது பிறை மதியை, நிலா அதனையுடையமதிக்கு ஆகுபெயர். துண்டப் பிறையைத் திருச்சடைக்கண் சூடியமையின் இறைவனைத் 'துணிநிலா அணியினான்' என்றார். 1128 "மண்டு கங்கையு மரவுமல்கிய வளர்சடை தன்மேல் துண்ட வெண்பிறை யணிவர்” "துண்டப் பிறைக்கற்றை, திகழ்ந்திலங்கு செஞ்சடையார்'' ஞான.324-10 நாவு 119-3 தாவு.186-8 எனத் தேவாரத்தும் வருவன காண்க. தொழும்பர் - தொண்டர். அழுந்துதல் - நன்கு கலத்தல். அ+மால் - அம்மால் அ என்பது பண் டறி சுட்டாய்த் திருமாலின் உயர்வைக் குறித்து நின்றது. திணி நிலம் பிளந்தும் காணா சேவடி என்றது அத்திருமால் பன்றி வடிவு கொண்டு திணி நிலத்தையும் பிளந்து சென்று தேடியும் காணமுடி யாத சேவடி என்றவாறு. "துண்ட வெண்பிறை வைத்த இறையவர்" "துண்ட மாமதி சூடிய சோதியே" "போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதனிற் கடு முரண் ஏன மாகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி பிணைகள்" எனத் திருவாசகத்தும், ஞான.225-6 மாலார்க் கரிய மலர்க்கழ லம்பலவன்" எனத் திருக்கோவையாரிலும் அருளியவாறுங் காண்க. போற்றி 4-9 கோவை. 110 காணாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தீறு கெட்டது. அழுந்தி பரவி அணிகிலாதவர் என இயையும். தொழும்பரோ டழுந்தி சேவடி பரவி வெண்ணீறு அணிகிலாதவர் எனக் கூறினும், வெண்ணீறணிந்து தொழும்பரோ டழுந்தி சேவடி பரவாதவரை என் பது பொருளாகக் கொள்க. 50500 upket இதன்கண் 'தொழும்பரோ டழுந்தி மால்காணாச் சேவடி பரவி வெண்ணீ றணிதல்" என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 5
திருவாசக ஆராய்ச்சியுரை பிணி - நோய் . பசியும் பிணியும் பகையும் நீங்கி ( சிலப்.5-72 ) . பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறத்தற்கும் இறத்தற்கும் அஞ் சேன் . ' ' யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் ( சத . 12 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . துணி - துண்டம் . நாகு முதிர் நுணவத் தறைவாய்க் குறுந்துணி ( சிறுபாண் . 52 ) . துணி நிலா - துண்ட மதி என்றது பிறை மதியை நிலா அதனையுடையமதிக்கு ஆகுபெயர் . துண்டப் பிறையைத் திருச்சடைக்கண் சூடியமையின் இறைவனைத் ' துணிநிலா அணியினான் ' என்றார் . 1128 மண்டு கங்கையு மரவுமல்கிய வளர்சடை தன்மேல் துண்ட வெண்பிறை யணிவர் துண்டப் பிறைக்கற்றை திகழ்ந்திலங்கு செஞ்சடையார் ' ' ஞான.324-10 நாவு 119-3 தாவு.186-8 எனத் தேவாரத்தும் வருவன காண்க . தொழும்பர் - தொண்டர் . அழுந்துதல் - நன்கு கலத்தல் . + மால் - அம்மால் என்பது பண் டறி சுட்டாய்த் திருமாலின் உயர்வைக் குறித்து நின்றது . திணி நிலம் பிளந்தும் காணா சேவடி என்றது அத்திருமால் பன்றி வடிவு கொண்டு திணி நிலத்தையும் பிளந்து சென்று தேடியும் காணமுடி யாத சேவடி என்றவாறு . துண்ட வெண்பிறை வைத்த இறையவர் துண்ட மாமதி சூடிய சோதியே போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதனிற் கடு முரண் ஏன மாகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி பிணைகள் எனத் திருவாசகத்தும் ஞான.225-6 மாலார்க் கரிய மலர்க்கழ லம்பலவன் எனத் திருக்கோவையாரிலும் அருளியவாறுங் காண்க . போற்றி 4-9 கோவை . 110 காணாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தீறு கெட்டது . அழுந்தி பரவி அணிகிலாதவர் என இயையும் . தொழும்பரோ டழுந்தி சேவடி பரவி வெண்ணீறு அணிகிலாதவர் எனக் கூறினும் வெண்ணீறணிந்து தொழும்பரோ டழுந்தி சேவடி பரவாதவரை என் பது பொருளாகக் கொள்க . 50500 upket இதன்கண் ' தொழும்பரோ டழுந்தி மால்காணாச் சேவடி பரவி வெண்ணீ றணிதல் என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 5