திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1130 திருவாசக ஆராய்ச்சியுரை பத்தை உணர்த்தியது ''சொற்பதங் கடந்த அப்பன்" என்றார், இறை வன் சொல்லளவைக்கு எட்டாதவனாதலின். "சொற்பதங் கடந்த தொல்லோன்" (திருவண்ட. 40) "சொற்பதத் தாலும் தொடர வொண்ணாச் சிவன்" (திருமந். 2439) என வருவனவற்றாலும் காண்க. தாள் தாமரை என்பது தாளதாமரை என எதுகை நோக்கி அக ரச்சாரியை பெற்றது. "தாள் தாமரை காட்டித் தன்கருணைத் தேன் காட்டி" (அம். 6) "தாட்செய்ய தாமரைச் சைவனுக்கு" (குலா.9) எனத் திருவாசகத்தும் வருதல் காண்க. இனி தாள தாமரை என்பதற்கு தாளையுடைய தாமரை மலர் போலும் திருவடிகள் எனினுமாம். தாள் - தண்டு. 'முட்டாட் டாமரை" எனத் திருமுருகாற்றுப்படை யிலும் (73) வருதல் காண்க. இப்பொருளில் தாள என்பது குறிப்பு வினைப் பெயரெச்சம். தாமரை மலருக்கு ஆகுபெயர். தடமலர் புனைந்து - ெ ருமை பொருந்திய பூக்களைச் சாத்தி. ஆள் - தொண் டர்.ஏத்தி புனைந்து நையும் ஆளலாதவர் என்பதற்கு ஏத்துதலும் புனைதலும் நைதலும் ஆட்படுதலும் இல்லாதவர் என்பது பொருள். இதன் கண் "தாள தாமரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும்" என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 6 520 தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம் பலத்து ளாடும் முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாத் மேத்தி அகநெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. ஃபோவை ப-ரை: தகைவு இலா பழியும் அஞ்சேன் - தடுக்கமுடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன்; சாதலை முன்னம் அஞ்சேன் - மரணத் தைக் குறித்து அஞ்சமாட்டேன்: புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் - புகை சேர்ந்து எரியும் அக்கினியை ஏந்திய திருக்கரத்தை வீசிக்கொண்டு பொலிவினையுடைய தில்லைத் திருச்சிற் றம்பலத்தின்கண் திருக்கூத்து இயற்றுகின்ற; முகை நகை கொன்றை மாவை முன்னவன் பாதம் ஏத்தி -அரும்புகள் விரிகின்ற கொன்றை மாலையை அணிந்த எப்பொருட்கும் முன்னாயவனது திருவடியைத் துதித்து, அசும் நெகாதவரை கண்டால் - மனம் நெகிழாதவரைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும்.
1130 திருவாசக ஆராய்ச்சியுரை பத்தை உணர்த்தியது ' ' சொற்பதங் கடந்த அப்பன் என்றார் இறை வன் சொல்லளவைக்கு எட்டாதவனாதலின் . சொற்பதங் கடந்த தொல்லோன் ( திருவண்ட . 40 ) சொற்பதத் தாலும் தொடர வொண்ணாச் சிவன் ( திருமந் . 2439 ) என வருவனவற்றாலும் காண்க . தாள் தாமரை என்பது தாளதாமரை என எதுகை நோக்கி அக ரச்சாரியை பெற்றது . தாள் தாமரை காட்டித் தன்கருணைத் தேன் காட்டி ( அம் . 6 ) தாட்செய்ய தாமரைச் சைவனுக்கு ( குலா .9 ) எனத் திருவாசகத்தும் வருதல் காண்க . இனி தாள தாமரை என்பதற்கு தாளையுடைய தாமரை மலர் போலும் திருவடிகள் எனினுமாம் . தாள் - தண்டு . ' முட்டாட் டாமரை எனத் திருமுருகாற்றுப்படை யிலும் ( 73 ) வருதல் காண்க . இப்பொருளில் தாள என்பது குறிப்பு வினைப் பெயரெச்சம் . தாமரை மலருக்கு ஆகுபெயர் . தடமலர் புனைந்து - ருமை பொருந்திய பூக்களைச் சாத்தி . ஆள் - தொண் டர்.ஏத்தி புனைந்து நையும் ஆளலாதவர் என்பதற்கு ஏத்துதலும் புனைதலும் நைதலும் ஆட்படுதலும் இல்லாதவர் என்பது பொருள் . இதன் கண் தாள தாமரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும் என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 6 520 தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம் பலத்து ளாடும் முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாத் மேத்தி அகநெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . ஃபோவை - ரை : தகைவு இலா பழியும் அஞ்சேன் - தடுக்கமுடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன் ; சாதலை முன்னம் அஞ்சேன் - மரணத் தைக் குறித்து அஞ்சமாட்டேன் : புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும் - புகை சேர்ந்து எரியும் அக்கினியை ஏந்திய திருக்கரத்தை வீசிக்கொண்டு பொலிவினையுடைய தில்லைத் திருச்சிற் றம்பலத்தின்கண் திருக்கூத்து இயற்றுகின்ற ; முகை நகை கொன்றை மாவை முன்னவன் பாதம் ஏத்தி -அரும்புகள் விரிகின்ற கொன்றை மாலையை அணிந்த எப்பொருட்கும் முன்னாயவனது திருவடியைத் துதித்து அசும் நெகாதவரை கண்டால் - மனம் நெகிழாதவரைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் .