திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் "பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடையான்'' 1151 திருமந்திரம். 2636 என்பதனாலுமறிக. இருந்து என்பதனைக் கூற்றை வென்று என்பதனோ டும் இயைத்துப் பகுதிப்பொருள் விகுதியாகக் கொள்க. அழகால்- அழகொடு. வீற்றிருத்தல் - பிறர் எவர்க்குமில்லாத பெருமையொடு பொருந்தியிருத்தல், இறைவன் தானும் பெருந்தேவியுமாக அழகி னோடு வீற்றிருப்பது அன்பர்களுக்கு அருள்செய்யும் பொருட்டா கும். வீற்றிருந்தான் வினையாலணையும் பெயராய் இறைவனை உணர்த்தியது. ஒர் மீனவன்பால் ஏற்றுவந்து என்றது ஒப்பற்ற அரி மர்த்தன பாண்டியனுக்கு முன்னே ஒரு குதிரை வியாபாரிபோல எதிர்ப்பட்டு வந்தமையைக் குறித்தது. ஆருயிர் உண்ட என்றது அப்பாண்டிய மன்னனது உயிரின் இயல்பாகிய ஆன்ம போதத்தைக் கெடுத்த என்றவாறு. சேவகன் - வீரன். சேவகனுமாயினான் என வுரைக்க். தேற்றமில்லாதவர் என்பது இறைவன் பாண்டியன்பால் வந்து அவன் ஆன்ம போதத்தைத் தன்னுட்கொண்டு சிவபோதத் தினை நல்கிய வீரனுமாயினான் என்பதனைத் தெளிந்தறிய மாட்டாத வர்களே என விளிப் பொருளில் வந்தது. தேற்றமிலாதவர்-அண் மை விளி. வீற்றிருந்தான் சேவகன்; அவன் சேவடி சேர்மின்கள் என முடிக்க. இதன்கண், வீற்றிருந்தானாகிய இறைவனே மீனவன்பால் ஏற்று வந் தாருயிருண்ட திறலொற்றைச் சேவகனுமாயினான் என்றதனால் சிவானந்த விளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 10
திருப்பாண்டிப்பதிகம் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடையான் ' ' 1151 திருமந்திரம் . 2636 என்பதனாலுமறிக . இருந்து என்பதனைக் கூற்றை வென்று என்பதனோ டும் இயைத்துப் பகுதிப்பொருள் விகுதியாகக் கொள்க . அழகால் அழகொடு . வீற்றிருத்தல் - பிறர் எவர்க்குமில்லாத பெருமையொடு பொருந்தியிருத்தல் இறைவன் தானும் பெருந்தேவியுமாக அழகி னோடு வீற்றிருப்பது அன்பர்களுக்கு அருள்செய்யும் பொருட்டா கும் . வீற்றிருந்தான் வினையாலணையும் பெயராய் இறைவனை உணர்த்தியது . ஒர் மீனவன்பால் ஏற்றுவந்து என்றது ஒப்பற்ற அரி மர்த்தன பாண்டியனுக்கு முன்னே ஒரு குதிரை வியாபாரிபோல எதிர்ப்பட்டு வந்தமையைக் குறித்தது . ஆருயிர் உண்ட என்றது அப்பாண்டிய மன்னனது உயிரின் இயல்பாகிய ஆன்ம போதத்தைக் கெடுத்த என்றவாறு . சேவகன் - வீரன் . சேவகனுமாயினான் என வுரைக்க் . தேற்றமில்லாதவர் என்பது இறைவன் பாண்டியன்பால் வந்து அவன் ஆன்ம போதத்தைத் தன்னுட்கொண்டு சிவபோதத் தினை நல்கிய வீரனுமாயினான் என்பதனைத் தெளிந்தறிய மாட்டாத வர்களே என விளிப் பொருளில் வந்தது . தேற்றமிலாதவர் - அண் மை விளி . வீற்றிருந்தான் சேவகன் ; அவன் சேவடி சேர்மின்கள் என முடிக்க . இதன்கண் வீற்றிருந்தானாகிய இறைவனே மீனவன்பால் ஏற்று வந் தாருயிருண்ட திறலொற்றைச் சேவகனுமாயினான் என்றதனால் சிவானந்த விளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 10