திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் தமது அறிவு கவரப்பெற்ற பூங்கொடி போன்ற மங்கையர் மர இயல் மேல் கொண்டு தம்வயமிழந்து தாம் பிறிதொன்றினையும் அறியாது பரவசமாயினர். தீவினைகள் மறுபிறப்புக்குக் காரணமாதலின் தீவினைபிறப்பு என் பது - தீவினையாலுளதாகும் பிறப்பு என உருபும் பயனும் உடன் தொக்கதொகை. பிறப்பை முந்நீராக உருவகித்தார், பிறப்பு கட லின் அலைபோல இடையீடின்றி வருதலின். யாற்று நீரும்,ஊற்றுநீரும் மழைநீரு முடைமையால் கடற்கு முந்நீரென்று பெயராயிற்று. இனி மண்ணைப் படைத்தலும். மண்ணைக் காத்தலும், மண்ணை அழித்தலு மாகிய முச்செய்கையையுடைமையால் கடற்கு முந்நீரென்று பெய ராயிற்று எனினுமாம். பரம் -மேலான பொருள். பாண்டியனார் புரவியின் மேல் வர அதனைத் தரிசித்து அத் திருக்கோலத்தினால் தம் அறிவு கவரப்பட்ட மங்கையர் என்பார், "பாண்டியனார், புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார்" என்றார். பூங்கொடி யார் என்றது இங்கே மெய்யடியாரைக் குறித்து நின்றது. தம்மை மறந்தமை பற்றி 'மரவியல் மேல்கொண்டு' என்றார். தம்மையும்- உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. "புந்தி கொளப்பட்ட பூங் கொடியார், மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே" என்பது மானிடப் பெண்டிர் தெய்வத்தை நயந்த பக்கம் என்னும் துறை பொருந்த அமைந்துள்ளது. இதன்கண் 'பாண்டியனார், புரவியின் மேல்வரப் புந்தி கொளப் பட்ட பூங்கொடியார், மரவியன் மேல்கொண்டு தம்மையும் தாமறி யார் மறந்தே' என்பதனால் சிவானந்த விளைவு என்னும் பதிகப்பொ ருள் புலப்படுதல் காண்க. 533 200 கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும் வென் றிருந்தழகால் வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானுமோர் மீனவன்பால் ஏற்றுவந் தாருபி ருண்ட திறலொற்றைச் சேயகனே 1149 தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. 9 ப - ரை : கூற்றை வென்றிருந்து - கூற்றுவனை வெற்றி கொண்டு, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்றிருந்து -- அப்படியே ஐம்பொறிக் ளாகிய அரசர்களையும் வெற்றி கொண்டு, தானும் பெருந்தேவியும் * "முக்கணான் முயக்கம் வேட்ட மக்கட் பெண்டிர் மலிவுரைத் தன்று" (பு. வெ.மா.237)
திருப்பாண்டிப்பதிகம் தமது அறிவு கவரப்பெற்ற பூங்கொடி போன்ற மங்கையர் மர இயல் மேல் கொண்டு தம்வயமிழந்து தாம் பிறிதொன்றினையும் அறியாது பரவசமாயினர் . தீவினைகள் மறுபிறப்புக்குக் காரணமாதலின் தீவினைபிறப்பு என் பது - தீவினையாலுளதாகும் பிறப்பு என உருபும் பயனும் உடன் தொக்கதொகை . பிறப்பை முந்நீராக உருவகித்தார் பிறப்பு கட லின் அலைபோல இடையீடின்றி வருதலின் . யாற்று நீரும் ஊற்றுநீரும் மழைநீரு முடைமையால் கடற்கு முந்நீரென்று பெயராயிற்று . இனி மண்ணைப் படைத்தலும் . மண்ணைக் காத்தலும் மண்ணை அழித்தலு மாகிய முச்செய்கையையுடைமையால் கடற்கு முந்நீரென்று பெய ராயிற்று எனினுமாம் . பரம் -மேலான பொருள் . பாண்டியனார் புரவியின் மேல் வர அதனைத் தரிசித்து அத் திருக்கோலத்தினால் தம் அறிவு கவரப்பட்ட மங்கையர் என்பார் பாண்டியனார் புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் என்றார் . பூங்கொடி யார் என்றது இங்கே மெய்யடியாரைக் குறித்து நின்றது . தம்மை மறந்தமை பற்றி ' மரவியல் மேல்கொண்டு ' என்றார் . தம்மையும் உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை . புந்தி கொளப்பட்ட பூங் கொடியார் மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே என்பது மானிடப் பெண்டிர் தெய்வத்தை நயந்த பக்கம் என்னும் துறை பொருந்த அமைந்துள்ளது . இதன்கண் ' பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்தி கொளப் பட்ட பூங்கொடியார் மரவியன் மேல்கொண்டு தம்மையும் தாமறி யார் மறந்தே ' என்பதனால் சிவானந்த விளைவு என்னும் பதிகப்பொ ருள் புலப்படுதல் காண்க . 533 200 கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும் வென் றிருந்தழகால் வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானுமோர் மீனவன்பால் ஏற்றுவந் தாருபி ருண்ட திறலொற்றைச் சேயகனே 1149 தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே . 9 - ரை : கூற்றை வென்றிருந்து - கூற்றுவனை வெற்றி கொண்டு ஆங்கு ஐவர் கோக்களையும் வென்றிருந்து -- அப்படியே ஐம்பொறிக் ளாகிய அரசர்களையும் வெற்றி கொண்டு தானும் பெருந்தேவியும் * முக்கணான் முயக்கம் வேட்ட மக்கட் பெண்டிர் மலிவுரைத் தன்று ( பு . வெ.மா .237 )