திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் ப-ரை; தென்னன் நல் நாட்டு இறைவன் - பாண்டியனது நல்ல நாட்டிலேயுள்ள இறைவன், எக்காலத்துள்ளும் இக்காலம் கிளர்கின்ற காலம் - மற்றைக் காலங்களுள்ளும் இக்காலம் வெளிப் பட்டு அருள் செய்கின்ற காலமாகும். ஒள் அறிவு கதிர் வாள் உறை கழித்து - அவ்விறைவன் சிறந்த ஞானமாகிய ஒளிபொருந்திய வாளை உறையினின்றும் நீக்கிக் கையில் தாங்கிக்கொண்டு, ஆனந்த மா கடவி - பேரின்பமாகிய குதிரையைச் செலுத்திச் சென்று, எதிர்ந்தார் பிறப்பை இருநிலத்தே புரள எறியும் - தனது முன்னிலையை அடைந்த பக்குவான்மாக்களது பிறவிகளைப் பெரிய நிலவுலகத்தில் வீழ்ந்து புரண்டு போம்படி வெட்டி வீழ்த்துவான். நல்லவர் செறியும் பிறவிக்கு செல்லன்மின் - ஆதலால் நல்லவர் களே இடைவிடாது நெருங்கி வருகின்ற பிறவித் துன்பத்திற்குச் செல்லாது இறைவன் திருவருள் வழியே செல்வீர்களாக. 1141 தென்னனது நல்ல நாட்டிலுள்ள இறைவன் எக்காலத்துள்ளும் இக்காலம் வெளிப்பட்டு அருள் செய்கின்ற காலமாகும். அவ்விறை வன் ஞானவாளை உறையினின்றும் நீக்கிக் கையில் தாங்கிக் கொண்டு ஆனந்தமாகிய குதிரையைச் செலுத்திச் சென்று தனது முன்னிலையை அடைந்த பக்குவான்மாக்களது பிறவிகளை நிலவுலகத்தில் வீழ்ந்து புரண்டுபோம்படி வெட்டி வீழ்த்துவான். ஆதலால் நல்லவர்களே செறிந்து வருகின்ற பிறவித் துன்ப வழியிலே செல்லாமல் இறைவன் அருள் வழியிலே செல்வீர்களாக என்பதாம். செறியும் பிறவிக்குச் செல்லன்மின் என இயையும். நல்லவர் அண்மைவிளி. நன்னாட்டிறைவன் - "அவுணர் நன்னாட்டிறைவன் ஆகி" (சிவபெரு.மும்மணி. 16) என வருவன காண்க. இறைவன் தகுதி யுடைய உயிர்களுக்கு எக்காலத்தும் இரங்கி அருள் செய்பவனாயி னும் தமக்கு அருள் செய்த இக்காலம் விசேடமுடையதென்பார், 'எக்காலத்துள்ளும் இக்காலம் இறைவன் கிளர்கின்ற காலம்' என் றார். இக்காலம் என அடிகள் சுட்டியது இறைவன் தம்மை ஆட் கொண்ட காலத்தின் அண்மைக் காலத்தையாகும். ஒள் அறிவு கதிர் வாள் என இயைத்து, சிறந்த ஞானமாகிய ஒளி பொருந்திய வாள் எனப் பொருள் கொள்க. சிறந்த ஞானத்தினை வாளாக உருவகஞ் செய்தமையால் 'உறை கழித்து' என்றும் 'எறியும்' என்றும் னார். ஓள் அறிவுக் கதிர் வாளை வடநூலார் ஞானகட்கம் என்டர் எதிர்ந்தார் பிறப்பை இருநிலத்தே புரள எறியும் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. பிறப்பு இருநிலத்தே புரள எறி யும் என்றது பிருதுவி முதலிய பூதங்களின் சம்பந்தத்தால் ஆவது பிறப்பாதலின் அப்பிறப்பு எறிந்த வழி பிருதுவி முதலியவற்றேடு கலப்பே என்பதனை உணர்த்தியதாகும்.
