திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் 1145 என்னும் திருக்குறளின்படி அவ்விறைவனைப்போல ஐம்பொறிகளை யும் அடக்க விரும்பினால் அவ்விறைவன் திருவடி விரும்புங்கள் என்று செவியறிவுறுப்பாராயினார். பாண்டியனார் என்பதனை இறைவனுக்குத் திருப்பெயராக வழங் குதல் அடிகளின் மரபாகும். "தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை" (அம் 10) "பந்தமறுத்தென்னை யாண்டுகொண்ட பாண் டிப் பிரான்" (பூவல்லி 2) 'பாண்டிப் பிரான்' (பாண்டி 5) என அடி கள் அருளியவாறுங் காண்க. பரிசு - பரிசில். இதுவே எனச் சுட்டியது இறைவன் அடியார்களுக்கு அருளுகின்ற வீடுபேறாகிய திருவடியையே யாகும். இதன்கண், 'இருள் கெட எப்பொருளும் விளங்க விரும்புமின் தாள் பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திப் பரிசு இது" என்பத னால் சிவானந்த விளைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 530 மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறு மிப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காய வரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. ப - ரை; மாய வன பரி மேல்கொண்டு - தென்னவன் மாயமாகிய அழகிய குதிரைமீது எழுந்தருளி வந்து, மற்றவர் கைக்கொளலும் மற்றையோர்களைத் தன்வசப் படுத்துதலும், இப்பிறப்பு என்னும் பகைகள் போய் அறும் - இப்பிறப்பிற்கு ஏதுவாகிய உட்பகைகள் ஆறும் விட்டு நீங்கும், புகுந்தவருக்கு - தன்னைச் சேர்ந்தவருக்கு. ஆய அரு பெருசீர் உடை தன் அருளே அருளும் - வீடுபேற்றிற்குச் சாதன மாய அரிய பெரிய சிறப்பினையுடைய தன்னுடைய திருவருளையே கொடுத்தருளுவான்; ஆதலால், சேய நெடு கொடை தென்னவன் சே அடி சென்று சேர்மின்கள் - அவ்வருளையே துணையாகக் கொண்டு செப்பமாகிய பெரிய வீடுபேற்றுக் கொடையையுடைய பாண்டிப் பிரானது சிவந்த திருவடிகளைச் சென்று பற்றுவீர்களாக. 6 தென்னவன் அழகிய குதிரைமீது எழுந்தருளி வந்து மற்றையோ ரைக் கைக்கொளலும் இப்பிறப்பிற்கு ஏதுவாகிய உட்பகைகள் விட்டு நீங்கும், தன்னைச் சேர்ந்தவருக்கு வீடுபேற்றினுக்குச் சாதனமா
திருப்பாண்டிப்பதிகம் 1145 என்னும் திருக்குறளின்படி அவ்விறைவனைப்போல ஐம்பொறிகளை யும் அடக்க விரும்பினால் அவ்விறைவன் திருவடி விரும்புங்கள் என்று செவியறிவுறுப்பாராயினார் . பாண்டியனார் என்பதனை இறைவனுக்குத் திருப்பெயராக வழங் குதல் அடிகளின் மரபாகும் . தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை ( அம் 10 ) பந்தமறுத்தென்னை யாண்டுகொண்ட பாண் டிப் பிரான் ( பூவல்லி 2 ) ' பாண்டிப் பிரான் ' ( பாண்டி 5 ) என அடி கள் அருளியவாறுங் காண்க . பரிசு - பரிசில் . இதுவே எனச் சுட்டியது இறைவன் அடியார்களுக்கு அருளுகின்ற வீடுபேறாகிய திருவடியையே யாகும் . இதன்கண் ' இருள் கெட எப்பொருளும் விளங்க விரும்புமின் தாள் பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திப் பரிசு இது என்பத னால் சிவானந்த விளைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 530 மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறு மிப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காய வரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே . - ரை ; மாய வன பரி மேல்கொண்டு - தென்னவன் மாயமாகிய அழகிய குதிரைமீது எழுந்தருளி வந்து மற்றவர் கைக்கொளலும் மற்றையோர்களைத் தன்வசப் படுத்துதலும் இப்பிறப்பு என்னும் பகைகள் போய் அறும் - இப்பிறப்பிற்கு ஏதுவாகிய உட்பகைகள் ஆறும் விட்டு நீங்கும் புகுந்தவருக்கு - தன்னைச் சேர்ந்தவருக்கு . ஆய அரு பெருசீர் உடை தன் அருளே அருளும் - வீடுபேற்றிற்குச் சாதன மாய அரிய பெரிய சிறப்பினையுடைய தன்னுடைய திருவருளையே கொடுத்தருளுவான் ; ஆதலால் சேய நெடு கொடை தென்னவன் சே அடி சென்று சேர்மின்கள் - அவ்வருளையே துணையாகக் கொண்டு செப்பமாகிய பெரிய வீடுபேற்றுக் கொடையையுடைய பாண்டிப் பிரானது சிவந்த திருவடிகளைச் சென்று பற்றுவீர்களாக . 6 தென்னவன் அழகிய குதிரைமீது எழுந்தருளி வந்து மற்றையோ ரைக் கைக்கொளலும் இப்பிறப்பிற்கு ஏதுவாகிய உட்பகைகள் விட்டு நீங்கும் தன்னைச் சேர்ந்தவருக்கு வீடுபேற்றினுக்குச் சாதனமா