திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சப்பத்து 1135 மனம் கசிந்து நெகிழ்ந்து உருகி; வாள் நிலா கண்கள் சோர வாழ்த்தி நின்று ஏத்த மாட்டா -ஒளி பொருந்திய கண்களினின்று ஆனந்த நீர் சொரிய வாழ்த்திக் கொண்டு நின்று புகழ மாட்டாத; ஆண் அலாத வரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாதவரைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். வளைதலில்லாத அம்பிற்கும் அஞ்சேன்; கூற்றுவனது வெகுளிக்கும் அஞ்சேன்; ஆனால் இறைவனை மனத்தினால் நினைந்து மனம் கசிந்து நெகிழ்ந்து உருகிக் கண்களினின்றும் ஆனந்த நீர் சோர வாழ்த்தி நின்று புகழமாட்டாத ஆணலாதவரைக் கண்டால் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். கோண் - வளைவு. கோண் இலா - வளைவை இலாததாயினும் அது கொடிது என்பதனை "கணைகொடிது யாழ்கோடு செவ்விது" (குறள் 279) என்பதனாலுமறிக. நீண்ட மதி என்றது நீட்சிமிக்க பிறைச்சந்தி ரன் என்றவாறு. வாள் - ஒளி. சோர என்ற வினையினால் நீர் சொரிய என உரைக்கப்பட்டது. மனம் கசிந்து நெகிழ்ந்து உருகுதலும் கண்க ளில் நீர் சோருதலும் அன்பின் மிகுதியால் நிகழ்வனவாகும். நின்று என்றது நினைந்து நைந்து உருகி சோர வாழ்த்தி நிற்கும் நிலை பெற்று என்றவாறு மாட்டாத என்பது ஈறு கெட்டது. பொறிகளைப் புலன் வழிச் செல்லாது தடுத்து இறைவனை மனம் ஒருமித்து வழிபடுதலும் ஆண்மையாதலின் அஃதில்லாதவரை ஆணலாதவர்" என்றார். "பிறன்மனை நோக்காத பேராண்மை" என்றார் வள்ளுவரும். ஏத்து தல் - புகழ்தலாயினும் இங்கே அது புகழ்ந்து வழிபடுதலை உணர்த்தி நின்றது. Pee இதன் கண் "நீணிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்குக் கண்கள் சோர வாழ்த்தி நின்று" என்பதனால் ஆனந்தமுறு தல் என்னும் பதிகப் பொருள் லப்படுமாறு காண்க. 10
அச்சப்பத்து 1135 மனம் கசிந்து நெகிழ்ந்து உருகி ; வாள் நிலா கண்கள் சோர வாழ்த்தி நின்று ஏத்த மாட்டா -ஒளி பொருந்திய கண்களினின்று ஆனந்த நீர் சொரிய வாழ்த்திக் கொண்டு நின்று புகழ மாட்டாத ; ஆண் அலாத வரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாதவரைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . வளைதலில்லாத அம்பிற்கும் அஞ்சேன் ; கூற்றுவனது வெகுளிக்கும் அஞ்சேன் ; ஆனால் இறைவனை மனத்தினால் நினைந்து மனம் கசிந்து நெகிழ்ந்து உருகிக் கண்களினின்றும் ஆனந்த நீர் சோர வாழ்த்தி நின்று புகழமாட்டாத ஆணலாதவரைக் கண்டால் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . கோண் - வளைவு . கோண் இலா - வளைவை இலாததாயினும் அது கொடிது என்பதனை கணைகொடிது யாழ்கோடு செவ்விது ( குறள் 279 ) என்பதனாலுமறிக . நீண்ட மதி என்றது நீட்சிமிக்க பிறைச்சந்தி ரன் என்றவாறு . வாள் - ஒளி . சோர என்ற வினையினால் நீர் சொரிய என உரைக்கப்பட்டது . மனம் கசிந்து நெகிழ்ந்து உருகுதலும் கண்க ளில் நீர் சோருதலும் அன்பின் மிகுதியால் நிகழ்வனவாகும் . நின்று என்றது நினைந்து நைந்து உருகி சோர வாழ்த்தி நிற்கும் நிலை பெற்று என்றவாறு மாட்டாத என்பது ஈறு கெட்டது . பொறிகளைப் புலன் வழிச் செல்லாது தடுத்து இறைவனை மனம் ஒருமித்து வழிபடுதலும் ஆண்மையாதலின் அஃதில்லாதவரை ஆணலாதவர் என்றார் . பிறன்மனை நோக்காத பேராண்மை என்றார் வள்ளுவரும் . ஏத்து தல் - புகழ்தலாயினும் இங்கே அது புகழ்ந்து வழிபடுதலை உணர்த்தி நின்றது . Pee இதன் கண் நீணிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்குக் கண்கள் சோர வாழ்த்தி நின்று என்பதனால் ஆனந்தமுறு தல் என்னும் பதிகப் பொருள் லப்படுமாறு காண்க . 10