திருப்பாண்டிப்பதிகம் - ரை ; தென்னன் நல் நாட்டு இறைவன் - பாண்டியனது நல்ல நாட்டிலேயுள்ள இறைவன் எக்காலத்துள்ளும் இக்காலம் கிளர்கின்ற காலம் - மற்றைக் காலங்களுள்ளும் இக்காலம் வெளிப் பட்டு அருள் செய்கின்ற காலமாகும் . ஒள் அறிவு கதிர் வாள் உறை கழித்து - அவ்விறைவன் சிறந்த ஞானமாகிய ஒளிபொருந்திய வாளை உறையினின்றும் நீக்கிக் கையில் தாங்கிக்கொண்டு ஆனந்த மா கடவி - பேரின்பமாகிய குதிரையைச் செலுத்திச் சென்று எதிர்ந்தார் பிறப்பை இருநிலத்தே புரள எறியும் - தனது முன்னிலையை அடைந்த பக்குவான்மாக்களது பிறவிகளைப் பெரிய நிலவுலகத்தில் வீழ்ந்து புரண்டு போம்படி வெட்டி வீழ்த்துவான் . நல்லவர் செறியும் பிறவிக்கு செல்லன்மின் - ஆதலால் நல்லவர் களே இடைவிடாது நெருங்கி வருகின்ற பிறவித் துன்பத்திற்குச் செல்லாது இறைவன் திருவருள் வழியே செல்வீர்களாக . 1141 தென்னனது நல்ல நாட்டிலுள்ள இறைவன் எக்காலத்துள்ளும் இக்காலம் வெளிப்பட்டு அருள் செய்கின்ற காலமாகும் . அவ்விறை வன் ஞானவாளை உறையினின்றும் நீக்கிக் கையில் தாங்கிக் கொண்டு ஆனந்தமாகிய குதிரையைச் செலுத்திச் சென்று தனது முன்னிலையை அடைந்த பக்குவான்மாக்களது பிறவிகளை நிலவுலகத்தில் வீழ்ந்து புரண்டுபோம்படி வெட்டி வீழ்த்துவான் . ஆதலால் நல்லவர்களே செறிந்து வருகின்ற பிறவித் துன்ப வழியிலே செல்லாமல் இறைவன் அருள் வழியிலே செல்வீர்களாக என்பதாம் . செறியும் பிறவிக்குச் செல்லன்மின் என இயையும் . நல்லவர் அண்மைவிளி . நன்னாட்டிறைவன் - அவுணர் நன்னாட்டிறைவன் ஆகி ( சிவபெரு.மும்மணி . 16 ) என வருவன காண்க . இறைவன் தகுதி யுடைய உயிர்களுக்கு எக்காலத்தும் இரங்கி அருள் செய்பவனாயி னும் தமக்கு அருள் செய்த இக்காலம் விசேடமுடையதென்பார் ' எக்காலத்துள்ளும் இக்காலம் இறைவன் கிளர்கின்ற காலம் ' என் றார் . இக்காலம் என அடிகள் சுட்டியது இறைவன் தம்மை ஆட் கொண்ட காலத்தின் அண்மைக் காலத்தையாகும் . ஒள் அறிவு கதிர் வாள் என இயைத்து சிறந்த ஞானமாகிய ஒளி பொருந்திய வாள் எனப் பொருள் கொள்க . சிறந்த ஞானத்தினை வாளாக உருவகஞ் செய்தமையால் ' உறை கழித்து ' என்றும் ' எறியும் ' என்றும் னார் . ஓள் அறிவுக் கதிர் வாளை வடநூலார் ஞானகட்கம் என்டர் எதிர்ந்தார் பிறப்பை இருநிலத்தே புரள எறியும் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . பிறப்பு இருநிலத்தே புரள எறி யும் என்றது பிருதுவி முதலிய பூதங்களின் சம்பந்தத்தால் ஆவது பிறப்பாதலின் அப்பிறப்பு எறிந்த வழி பிருதுவி முதலியவற்றேடு கலப்பே என்பதனை உணர்த்தியதாகும் .