திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

519 அச்சப்பத்து டு வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோளுலா நீற்றன் ஏற்றன் சொற்பதங் கடந்த அப்பன் தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 1129 ப-ரை. வாள் உலாம் எரியும் அஞ்சேன் - ஒளி பரந்து எரியும் நெருப்பிற்கும் அஞ்சமாட்டேன்; வரை புரண்டிடினும் அஞ்சேன் - மலைகள் புரண்டு வந்தாலும் அஞ்சமாட்டேன்; தோள் உலாம் நீற் றன் - திருத்தோள்களில் பரவப்பூசிய திருவெண்ணீற்றை உடையவ னும்; ஏற்றன் - இடப ஊர்தியையுடையவனும்; சொல் பதம் கடந்த அப்பன் - சொல்லின் அளவைக் கடந்த தந்தையுமாகிய இறைவ னுடைய; தாள தாமரைகள் ஏத்தி - திருவடிகளாகிய தாமரை மலர் களைத் துதித்து; தட மலர் புனைந்து நையும் - பெருமை பொருந்திய மலர்களைச் சாத்தி அன்பினால் மனம் நெகிழ்கின்ற; ஆள் அலாத வரைக் கண்டால் - தொண்டர் அல்லாதவரைக் கண்டால்; நாம் அஞ் சும் ஆறு அம்ம -நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். ஒளி பரந்து எரியும் நெருப்பிற்கும் அஞ்சேன்; மலை புரண்டு வந்தா லும் அஞ்சேன்; ஆயினும் திருவெண்ணீற்றை அணிந்த தோளையுடைய வனும், இடப ஊர்தியையுடையவனும், சொற்பதங் கடந்த அப்பனு மாகிய இறைவனுடைய திருவடித் தாமரை மலர்களைத் துதித்து மலர் புனைந்து மனம் நெகிழ்கின்ற தொண்டரல்லாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். Call வாளுலாம் எரி - சுவாலித்து எரிதலால் ஒளி பரந்த தீ. விரைந்து பொருள்களை எரித்து விடுமாதலின் இதனை விதந்தோதினார். வரை - அசைவற்று நிற்பதாகிய மலை என்பது புரண்டிடினும் என்பத னால் தெரிகிறது. திருமேனியுலாம் நீற்றன் என்னாது தோளுலாம் நீற் றன் என்பது அடியவரை அஞ்சற்க என *அபயம் செய்தலும் அவர்க ளுக்கு வேண்டியவற்றை வரதஞ் செய்தலுமுடைய திருக்கரங்களோடு தொடர்புடைய சிறப்புப் பற்றியாகும். "சிவனவன் திரடோண் மேல், நீறு நின்றது கண்டனையாயினும்" (சத.33) "தோட் கொண்ட நீற்ற னாய்" (அம்.3) 'தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல்" (கோவை 112) எனவும் வருவன காண்க. ஏறு - ஈண்டுத் தரும வடிவாகிய இட அபயம் அஞ்சற்க என அருள்வது. வரதம் - வேண்டிய வரங் களைக் கொடுப்போமென்பதைக் குறிக்கும் கைக்குறி.
519 அச்சப்பத்து டு வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோளுலா நீற்றன் ஏற்றன் சொற்பதங் கடந்த அப்பன் தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . 1129 - ரை . வாள் உலாம் எரியும் அஞ்சேன் - ஒளி பரந்து எரியும் நெருப்பிற்கும் அஞ்சமாட்டேன் ; வரை புரண்டிடினும் அஞ்சேன் - மலைகள் புரண்டு வந்தாலும் அஞ்சமாட்டேன் ; தோள் உலாம் நீற் றன் - திருத்தோள்களில் பரவப்பூசிய திருவெண்ணீற்றை உடையவ னும் ; ஏற்றன் - இடப ஊர்தியையுடையவனும் ; சொல் பதம் கடந்த அப்பன் - சொல்லின் அளவைக் கடந்த தந்தையுமாகிய இறைவ னுடைய ; தாள தாமரைகள் ஏத்தி - திருவடிகளாகிய தாமரை மலர் களைத் துதித்து ; தட மலர் புனைந்து நையும் - பெருமை பொருந்திய மலர்களைச் சாத்தி அன்பினால் மனம் நெகிழ்கின்ற ; ஆள் அலாத வரைக் கண்டால் - தொண்டர் அல்லாதவரைக் கண்டால் ; நாம் அஞ் சும் ஆறு அம்ம -நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . ஒளி பரந்து எரியும் நெருப்பிற்கும் அஞ்சேன் ; மலை புரண்டு வந்தா லும் அஞ்சேன் ; ஆயினும் திருவெண்ணீற்றை அணிந்த தோளையுடைய வனும் இடப ஊர்தியையுடையவனும் சொற்பதங் கடந்த அப்பனு மாகிய இறைவனுடைய திருவடித் தாமரை மலர்களைத் துதித்து மலர் புனைந்து மனம் நெகிழ்கின்ற தொண்டரல்லாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . Call வாளுலாம் எரி - சுவாலித்து எரிதலால் ஒளி பரந்த தீ . விரைந்து பொருள்களை எரித்து விடுமாதலின் இதனை விதந்தோதினார் . வரை - அசைவற்று நிற்பதாகிய மலை என்பது புரண்டிடினும் என்பத னால் தெரிகிறது . திருமேனியுலாம் நீற்றன் என்னாது தோளுலாம் நீற் றன் என்பது அடியவரை அஞ்சற்க என * அபயம் செய்தலும் அவர்க ளுக்கு வேண்டியவற்றை வரதஞ் செய்தலுமுடைய திருக்கரங்களோடு தொடர்புடைய சிறப்புப் பற்றியாகும் . சிவனவன் திரடோண் மேல் நீறு நின்றது கண்டனையாயினும் ( சத .33 ) தோட் கொண்ட நீற்ற னாய் ( அம் .3 ) ' தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் ( கோவை 112 ) எனவும் வருவன காண்க . ஏறு - ஈண்டுத் தரும வடிவாகிய இட அபயம் அஞ்சற்க என அருள்வது . வரதம் - வேண்டிய வரங் களைக் கொடுப்போமென்பதைக் குறிக்கும் கைக்குறி .